ஏப்ரல் மாதத்தில் டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தனைகள் திடீர் சரிவு – என்ன காரணம்?

India digital payments : IMPS முறையில் 40 சதவீதம் சரிவடைந்து, மார்ச் மாதத்தில், 2.01 லட்சம் கோடியாக இருந்த பணபரிவர்த்தனை, ஏப்ரல் மாதத்தில், ரூ. 1.21 லட்சம் கோடியாக சரிவடைந்துள்ளது.

By: June 16, 2020, 7:47:06 PM

கொரோனா பரவலை தடுக்க தேசிய அளவிலான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாட்டில் உள்ள அனைத்து துறைகளிலும், கடந்த ஏப்ரல் மாதத்தில் பணப்பரிவர்த்தனைகள் கடுமையாக சரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தின் பணப்பரிவர்த்தனை அளவுகளுடன், தொழில்துறை உற்பத்தி தரவுகளும் வெளியிடப்பட்டது. இந்த மாதத்தில், தொழில் உற்பத்தியும் சரிவடைந்து 55.5 சதவீதமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, மார்ச் மாதத்தை ஒப்பிடும்போது ஏப்ரல் மாதத்தில், எல்லாவிதமான பணபரிவர்த்தனைகளின் அளவும், 46 சதவீதம் சரிவடைந்துள்ளது. மத்திய அரசு, ஆதார் எண் உதவியுடன் செயல்படுத்தி வரும் பயனாளர்களுக்கு நேரடி மானியம் வழங்கும் திட்டத்தினால், இந்த சரிவு நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனாளர்களுக்கு நேரடி மானியம், வங்கி கணக்குகள், காசோலைகள், NEFT and RTGS, ஏடிஎம் பரிவர்த்தனைகளின் மூலமாக வழங்கப்படுவதாகவும், இதன்காரணமாக, கடந்த மார்ச் மாதத்தை ஒப்பிடும்போது ஏப்ரல் மாதத்தில் இதன் சதவீதம் 26 சதவீதத்திலிருந்து 71 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது சதவீதத்தின் அடிப்படையில் 138 சதவீதம் அதிகம் ஆகும்.

காசோலைகளின் மூலமாக பயனாளர்களுக்கு நேரடி மானியம் வழங்கப்பட்ட விகிதத்தில் 71 சதவீதம் சரிவு கண்டுள்ளது. மார்ச் மாதத்தில், காசோலைகளின் மூலம், ரூ.5365 லட்சம் கோடி வழங்கப்பட்டு இருந்தது, ஆனால், ஏப்ரல் மாதத்தில், ரூ.1.63 லட்சம் கோடி அளவிற்கே இம்முறையில் மானியம் வழங்கப்பட். 64.43 டிருந்தது.

இந்திய ரிசர்வ் வங்கியால், நிர்வகிக்கப்படும் Real Time Gross Settlement (RTGS) சேவையினாலேயே, நாட்டில் அதிக மதிப்பிலான பணப்பரிவர்த்தனைகள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டு வருகின்றன. மார்ச் மாதத்தில், ரூ.120.47 லட்சம் கோடிகள் என்றளவில் RTGS முறையில் பணப்பரிமாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில், ஏப்ரல் மாதத்தில், இது 46.5 சதவீதம் சரிவடைந்து ரூ.64.43 லட்சம் கோடிகளாக குறைந்துள்ளது.
National Electronic Fund Transfer (NEFT) முறையிலான பணபரிவர்த்தனையும் 42.7 சதவீதம் சரிவடைந்துள்ளது. மார்ச் மாதத்தில், ரூ.22.83 லட்சம் கோடிகளாக இருந்த பணப்பரிமாற்றம், ஏப்ரல் மாதத்தில், ரூ. 13.06 லட்சம் கோடிகளாக சரிவடைந்துள்ளது.

RTGS and NEFT முறைகளினாலேயே, நாட்டின் 90 சதவீத பணப்பரிமாற்ற மற்றும் பரிவர்த்தனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
RTGS முறையினால் அனுப்பப்படும் பணம், உடனடியாகவும், NEFT முறையினால் அனுப்பப்படும் பணம், 30 நிமிட இடைவெளியிலும் பயனாளர்களுக்கு சென்றடைவது குறிப்பிடத்தக்கது.

ஏடிஎம் பணம் எடுப்பதிலும் சரிவு ஏன்?

ஏடிஎம் அடிப்படையிலான பணப்பரிவர்த்தனையும் 49 சதவீதம் சரிவடைந்து மார்ச் மாதத்தில், ரூ.2.49 லட்சம் கோடி என்ற அளவிலிருந்து ஏப்ரல் மாதத்தில் 1.27 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகள் வாங்குவதற்கு மட்டுமே, இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் ஏடிஎம் சேவையை பயன்படுத்தியதாலேயே இந்த சரிவு நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற டிஜிட்டல் சேவைகளின் நிலை?

இவைகளை தவிர்த்த மற்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவைகளிலும் சரிவு நிலையே நீடித்து வருகிறது.
IMPS முறையில் 40 சதவீதம் சரிவடைந்து, மார்ச் மாதத்தில், 2.01 லட்சம் கோடியாக இருந்த பணபரிவர்த்தனை, ஏப்ரல் மாதத்தில், ரூ. 1.21 லட்சம் கோடியாக சரிவடைந்துள்ளது.
Unique payment interface or UPI முறையிலான பணபரிவர்த்தனையும் 26.8 சதவீதம் சரிவடைந்துள்ளது.

அரசின் நேரடி மானிய திட்டங்கள் ஏற்றம் பெற்றது எப்படி?

APBS (Aadhaar Payment Bridge System) திட்டத்தின் மூலமாகவே தற்போது மக்களுக்கு நிதியுதவிகள், மானியங்கள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த முறையிலான பணபரிமாற்றம் 138 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது மார்ச் மாதத்தில் இம்முறையின் மூலம், ரூ. 7,951 கோடி மட்டுமே வழங்கப்பட்டிருந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில், ரூ. 18,996 கோடிகள் அளவிற்கு பயனாளர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரியின் விவசாயிகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், மார்ச் 26ம் தேதி முதல், இதன்மூலமே, விவசாயிகளுக்கு, இந்த ஊரடங்கு காலத்தில் நிதியுதவி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க – Explained: Why digital payments crashed and government transfers rose in April

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Corona virus lockdown government transfers digital payments india digital payments

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X