வந்தே பாரத் மிஷன் : ஏர் இந்தியா எத்தகைய விதிகளை மீறியதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது?

US bars air india flights : ஒரு நாட்டிற்கு வரும் விமானத்திற்கும், புறப்பட்டு செல்லும் விமானத்திற்கும் விதிமுறைகளை நிர்ணயிப்பது ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபடும்.

By: Published: June 23, 2020, 4:27:39 PM

கொரோனா ஊரடங்கால் அமெரிக்காவில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்துசெல்ல ஏர் இந்தியா விமான சேவைக்கு அமெரிக்க விமான போக்குவரத்து கழகம் தடைவிதித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனம், நியாயமற்ற மற்றும் பாரபட்சமான நடவடிக்கைகளை மேற்கொண்டதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் விமானசேவையை துவக்குவதற்கு முறையான அனுமதி பெற வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த தடை உத்தரவு 30 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், மூன்றாம் மற்றும் நான்காம் கட்டமாக அங்கு தவித்து வரும் இந்தியர்களை தாய்நாட்டிற்கு திரும்ப அழைத்துவரும் முயற்சியில் மத்திய அரசுக்கு தொய்வு ஏற்பட்டுள்ளது.

இந்தியா மீது அமெரிக்கா எத்தகைய குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது?

அமெரிக்காவில் விமான நிறுவனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வரும் நிலையில், இந்திய அரசு அதனை மீறியுள்ளது. இந்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனம், நியாயமற்ற மற்றும் பாரபட்சமான நடவடிக்கைகளை மேற்கொண்டதாலேயே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கினால் வெவ்வேறு நாடுகளில் தவித்து வரும் தங்கள் நாட்டினரை அழைத்துச்செல்ல ஒவ்வொரு நாடுகள் மற்ற நாடுகளுக்கு விமானங்களை இயக்கி வருகின்றன. அதேபோல், அமெரிக்காவும் இயக்கியது. அமெரிக்காவில் உள்ள இந்தியர்களை அழைத்து செல்ல வந்த ஏர் இந்தியா விமானம், பயணிகளிடம் கட்டணம் வசூலித்தது, விமான பயண நெறிமுறைகளுக்கு எதிரானது. இந்த விவகாரத்தில் இலவசமாக இந்த சேவை வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்தியாவின் இந்த அணுகுமுறை, அமெரிக்காவில் மட்டுமாவது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். அதனைவிடுத்து மக்களிடம் பயணக்கட்டணம் வசூலித்ததே தாங்கள் விதித்த தடைக்கு முக்கிய காரணமாக அமெரிக்க விமானப்போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

 

இந்த விவகாரம் இந்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதா?

இந்த தடை உத்தரவு குறித்து மே 19ம் தேதியும், டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மூலம், மே 26ம் தேதியும் மத்திய விமானத்துறை அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 28ம் தேதி, அமெரிக்க தூதரகத்தின் மூலமும் இந்த தகவல் பரிமாறப்பட்டுள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் உடனடி முடிவு எடுக்க இந்திய அரசு விரும்பவில்லை என்றே தோன்றுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா எத்தகைய நடவடிக்கைகளை எடுக்க முடியும்?

அமெரிக்க விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சகம், இந்த விவகாரத்தை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. ஏர் இந்தியா நிறுவனம், இந்த விவகாரத்தில், சாதகமாக செயல்படும்வரை இந்த தடை தொடர்ந்து நீடிக்கும் வாய்ப்பு உள்ளது.
அமெரிக்காவிற்கான விமான சேவையை ஏர் இந்தியா துவங்கும்பட்சத்தில், அது அமெரிக்க விமானத்துறை அமைச்சகத்திடம் உரிய அங்கீகாரம் பெற்றால் மட்டுமே சாத்தியம் என்று அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

அமெரிக்கா விதித்துள்ள தடை தொடர்பாக, ஏர் இந்தியா மற்றும் மத்திய விமானத்துறை அமைச்சகம் இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காத நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த 15ம் தேதி ஆலோசனை நடத்தியுள்ளன.
மத்திய விமான போக்குவரத்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வந்த பாரத் மிஷன் திட்டத்தின் மூலம், வெளிநாடுகளில் தவித்துவந்த 2 லட்சம் இந்தியர்கள் 870 சார்ட்டர்ட் விமானங்களின் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர். சில விமானங்கள் இந்த விவகாரங்கள் மனிதநேயத்துடன் செயல்பட்டுள்ளன.
கத்தார் ஏர்வேஸ் – 81, கேஎல்எம் டச்சு -68, குவைத் ஏர் – 41, பிரிட்டிஷ் ஏர்வேஸ் -39, பிளைதுபாய் – 38, ஏர்பிரான்ஸ் -32, ஜஸீரா – 30, ஏர் அரேபியா – 20, கல்ப் ஏர் – 19, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் – 19, பீமன் பங்களாதேஷ் – 15, கொரியன் ஏர் – 14, டெல்டா – 13, சவுதியா -13 மற்றும் ஏர் நிப்பான் – 12 பங்களித்திருந்துள்ளன.
இதுமட்டுமல்லாது, ஏர் நியூசிலாந்து – 12, தாய் ஏர் ஆசியா -11 , யுனைடெட் ஏர்லைன்ஸ் – 11, ஈராக்கி ஏர்வேஸ் -11, ஓமன் ஏர் – 10, யுரல் ஏர்லைன்ஸ் -9, லுப்தான்சா – 8, சோமோன் ஏர் -8, காண்டுர் – 8, எமிரேட்ஸ் -5, எதியாத் – 5, ஏரோபிளோட் -4, விர்ஜின் அட்லாண்டிக் – 4 உள்ளிட்ட விமான நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை அளித்துள்ளன.

இந்திய விமான சேவையில் மாற்றம் ஏற்படுமா?

ஒரு நாட்டிற்கு வரும் விமானத்திற்கும், புறப்பட்டு செல்லும் விமானத்திற்கும் விதிமுறைகளை நிர்ணயிப்பது ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபடும்.
சர்வதேச விமான போக்குவரத்து கழகத்தின் விதிமுறைகளின்படி, வான்வெளியில் 9 இலவச சேவைகளை நிர்ணயித்துள்ளது. இந்த உரிமையானது அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். இருந்தபோதிலும், இந்த விவகாரத்தில் சிலநாடுகள் தான்தோன்றிதனமாக நடந்துகொள்வது வருத்தமளிக்கிறது.
அமெரிக்காவில் தவித்து வரும் இந்தியர்களை அழைத்து வர இந்தியா தரப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ள 3 மற்றும் நான்காவது விமானங்களை இயக்க தற்போது தடங்கல் ஏற்பட்டுள்ளது. இது இருநாடுகளின் அடிப்படை உரிமையாகும் என்று இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க – Cloud over Vande Bharat flights from US: Why has the US accused Air India of unfair practices?

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Explained News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Corona virus lockdown usa air india air india repatriation flight vande bharat mission

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X