Amitabh Sinha
India Coronavirus Cases: தலைநகர் டெல்லியில், மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளால், அங்கு கொரோனா பாதிப்பு நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கொரோனா பாதிப்பு நபர்களின் எண்ணிக்கையைவிட, குணமடைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஜூன் மாத இறுதியில், தினமும் 28 ஆயிரம் கொரோனா பாதிப்பு என்ற அளவில் இருந்தநிலையில் அது தற்போது 10 ஆயிரம் என்ற அளவில் குறைந்துள்ளது. இந்த சரிவுநிலை தொடர்ந்து வருவதற்கு, மக்கள் போதுமான அளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், முககவசம் அணிதல், தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்டவைகளாலேயே சாத்தியமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் புதிய பாதிப்புகள் விவகாரத்தில் மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில், தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. அங்கும் சில நாட்கள் புதிய தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கையைவிட, குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த வாரத்தில் மட்டும், புதிய தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கையைவிட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதேநிலை தொடர்ந்து நீடிக்கும் என்று சொல்லிவிட முடியாது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிக குறைந்த அளவிலேயே இருந்துவந்தது, தற்போதுதான் அதன் பாதிப்பு அதிகரித்துள்ளது.மகாராஷ்டிராவில், அதிக பாதிப்பு இருந்தநிலையில், தற்போது குறைந்துவருகிறது.
நோய்த்தொற்று உள்ளவர்களால் தான் புதிய நபர்களுக்கு இந்த தொற்று பரவுகிறது. இவர்களை நாம் தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளித்தால், புதிய தொற்றுக்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். இதற்கு மாநிலத்தில் தேவையான மருத்துவ கட்டமைப்புகள், மருத்துவர்கள் உள்ளிட்டவைகள் தேவையான அளவிற்கு இருக்க வேண்டியது அவசியமாகும்.
டெல்லி,தமிழ்நாடு, மகாராஷ்டிரா மாநிலங்கள் மட்டுமல்லாது, மற்ற மாநிலங்களிலும் நோய்த்தொற்றுக்கள் குறைந்தபாடில்லை.
ஆந்திர பிரதேசம், கர்நாடகா, பீகார், கேரளா, மேற்குவங்கம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கடந்த ஒருமாதகாலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கூட தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆனால், மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது இங்கு புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை கணிசமான அளவிற்கு குறைந்தே காணப்படுகிறது.
தேசிய அளவில் ஜூலை 31ம் தேதி புதிதாக 57 ஆயிரம் பேருக்கு புதிய தொற்றுக்கள் கண்டறியப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் 1ம் தேதி 55 ஆயிரம், 2ம் தேதி 53 ஆயிரம் என்ற அளவில் புதிய தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18 லட்சத்தை நெருங்கியுள்ளது.
இதன்மூலம், சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் உள்ள பிரேசிலை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.பிரேசிலில், தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26.62 லட்சமாக உள்ளது. அங்கு நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் என்ற அளவிலேயே புதிய தொற்றுக்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. இந்தியாவிலேயோ தற்போது தினந்தோறும் கண்டறியப்பட்டும் புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டுகிறது. இதேநிலை தொடர்ந்தால், இந்தியா, 2வது நிலைக்கு முன்னேறிவிடும். அமெரிக்காவில், மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 45.23 லட்சம் என்ற அளவில் உள்ளது
சர்வதேச அளவில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.