கொரோனா பாதிப்பு : மும்பையில் மரண விகிதம் திடீர் அதிகரிப்பு ஏன்?
Coronavirus numbers explained: டெல்லியின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட, மும்பையில் மட்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது.
Coronavirus numbers explained: டெல்லியின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட, மும்பையில் மட்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது.
தலைநகர் டெல்லியில் குறிப்பிட்ட அளவிலான பொதுபோக்குவரத்துக்கு அனுமதி, பல்வேறு நடவடிக்கைகளுக்கு அனுமதி உள்ளிட்ட காரணங்களால், கடந்த ஒருவாரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
மே 31ம் தேதி ஒரேநாளில் புதிதாக 1295 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், தொடர்ந்து நான்காவது நாளாக, ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisment
Advertisements
கடந்த ஒருவாரத்தில் மட்டும் புதிதாக கிட்டத்தட்ட 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இதில் குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால், கடந்த சில வாரங்களில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு ஏற்ப, மரணங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளது. மே 15ம் தேதி, 123 என்ற அளவில் இருந்த மரணடைந்தவர்களின் எண்ணிக்கை, தற்போது 473 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் அதிக மரணங்கள் நிகழ்ந்துள்ள நகரங்களின் பட்டியலில் மும்பை முதலிடத்திலும், டெல்லி இரண்டாம் இடத்திலும் உள்ளது. மும்பையில் மருத்துவ கட்டமைப்பு பற்றாக்குறை நிலவிவருவதால் அங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. ஆனால், டெல்லியில் அந்த குறைபாடு இல்லாத நிலையில், மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் பெரிய பெரிய வாகன நிறுத்தங்கள் எல்லாம், கொரோனா சிகிச்சை வார்டுகளாகவும், தனிமை வார்டுகளாகவும் மாற்றம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
டெல்லியின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட, மும்பையில் மட்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது. அங்கு டெல்லியில் உள்ளதைப்போன்று மருத்துவமனை வசதிகள் அதிகளவில் இல்லாததே, மரணங்கள் அதிகரித்ததற்கான காரணங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு ஐந்தாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பல தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், வரும் நாட்களில் கொரோனா பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா அதிகரித்ததற்கு அண்டை மாநிலங்களான ஹரியானாவே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனனில், கடந்த சில நாட்களில், டெல்லியை ஒட்டியுள்ள ஹரியானா மாநிலத்தின் குர்கிராம், பரிதாபாத், சோன்பட் மாவட்டங்களில் புதிதாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது பொதுப்போக்குவரத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாலேயே, டெல்லியில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 31ம் தேதி மட்டும் புதிதாக 8500 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், தேசிய அளவில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 1.9 லட்சத்தை தாண்டியுள்ளது. இவர்களில் 91 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத் மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. இந்த மாநிலங்களில் நாள்தோறும் 70 சதவீத புதிதாக தொற்றுகள் கண்டறியப்பட்டு வருகின்றன. இதற்கு அடுத்தபடியாக, அசாம், ஹரியானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பஞ்சாப், குஜராத், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில், பாதிப்பு இரட்டிப்பு விகிதம் 25 நாட்களுக்கு மேற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil