Advertisment

ஊரடங்கு நேரத்திலும் மதுவிற்பனைக்கு ஏன் அனுமதி? : மாநிலங்கள் இதன்மூலம் பயன் அடைகிறதா?.

உத்தரபிரதேச மாநிலம், 2018-19ம் நிதியாண்டில், மாதம் ஒன்றுக்கு ரூ.2,500 கோடியை வருமானமாக பெற்றிருந்தது. நடப்பு ஆண்டில், இது ரூ.3 ஆயிரம் கோடிகளாக இருக்கும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
corona virus, lockdown, lockdown extended, liquor, liquor excise, liquor tax, liquor shop, liquor shops open, , excise on liquor, indian express,coronavirus news, coronavirus tamil news, coronavirus tamil nadu news, coronavirus chennai news, coronavirus Tamil nadu, coronavirus outbreak

corona virus, lockdown, lockdown extended, liquor, liquor excise, liquor tax, liquor shop, liquor shops open, , excise on liquor, indian express,coronavirus news, coronavirus tamil news, coronavirus tamil nadu news, coronavirus chennai news, coronavirus Tamil nadu, coronavirus outbreak

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட நிலையில், சிறிது தளர்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. மது விற்பனை உள்ளிட்டவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டன. நாட்டின் பல மாநிலங்களில் மதுவகைகளை வாங்க மக்கள் பல கி.மீ தொலைவிற்கு வரிசையில் நின்றதை அனைத்து ஊடகங்களும் போட்டோவுடன் செய்தி வெளியிட்டிருந்தன.

Advertisment

இந்நிலையில், தலைநகர் டெல்லியில், மதுபானங்களுக்கு சிறப்பு கொரோனா வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு மதுபானங்களின் விலை 70 சதவீத அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. மதுபான விலையுயர்வால் கிடைக்கும் கூடுதல் வருவாயை, ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள வளர்ச்சி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது.

மது விற்பனையால் மாநிலங்களுக்கு எவ்வாறு வருவாய் கிடைக்கின்றன?

இந்தியாவில் குஜராத், பீகார் ( பூரண மதுவிலக்கு அமலில் உள்ளன) மாநிலங்களை தவிர்த்து மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், மது தயாரிப்பு மற்றும் விற்பனைகளுக்கென்று பல்வேறு வரிகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில், இந்த வரிகள் மட்டுமல்லாது மதிப்பு கூட்டப்பட்ட ( வாட்) வரியும் விதிக்கப்படுகிறது. வெளிநாட்டு மதுபானங்களை இறக்குமதி செய்தல், போக்குவரத்து செலவு, நிறுவன பதிவு கட்டணம் என பல்வேறு வழிகளில் தமிழக அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.

உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மதுபானங்களுக்கு சென்று சிறப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வரும் வருவாயை கொண்டு, மாநிலத்தில் உள்ள கால்நடைகள் பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

publive-image

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்ட (‘State Finances: A Study of Budgets of 2019-20’) அறிக்கையின்படி, மதுபானங்களுக்கு விதிக்கும் கலால் வரிகள் மூலம், மாநில அரசுகள் 10 முதல் 15 சதவீத வரக வருவாய் பெறுகின்றன. மதுபானங்களுக்கு விதிக்கப்படும் கலால் வரியின் மூலம் கிடைக்கும் வருவாய், மாநிலங்களின் சொந்த வரிவருவாயில் இரண்டாவது அதிகபட்ச வருவாய் ஆகும். ஜிஎஸ்டி முதன்மை இடத்தில் உள்ளது. இதன் காரணமாகத்தான் பல்வேறு மாநிலங்கள் ஜிஎஸ்டி வரம்பிற்குள் மதுபான வகைகள் கொண்டுவரக்கூடாது என்பதை வலியுறுத்தி வருகின்றன.

கலால் வரி மூலம் மாநில அரசுகளுக்கு எவ்வளவு வருவாய் கிடைக்கிறது?

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 2019-20ம் நிதியாண்டில், 29 மாநிலங்கள், டெல்லி மற்றும் புதுச்சேரிக்கு ரூ. 1,75,501.42 கோடி வருவாய், கலால் வரியின் மூலம் கிடைத்துள்ளது. இது 2018-19ம் நிதியாண்டை ஒப்பிடும் போது 16 சதவீதம் ( கடந்தாண்டு ரூ 1,50,657.95) அதிகம் ஆகும்.

2018-19ம் நிதியாண்டில் மாநிலங்கள் மாதம் ஒன்றுக்கு சராசரியாக ரூ.12,500 கோடி வருவாயாக பெற்றுள்ளது. 2019-20ம் நிதியாண்டில் இது ரூ.15 ஆயிரம் கோடிகளாக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில், இந்த வருவாய் ரூ.15 ஆயிரம் கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்த திட்டமிடல், கொரோனா தொற்று பரவலுக்கு முன் மேற்கொள்ளப்பட்டது ஆகும்.

உத்தரபிரதேச மாநிலம், 2018-19ம் நிதியாண்டில், மாதம் ஒன்றுக்கு ரூ.2,500 கோடியை வருமானமாக பெற்றிருந்தது. நடப்பு ஆண்டில், இது ரூ.3 ஆயிரம் கோடிகளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதாக உத்தரபிரதேச அரசின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

publive-image

எந்தெந்த மாநிலங்களுக்கு அதிக வருவாய்?

2018-19ம் நிதியாண்டில், கலால் வரி மூலம் அதிக வருமானம் ஈட்டிய மாநிலங்கள் பட்டியிலின் முதலிடத்தில் உத்தரபிரதேசம் (ரூ.25,100 கோடி), அடுத்தடுத்த இடங்களில் கர்நாடகா ( ரூ.19,750 கோடி), மகாராஷ்டிரா (ரூ.15,343.08 கோடி), மேற்கு வங்கம் (ரூ.10,554.36 கோடி) மற்றும் தெலுங்கானா (ரூ.10,313.68 கோடி) உள்ளன. இந்த மாநிலஙகள் வெளிநாட்டு மதுபானங்களை இறக்குமதி செய்ததனால் கிடைத்த வரி, வாட் வரி உள்ளிட்ட விபரங்கள் இதில் இணைக்கப்படவில்லை.

கலால் வரியின் மூலம் உத்தரபிரதேசம் முதலிடத்தில் இருப்பதற்கு காரணம், அங்கு மதுவகைகளுக்கு அதிகளவு கலால் வரி விதிக்கப்படுகிறது. அங்கு இதற்கென்று தனியாக வாட் வரி வசூலிக்கப்படுவதில்லை.

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கலால் வரி மட்டுமல்லாது வாட் வரியும் தனியாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

பீகார் மற்றும் குஜராத் மாநிலங்களில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளதால், 2018-19 மற்றும் 2019-20ம் நிதியாண்டுகளில், மதுவகைகளின் மீதான கலால் வரியின் மூலமான வருமானம் கிடையாது. ஆனால், குஜராத் மாநிலத்தில் மது வகைகளின் மூலமான வருமானம் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்தாண்டு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்து. இருந்தபோதிலும், அங்கு மே 4ம் தேதி முதல், தடை வரி விதிப்பின் மூலம், அங்கு மதுவிற்பனை அனுமதிக்கப்பட்டுள்ளது.

மாநில கலால் வரி என்பது என்ன?

மாநிலங்கள் ஆல்கஹால் உள்ளிட்ட மதுபானங்களின் மீது கலால் வரியை விதித்து வருகின்றன. நாட்டு சரக்குகள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் மதுபானங்கள், பார்லி தானியத்தின் உதவியால் தயாரிக்கப்படும் மதுவகைகள், வெளிநாட்டு மதுபானங்கள், மருத்துவத்துறையில் பயன்படும் ஒயின் வகைகள், மருத்துவம் மற்றும் சுகாதார பயன்பாட்டிற்காக ஆல்கஹாலை தயாரிக்கும் நிறுவனங்கள், ஓபியம், இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுவகைகள், ராணுவ கேண்டீன்களில் விற்கப்படும் மது வகைகள் உள்ளிட்டவைகளில் இருந்து மாநில அரசுகள் கலால் வரியின் மூலம் குறிப்பிட்ட அளவிலான வருவாயை பெற்று வருகின்றன.

வருவாய்க்கான மற்ற வழிகள்

மாநிலத்திற்கு வரி வருவாய், வரி அல்லாத வருவாய் என்ற இரண்டு முறையில் வருமானம் கிடைக்கிறது. இந்த வரி வருவாய் பிரிவு இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் சொந்த வரி வருவாய் மற்றும் மத்திய அரசின் வரிகளில் பங்கு. மாநிலத்தின் சொந்த வருவாய் 3 பிரிவுகளின் மூலம் பெருமளவில் கிடைக்கிறது.

வருமானத்திற்கு விதிக்கப்படும் வரி ( வேளாண் துறை மூலம் வரும் வருமானத்திற்கான வரி, தொழில் சார்ந்த டரி, வர்த்தகம், வேலை வாய்ப்பு வழங்கும் நிறுவனங்களுக்கான வரி)

சொத்து மற்றும் மூலதன பரிவர்த்தனைகள் மீதான வரி ( நிலப்பதிவு, பத்திரங்கள், பதிவுக்கட்டணங்கள், நகர்ப்புற பகுதிகளில் அசையா சொத்துகளுக்கான வரி)

பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரி ( விற்பனை வரி, மாநில விற்பனை வரி / வாட் வரி, மத்திய விற்பனை வரி, விற்பனை வரி மீதான கூடுதல் கட்டணம், விற்றுமுதல் வரி ரசீதுகள், வாகனங்கள் மீதான வரி, சரக்கு மற்றும் பயணிகள் மீதான வரி, மின்சார சேவை சார்ந்த வரிகள்ந பொழுதுபோக்கு வரி, மாநில சரக்கு மற்றும் சேவை வரி, மற்ற வரிகள் உள்ளிட்ட வரிகளால், மாநில அரசுக்கு வருமானம் வருகின்றன.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 2019-20ம் நிதியாண்டு அறிக்கையின்படி, மாநிலத்தின் சொந்த வரி வருவாயில், மாநில ஜிஎஸ்டி வரியின் பங்கு 43.5 சதவீதமாக உள்ளது. அடுத்த இடத்தில் விற்பனை வரி (23.5 சதவீதம்) உள்ளது. பெட்ரோல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பிற்குள் இல்லை. 12.35 சதவீதத்துடன் மாநில கலால் வரி 3ம் இடத்தில் உள்ளது. 11.3 சதவீதத்துடன் சொத்து மற்றும் மூலதன பரிவர்த்தனைகள் மீதான வரி அதற்கடுத்த இடத்தில் உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Corona Virus Lockdown
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment