வரும் ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாத இடைவெளியில் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 216 கோடிக்கும் (2பில்லியன்) ) அதிகமான டோஸ் தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் என நிடி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் கூறியுள்ளார்.
கோவிட் -19 தடுப்பூசி உற்பத்தியாளர்கள் 8 பேர் சமர்ப்பித்த தரவுகளின் அடிப்படையில் அரசு மதிப்பிட்டுள்ளது. மேலும், உற்பத்தியாளர்களைத் தொடர்பு கொண்டு ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையில் தடுப்பூசி கிடைப்பது குறித்த தகவல்களைத் கேட்டுள்ளோம். இந்த காலகட்டத்தில், இந்தியாவில் 216 கோடி அளவு தடுப்பூசிகள் கிடைக்கும் எனவும் பால் தெரிவித்தார். 2 பில்லியன் ஷாட்கள் என்றால் நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் வயது வந்தோர் அனைவருக்கும் டிசம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி செலுத்தப்படும் என எதிர்ப்பார்க்கலாம்.
இது தடுப்பூசி உற்பத்தியை பெருமளவில் அதிகரித்தல், மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் செயல்திறன் மற்றும் பாதுகாப்புத் தரவில் கிடைக்கும் தன்மை ஆகிய இரண்டு முக்கிய விஷயங்களை சார்ந்தது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா 75 கோடி டோஸ் கோவிஷீல்டையும், 20 கோடி டோஸ் நோவாவாக்ஸ் தடுப்பூசியையும் உற்பத்தி செய்யும். இது ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை 95 கோடி டோஸ் வரை அதிகமாகிறது என பால் கூறியுள்ளார்.
மத்திய அரசு இதுவரை சீரம் நிறுவனத்திடம் இருந்து 27.6 கோடி டோஸ் கோவிஷீல்ட்டை வாங்கியுள்ளது, இதில் 16 கோடி டோஸ் மே முதல் ஜூலை இறுதி வரை வழங்கப்படும். கூடுதலாக 16 கோடி டோஸ்களை மாநிலங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சீரம் நிறுவனம் வழங்கும். ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் இடையில் 95 கோடி டோஸ்களை வழங்குவதற்கு மிகப்பெரிய ஆற்றல் தேவைப்படும்.
பாரத் பயோடெக் நிறுவனம் 55 கோடி டோஸ் கோவாக்சின் மற்றும் 10 கோடி டோஸ் நாசல் தடுப்பூசியை வழங்கவுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் மத்திய அரசிடம் இருந்து 8 கோடி டோஸுக்கான ஆர்டர்களைப் பெற்றுள்ளது, அதில் மே முதல் ஜூலை இறுதி வரை 5 கோடியை வழங்க வேண்டும். கூடுதலாக, இது மாநிலங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் ஆர்டர்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் 65 கோடி டோஸ்களை உற்பத்தி செய்ய வேண்டும். பாரத் பயோடெக்கின் இன்ட்ரானசல் தடுப்பூசி BBV154 இன்னும் 1-2 மருத்துவ சோதனை கட்டத்தில் உள்ளது. கோவாக்சின் உற்பத்தியை அதிகரிப்பது அதன் உற்பத்தியில் ஈடுபடும் மூன்று பொதுத்துறை நிறுவனங்களின் செயல்திறனைப் பொறுத்தது.
தற்போது 3 ஆம் கட்ட சோதனைகளில் உள்ள பயாலஜிக்கல் இ நிறுவனம் விரைவில் உற்பத்தியை தொடங்கி ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் 30 கோடி டோஸ்களை உற்பத்தி செய்யும் என பால் கூறினார்.
பயாலஜிக்கல் இ நிறுவன தடுப்பூசி கிடைப்பது பெரும்பாலும் அதன் மருத்துபற்றாக்குறை தரவைப் பொறுத்தது. கடந்த ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி, இந்தியாவின் மருந்து ஒழுங்குமுறைக் குழுவின் பொருள் நிபுணர் குழு (எஸ்இசி) தடுப்பூசியின் 1/2 கட்ட மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்க பயாலஜிக்கல் இ நிறுவனத்திற்கு பரிந்துரைத்தது. ஏப்ரல் 24 அன்று, பயாலஜிக்கல் இ நிறுவனம் தனது 1/2 கட்ட சோதனையை முடித்ததாக அறிவித்தது. இதனை தொடர்ந்து 3ஆம் கட்ட சோதனைக்கான ஒப்புதல் பெற்றது. நிறுவனம் 3 ஆம் கட்ட சோதனையில் இந்தியா முழுவதும் 15 தளங்களைத் தேர்ந்தெடுத்து , நோயெதிர்ப்புத் திறன் மற்றும் பாதுகாப்பை ஆய்வு செய்யும்.
சைடஸ் காடிலா அதன் தடுப்பூசியில் 3ஆம் கட்ட சோதனையில் இருப்பதால் விரைவில் உரிமம் பெற விண்ணப்பிக்கும் .இது ஆகஸ்ட்- டிசம்பர் மாதங்களில் 5 கோடி டோஸ்களை உற்பத்தி செய்யும் என பால் கூறினார். பயாலஜிக்கல் இ நிறுவனத்தை போலவே, சைடஸின் மருத்துவ பரிசோதனைகள் துரிதமாக நடைபெறவில்லை.
ஜனவரி 3 ஆம் தேதி, தனது ZyCoV-D தடுப்பூசியின் 3 ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்க ஒழுங்குமுறை ஒப்புதல் பெற்றதாகக் ஜைடஸ் காடிலா தெரிவித்துள்ளது. ஏறக்குறைய நான்கு மாதங்களுக்குப் பிறகு அகமதாபாத் நிறுவனம் தனது தடுப்பூசியின் செயல்திறன் தரவை இன்னும் சமர்ப்பிக்க உள்ளது.
ஜெனோவா நிறுவனம் தனது எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளுக்கும் உரிமை கோரவுள்ளது. இது 6 கோடி டோஸ்களை உற்பத்தி செய்யும் என பால் கூறினார். இருப்பினும், மருத்துவ பரிசோதனை பதிவேட்டில் உள்ள தரவுகளின்படி, ஏப்ரல் 19 ஆம் தேதி 1/2 ஆம் கட்ட பரிசோதனையை அந்நிறுவனம் தொடங்கியது. முதல் கட்ட ஆய்வில் 18-70 வயதுக்குட்பட்ட 120 ஆரோக்கியமான தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் வி தடுப்பூசி அடுத்த வாரம் முதல் குறைந்த அளவுகளில் கிடைக்கும். ஸ்புட்னிக் தடுப்பூசி இந்தியா வந்துவிட்டது. அடுத்த வார தொடக்கத்தில் இருந்து சந்தையில் கிடைக்கும். ஜூலை முதல், உற்பத்தி தொடங்கும் என்றும் ஆகஸ்ட்-டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் அந்நிறுவனம் 15.6 கோடி டோஸ்களை உற்பத்தி செய்யும் என எதிர்ப்பார்ப்பதாக கூறினார்
இந்த கட்டத்தில், உலகில் எல்லா இடங்களிலும், தடுப்பூசி விநியோகம் பற்றாக்குறையில் உள்ளது. இருப்பினும், இந்த மதிப்பீட்டை முதல் காலாண்டின் தொடக்கத்தில் (அடுத்த ஆண்டு) நீட்டித்தால், இந்த எண்ணிக்கை 3 பில்லியன் அளவுகள் அதிகமாகும். தடுப்பூசி என்பது தொற்றுநோய்க்கு எதிரான ஒரு முக்கியத் தூணாகும். அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த கால அவகாசம் எடுக்கும். இந்த யதார்த்தத்தை அனைவரும் ஏற்க வேண்டும். அமெரிக்காவால் அதன் மக்கள் தொகையில் 46 சதவீதம் பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் கொடுக்க முடிந்தது; 8.3 கோடி மக்கள் தொகை கொண்ட ஜெர்மனியில், 34 சதவீதம் பேருக்கு ஒரு டோஸ் அல்லது அதற்கு மேற்பட்டவற்றைப் பெற்றுள்ளனர். "எனவே, இது நேரம் எடுக்கும்," என பால் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.