கொரோனா பாதிப்பு : தொற்று எண்ணிக்கை 8ம் தேதி திடீரென குறைந்தது ஏன்?

India Coronavirus (Covid-19) Cases Numbers: கொரோனா பாதிப்பு குறித்த உண்மையான நிலையை கண்டறிய வேண்டுமென்றால், இதுபோன்ற சோதனையை இன்னும் சில தினங்களுக்கு மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

By: June 9, 2020, 4:06:34 PM

இந்தியாவின் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில், ஜூன் 8ம் தேதி கொரோனா பாதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து காணப்பட்டது, இதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், 7ம் தேதி, புதிதாக 600க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருந்த நிலையில், 8ம் தேதி 198 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருந்தது. டெல்லியிலும், குறைந்த அளவிலேயே தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அபரிமிதமாக வளர்ச்சி அடைந்து வந்த நிலையில், இப்போது திடீரென்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

தேசிய அளவில், 7ம் தேதி புதிதாக 8,605 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருந்த நிலையில், 8ம் தேதி 7,837 பேருக்கு மட்டுமே புதிதாக தொற்று கண்டறியப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 768 பேர் வித்தியாசம் இருக்கும் நிலையில், அது எந்த மாநிலத்தில் பாதிப்பு குறைந்தது என்பதை அறிவதில் நிபுணர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

 

கடந்த சில நாட்களாக தேசிய அளவிலான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் 10 ஆயிரத்தை கடந்துவந்த நிலையில், அதற்கு முன்னதாக 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இருந்தது. ஆனால், 8ம் தேதி புதிதாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,600 என்ற அளவிலேயே உள்ளது.

இந்த வேறுபாடுகள் மே மாத பிற்பகுதியில் இருந்து நிகழ்ந்து வருகிறது. ஏனெனில், தேசிய ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு மாநிலத்தவர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பி வருகின்றனர். இவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பின், அவர்கள் எந்த மாநிலத்தின் கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படுவர் என்ற குழப்பம் நீடித்து வருகிறது. அவர்கள் தற்போது இருக்கும் மாநிலமா, அல்லது கொரோனா சோதனை செய்யப்படும் மாநிலமா அல்லது அவர்களது சொந்த மாநிலமா என்பதில் பெரும்குழப்பம் நிலவி வருகிறது. கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது திடீரென சரிவு ஏற்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில், நாள் ஒன்றுக்கு 1300 முதல் 1500 வரை பாதிப்புகள் கண்டறியப்பட்டு வந்த நிலையில், 8ம்தேதி ஆயிரம் பேருக்கு மட்டுமே பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 7ம் தேதி, ஜம்மு காஷ்மீரில், திடீரென்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களை தவிர, மற்ற பகுதிகளில் தற்போது சகஜநிலை திரும்பிவிட்டது என்றே கூறவேண்டும். பொருளாதார நடவடிக்கைகள் துவங்கிவிட்ட படியால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

அசாம், திரிபுரா, கேரளா, கோவா, உத்தர்காண்ட், மேற்குவங்கம், ஜார்க்கண்ட், பீகார், ஜம்மு காஷ்மீர், ஆந்திர பிரதேசம், கர்நாடகா, நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வரும்நிலையில், அது தேசிய அளவிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது.

கொரோனா பாதிப்பு குறித்த உண்மையான நிலையை கண்டறிய வேண்டுமென்றால், இதுபோன்ற சோதனையை இன்னும் சில தினங்களுக்கு மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க – India coronavirus numbers explained: Why the numbers came down on Monday

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Corona virus lockdown covid pandemic maharashta corona infection migrant workers

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X