New Drug Molnupiravir for Covid 19 Tamil News : மொல்னுபிராவிர் என்ற புதிய மருந்து 24 மணி நேரத்தில் SARS-CoV-2 பரவுவதை நிறுத்துகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஜார்ஜியா மாநில பல்கலைக்கழகத்தின் பயோமெடிக்கல் சயின்ஸ் இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவுகள் நேச்சர் மைக்ரோபயாலஜி இதழில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், இந்திய ஆராய்ச்சியாளர்கள் ட்ரக்ஸ் கொண்டு மனித சோதனைகளை நடத்த மருந்து கட்டுப்பாட்டாளருக்கு விண்ணப்பிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
மருந்து
இந்த ஆன்ட்டிவைரல் மருந்து மொல்னுபிராவிர் அல்லது MK-4482/EIDD-2801, வாய்வழியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. உயிரி தொழில்நுட்ப நிறுவனமான ரிட்ஜ்பேக் பயோ தெரபியூடிக்ஸ், மருந்து நிறுவனமான மெர்க்குடன் இணைந்து மொல்னூபிராவிரை உருவாக்கி வருகிறது. இதிலிருக்கும் ஆராய்ச்சி குழு SARS-CoV-2-க்கு எதிராக MK-4482 / EIDD-2801-ஐ உருவாக்கி, ஃபெரெட்களில் சோதித்திருக்கிறது.
SARS-CoV-2 டிரான்ஸ்மிஷனை விரைவாகத் தடுப்பதற்கான வாய்வழியாகக் கிடைக்கக்கூடிய மருந்தின் முதல் செயல் விளக்கம் இதுதான். மேலும், இது ஒரு சிறந்த மருந்தாக இருக்கக்கூடும் என்று புகழ்பெற்ற பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் ரிச்சர்ட் கே பிளெம்பர் கூறினார். டாக்டர் பிளெம்பர் தலைமையிலான குழு முதலில் இந்த மருந்து இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களுக்கு எதிராக சக்தி வாய்ந்தது என்பதைக் கண்டுபிடித்தது. "முந்தைய வெளியீட்டில் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களுக்கு எதிராக மொல்னூபிராவிரின் MoA செயல்பாட்டு வழிமுறையை நாங்கள் வகைப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் பிளெம்பர் மின்னஞ்சல் மூலம் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
அதன் நடவடிக்கை
ஃபெரெட்களில், SARS-CoV-2-ன் பரவலை 24 மணி நேரத்தில் முற்றிலுமாக அடக்குவதற்கு மருந்து காணப்பட்டது. ஆராய்ச்சியாளர்கள் SARS-CoV-2 உடன் ஃபெர்ரெட்களைப் பாதிப்படையச் செய்து, விலங்குகள் மூக்கிலிருந்து வைரஸை வெளியேற்றத் தொடங்கியபோது MK-4482 / EIDD-2801 உடனான சிகிச்சையைத் தொடங்கினர். "அதே கூண்டில் சிகிச்சை அளிக்கப்படாத ஃபெரெட்களுடன் பாதிக்கப்பட்ட மற்றும் பின்னர் சிகிச்சையளிக்கப்பட்ட மூல விலங்குகளை நாங்கள் இணைத்து வைத்தபோது, அவர்களின் தொடர்புகள் எதுவும் பாதிக்கப்படவில்லை" என்று ஆய்வின் இணை முன்னணி ஆசிரியர் ஜோசப் உல்ஃப் கூறினார்.
இருப்பினும், போலி மருந்து பெற்ற மூல ஃபெரெட்டுகளின் அனைத்து தொடர்புகளும் பாதிக்கப்பட்டன. இதில் நேர்மறையான வளர்ச்சி என்னவென்றால், சிகிச்சையளிக்கப்படாத தொடர்பு விலங்குகளுக்குப் பரவுவதை அது முற்றிலும் அடக்கியது. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்த ஃபெரெட் அடிப்படையிலான தகவல்கள் மனிதர்களுக்கு மொழிபெயர்க்கப்பட்டால், மருந்துடன் சிகிச்சையளிக்கப்பட்ட கோவிட் -19 நோயாளிகள் சிகிச்சையைத் தொடங்கிய 24 மணி நேரத்திற்குள் தொற்றுநோயற்றவர்களாக மாறலாம் என்பதுதான்.
ஏன் ஃபெர்ரெட்டுகள்
இன்ஃப்ளூயன்ஸா மற்றும் பிற சுவாச நோய்த்தொற்றுகளுக்கு ஃபெர்ரெட்டுகள் ஒரு பிரபலமான மாதிரி. ஏனெனில் அவற்றின் நுரையீரல் உடலியல் மனிதர்களைப் போன்றது. மேலும், கோவிட் -19-ன் அம்சங்களை அதன் பரவல் போன்றவற்றில் பிரதிபலிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். "அவை உடனடியாக SARS-CoV-2-ஐ பரப்புகின்றன. ஆனால், பெரும்பாலும் கடுமையான நோயை உருவாக்கவில்லை. இது இளைஞர்களிடையே பரவுகின்ற தொற்றுநோயை ஒத்திருக்கிறது" என்று இணை முன்னணி எழுத்தாளர் டாக்டர் ராபர்ட் காக்ஸ் கூறினார்.
மனித சோதனைகள்
“மருந்து அடிப்படையில் வைரஸின் ஆர்.என்.ஏ, நகலெடுப்பதை நிறுத்துகிறது” என்று அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் சேகர் மண்டே கூறினார். "வேறு எந்த காய்ச்சல் எதிர்ப்பு மருந்தையும் போன்று, மருத்துவ பரிசோதனைகளுக்குச் செல்ல எங்கள் மருந்துகளின் பட்டியலில் இந்த மருந்தும் இருந்தது. மேலும் பல நம்பிக்கைக்குரிய மருந்துகள் உள்ளன. அவை யாவும் மதிப்பீட்டில் உள்ளன. மொல்னூபிராவிரை மனிதர்களில் பரிசோதிப்பதற்கான மருத்துவ பரிசோதனை ஒப்புதலுக்காக கட்டுப்பாட்டாளருக்கு விண்ணப்பிப்போம்"
உலகளவில், மொல்னூபிராவிரின் மருத்துவ பரிசோதனை மெர்க்கால் மேற்கொள்ளப்படுகிறது. இந்த மருந்து இப்போது பல மையங்களில் மேம்பட்ட கட்டம் 2/3 மனித சோதனைகளில் உள்ளது. கட்டம் 2/3 சோதனை என்பது பல்வேறு நாடுகளில், 46 இடங்களில் கோவிட் 19 உடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெரியவர்களில் எம்.கே -4482-ன் செயல்திறன் மற்றும் பாதுகாப்பை மதிப்பிடுவதற்கான ஒரு சீரற்ற, போலி மருந்து கட்டுப்படுத்தப்பட்ட குருட்டு மருத்துவ ஆய்வு.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.