Advertisment

Explained : கொரோனா வைரஸ் (COVID-19) பயத்தை எவ்வாறு கையாள்வது?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus, coronavirus death andhra pradesh, man suicide coronavirus, கொரோனா வைரஸ், a mand suicide in andhra pradesh, a man suicide by coronavirus fear, hyderabad coronavirus death, கொரோனா வைரஸ் அச்சத்தால் தற்கொலை, ஆந்திராவில் கொரோனா வைரஸ் அச்சத்தால் தற்கொலை, coronavirus deaths india, coronavirus news, coronavirus symptoms,

கடந்த திங்கள்கிழமை முதல், டெல்லி, ஹைதராபாத், ஜெய்ப்பூர் போன்ற நாட்டின் முக்கிய நகரங்களில்  உறுதிப்படுத்தப்பட்ட புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகி வருகிறது.  அரசு அதிகாரிகளும்  தொடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

Advertisment

சிங்காரச் சென்னை வரலாறு 1 : இது தங்கசாலை தெரு உருவான கதை...

வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடங்களில் தவறான தகவல்கள் பரப்பப் பட்டு வருகின்றது.

எது  பாதுகாப்பானவை, எது பாதுகாப்பற்றவை ? எந்த நடவடிக்கைகள் அவசியமானவை, எது தேவையற்றவை? போன்ற அடிப்படை கேள்விகளுக்கான தகவல்கள் இங்கே:

கொரோனா வைரஸுக்கு என்ன சோதனை செய்யப்படுகிறது? தனியார் ஆய்வகங்கள் ஆயத்தமாக உள்ளனவா ?

கொரோனா வைரஸ் நோய் அறிகுறி இருக்கலாம் என்று  சந்தேகிக்கப்படுவர்களின் சாம்பிள்கள்  முதலாவதாக பாலிமரேஸ் சங்கிலி எதிர்வினை என்ற சோதனைக்கு உட்படுத்தப்<ஆடுகிறது. இது பாசிடிவாக இருப்பின், புனேவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வு மையத்திற்கு சாம்பிள்கள் அனுப்பப்படுகிறது. மரபணு-வரிசைமுறை தொழில்நிட்பம் மூலமாக, இங்கே கொரோனா வைரஸ் இறுதியாக உறுதிபடுத்தப் படுகிறது. இந்தியாவில், மரபணு வரிசைமுறை செய்யும் ஒரே அரசு நிறுவனம்  இந்த தேசிய வைராலஜி ஆய்வு மையமாகும்.

publive-image

பாலிமரேஸ் சங்கிலி எதிர்வினை சோதனை மேற்கொள்ள இந்தியாவில் பல ஆய்வு மையங்கள் உள்ளன. உதாரணமாக, டெல்லி எய்ம்ஸ், கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகம் (லக்னோ), சவாய் மன் சிங் மருத்துவமனை(ஜெய்ப்பூர்), தேசிய காலரா மற்றும் நுரையீரல் நோய்கள் மையம் (கொல்கத்தா), இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி (நாக்பூர்)..... மற்றும் பல.  தனியார் ஆய்வகங்களும்  பாலிமரேஸ் சங்கிலி எதிர்வினை சோதனைகளை செய்ய ஆயத்தமாக இருந்தாலும், நியமிக்கப்பட்ட அரசு மையங்களுக்குச் செல்வது நல்லது என்று கருதப்படுகிறது.

கொரோனா மாஸ்க் பயனுள்ளதாக இருக்குமா? 

நோய்த்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த மாஸ்க் பயனுள்ளதாகவே இருக்கும். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பயணம் செய்த (அ) பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொண்ட ஒருவர் மாஸ்கை பயன்படுத்த வேண்டும். மருத்துவ ஊழியர்களும், நோயின் அறிகுறிகளைக் காட்டும் எந்தவொரு நபரும் மாஸ்க்கினை பயன்படுத்துவது கட்டாயமாகும்.

பொது மக்களைப் பொறுத்த வரையில், தற்சமயம்  மாஸ்க் பயன்படுத்துவது அவசியமற்றது. உண்மையில், மாஸ்க் பயன்படுத்துவதானால் சில ஆபத்துகளும் வரலாம். மக்கள்  பல நேரங்களில் மாஸ்க்கை சரியாக அணிவதில்லை. இதனால், அவர்கள் முகத்தை அடிக்கடி சரிசெய்வதன் மூலம் தொற்று அதிகமாகம் அபாயம் உள்ளது என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.

பிறந்தநாள் விழாக்கள் போன்ற மக்கள் கூடும் கூட்டங்களுக்கு குழந்தைகளை அனுப்புவது சரியா? பொது போக்குவரத்தைப் பயன்படுத்தலாமா?

நாம் கலந்து கொள்ளும் கூட்டங்களில் கலந்து கொள்ளும் விருந்தினர்களுக்கு (அ) மற்றவர்களுக்கு கொரொனோ வைரஸ் பாதித்த நாடுகளுக்கு பயணம் செய்த வரலாறு இருப்பின் (அ) வைரசால் பாதிப்படைந்தவர்களோடு தொடர்பு இருப்பின், கூட்டங்களில் கலந்து கொள்ளமால் இருப்பது நல்லது.

பொது போக்குவரத்தில் செல்லும் பயனர்களுக்கும் இதே அறிவுரை தான். பிரச்சனை இல்லை என்றால், பொது போக்குவரத்துகளில் பயணம் செல்வதில் எந்த தடையும் இல்லை.

இந்தியாவில் கொரோனா வைரஸ்: ஹேண்ட் சானிட்டைசர்கள் பயனுள்ளதாக இருக்குமா?

நோய் கட்டுப்பாட்டுக்கான அமெரிக்க மையங்கள்,  கூறுகையில் “முடிந்தவரை சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளைக் கழுவுவது நல்லது. இவ்வாறு செய்வதினால் கைகளில் உள்ள அனைத்து வகையான கிருமிகளும், ரசாயனங்களும் குறைக்கின்றன. தண்ணீர், சோப்பு இல்லாத பட்சத்தில், குறைந்தது 60% ஆல்கஹால் கொண்ட ஹேண்ட் சானிட்டைசர்களைப் பயன்படுத்துவதினால் நோய்வாய்ப்படுவது தவிர்க்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.

publive-image

கொரோனா வைரஸ் : கைகுலுக்குவது பாதுகாப்பானதா?

கட்டாயம் இல்லை. கொரொனோ வைரஸ் கைகுலுக்குவதன் மூலமாக  பரவுகிறது. ஏனெனில், வைரசால் பாதிக்கப்பட்ட நபர் தனது கைகளை பயன்படுத்தி தும்மியிருக்கலாம். மூச்சுத்திணறலை சரி செய்திருக்கலாம். எனவே, கை கொடுப்பதை தவிர்த்து வணக்கம் தெரிவிப்பது மிகவும் நல்லது.

பாலியல் தொடர்பு ? முத்தமிடாமல் இருப்பது மிகவும் நல்லது. எந்தச் செயலாக இருந்தாலும், சோப்பால் கை கழுவும் செயல் நமக்கு பெரும் பாதுகாப்பான  நடவடிக்கையாகவே இருக்கும்.

கொரோனா வைரஸை சமாளிக்க நமது அரசு   தயாராக இருக்கிறதா? இதுவரை, உள்ளூரில் கொரொனோ வைரஸ்  பரவ வில்லை. நமது அரசு பெரிய சவாலையும் சந்திக்க வில்லை. வைரஸ் மனிதர்களுக்கு பரவும் நிகழ்வு ஏற்படும்போது, விஷயம் சிக்கலானதாகிவிடும்.

நமது  மருத்துவ சுகாதார கட்டமைப்புகள் பெரிதும் சோதிக்கப்படும். பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் மக்களுக்கு கொடுக்கப்பட்ட விசாக்களை அரசாங்கம் ஏற்கனவே ரத்து செய்திருக்கிறது.

அதிக எண்ணிக்கையில் தங்கக்கூடிய வகையில் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை அடையாளம் காண மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தற்போது, செயல்படும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளை அதிகரிக்கவும் கேட்டுக் கொண்டுள்ளது.

வைரசால் பாதிப்படைந்த மக்கள் டெல்லி விமான நிலையத்தில்  விமான சோதனையைத் தாண்டி எவ்வாறு நுழைந்தனர்?

இத்தாலி நாட்டில் இருந்து வரும் பயணிகளை, விமான நிலையத்தில் வைத்து  ஸ்கிரீனிங் செய்யும் நடைமுறை பிப்ரவரி 26-ம் தேதியில் இருந்து தான் தொடங்கியது.

கொரொனோ வைரஸ் கண்டறியப்பட்ட இத்தாலிய மக்கள்,அதற்கு முந்தைய தினங்களில் இந்தியாவிற்குள் வந்தவர்கள். கடந்த 24 மணி நேரத்தில் வைரஸின் தடம் 66 முதல் 75 நாடுகளுக்கு விரிவடைந்துள்ளது.

publive-image

கொரோனா வைரஸ் : நீங்கள் வெளியே சாப்பிடுவதை நிறுத்த வேண்டுமா?

இதுவரை இல்லை. நீங்கள் பொது இடங்களைத் தவிர்க்கத் தொடங்கினால், பள்ளிக்கு செல்வதையும்,  பணியிடங்களுக்கு செல்வதையும் நிறுத்த வேண்டும். ஆனால், அந்த நிலைமை இன்னும் எழவில்லை.

மேலும், பொது இடங்களைத் தவிர்ப்பது (அ) மற்றவர்களுக்கு அவ்வாறு அறிவுறுத்துவது தேவையற்ற குழப்பத்தை உருவாக்கிவிடும். தற்போது கொரொனோ வைரஸ் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் டெல்லி பெற்றோரின் குழந்தை படிக்கும் நொய்டா பள்ளிக்கூடம் கூட, அடுத்த வாரம் துவங்குள்ளது.

தேவையான,சரிபார்க்கப்பட்ட தகவல்கள் தேவைதான் யென்றாலும், நோயாளிகளின் தனியுரிமைகளை நாம் மனதில் கொள்வது அவசியம்.

உதாரணமாக, நொய்டா பள்ளிக்கூடம் தனது மாணவனின் பெற்றோர் ஒருவருக்கு கொரொனோ வைரஸ் உள்ளது என்று தெரிவித்ததே தவிற, பெற்றோரின் பெயரை எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.

சீரற்ற சமூக ஊடக செய்திகளை தவிர்ப்பது முக்கியம், பரப்பாமல் இருப்பது அதை விட மிக முக்கியம்.

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment