Amitabh Sinha
தேசிய அளவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க காரணமாக இருந்த மகாராஷ்டிரா மாநிலத்தில், கடந்த சில நாட்களாக, கொரோனா பாதிப்பு பரவல் விகிதம் குறைந்த அளவிலேயே உள்ளது.ஆனால், தமிழ்நாடு மற்றும் டெல்லியில் இந்த விகிதம் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்த 3 மாநிலங்களினால், நாட்டின் கொரோனா பாதிப்பு விகிதம் 56 முதல் 58 சதவீதம் என்ற அளவிலேயே தொடர்ந்து நீடித்து வருகிறது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
தமிழ்நாடு மற்றும் டெல்லி மாநிலங்களில், கடந்த சில நாட்களாக, தினந்தோறும் கிட்டத்தட்ட 2 ஆயிரம் பேருக்கு புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மகாராஷ்டிராவில் பாதிப்பு குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அங்கு 3 ஆயிரம் முதல் 3.500 வரை புதிய தொற்றுக்கள் கண்டறியப்பட்டு வருகின்றன.
நாட்டில் அதிக கொரோனா பாதிப்பு கொண்ட மாநிலங்களின் பட்டியலில் இருந்து ராஜஸ்தான் மற்றும் மத்தியபிரதேச மாநிலங்கள் விலகியுள்ளன. அங்கு புதிய பாதிப்புகள் கணிசமாக குறைந்துள்ளது. இந்த பட்டியலில், உத்தரபிரதேசம் மற்றும் மேற்குவங்க மாநிலங்கள் அதிக பாதிப்புகளுடன் பட்டியலில் முன்னேறியுள்ளன. கர்நாடகா மற்றும் ஹரியானா மாநிலங்கள், இந்த பட்டியலில் புதிதாக இடம்பிடித்துள்ளன. பட்டியலின் கடைசி இடங்களில் பீகார், ஆந்திரபிரதேச மாநிலங்கள் உள்ளன.
பீகார், அசாம், கேரளா, திரிபுரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்துவந்த நிலையில், தற்போது மீண்டும் அங்கு அதிக கொரோனா பாதிப்பு பதிவாக துவங்கியுள்ளது.
பீகார், கேரளா, ஒடிசா மாநிலங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் 4 சதவீதத்திற்கும் குறைவாகவும், அசாம் மாநிலத்தில் 10 சதவீதத்திற்கும் மேல் இருந்த பாதிப்பு விகிதம் தற்போது 7 சதவீதமாக குறைந்துள்ளது. திரிபுரா மாநிலத்தில் பாதிப்பு விகிதம் 4.3 சதவீதமாக உள்ளது.
சட்டீஸ்கர், உத்தர்காண்ட் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் முன்னர் அதிகபாதிப்புகள் இருந்தபோதிலும் தற்போது 3 மாநிலங்களையும் சேர்த்து 2 ஆயிரம் என்ற அளவிற்கே பாதிப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 14ம் தேதி, தேசிய அளவில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், நாட்டில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 3.32 லட்சமாக அதிகரித்துள்ளது. புதிய தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், பரவல் விகிதம் கணிசமாக குறைந்துவருவது குறிப்பிடத்தக்கது. ஜூன் 14ம் தேதி நிலவரப்படி, தொற்று பரவல் விகிதம் 3.73 சதவீதமாக உள்ளது.
ஜூன் 14ம் தேதி, லடாக் மாநிலத்தில் புதிதாக 112 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இங்கு தொடர்ந்து 3வது நாளாக நாள் ஒன்றுக்கு 100க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. லடாக்கில், தற்போதைய நிலையில், 549 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சிக்கிம் மாநிலத்தில் அதிக பாதிப்புகள் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது அங்கு நிலைமை சீராகியுள்ளது. 12ம் தேதி புதிதாக 5 பேருக்கு கண்டறியப்பட்ட நிலையில், 13 மற்றும் 14ம் தேதிகளில் அங்கு புதிய பாதிப்புகள் கண்டறியப்படவில்லை. அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 68 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.