விமானத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறைவு ஏன்? ஆய்வு முடிவுகள்

பயணிகள் விமான நிலையத்திற்குள் நுழைந்த நேரம் முதல் அவர்கள் சென்றடையும் விமான நிலையத்திலிருந்து வெளியேறும் வரை பயணம் முழுவதிலும் மாஸ்க் அணிந்திருக்கப் பரிந்துரை செய்திருக்கிறது.

Spread of corona virus in flight is low explained

Corona Virus Tamil News: விமானங்களில் கோவிட் -19 நோய்த்தொற்று ஏற்படுவதற்கான அபாயத்தைப் பற்றி அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (US Centers for Disease Control and Prevention (CDC)) இதழில் இரண்டு ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. என்றாலும், இந்த இரண்டு ஆய்வுகளும் கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இயங்கப்பட்ட விமானங்களைப் பகுப்பாய்வு செய்ததன் அடிப்படையில் வெளியானவை. அதாவது WHO, கொரோனா வைரஸ் பரவுதலை பேண்டமிக் நோயாக அறிவிப்பதற்கு முன்பு வெளியிடப்பட்டவை. அப்போது விமான நிறுவனங்கள் பயணிகளை மாஸ்க் அல்லது முகமூடி அணிய வேண்டும் போன்ற நெறிமுறைகளை அறிமுகப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது, சர்வதேச விமான பயண சங்கம் (International Air Travel Association-IATA), பயணிகள் விமான நிலையத்திற்குள் நுழைந்த நேரம் முதல் அவர்கள் சென்றடையும் விமான நிலையத்திலிருந்து வெளியேறும் வரை பயணம் முழுவதிலும் மாஸ்க் அணிந்திருக்கப் பரிந்துரை செய்திருக்கிறது.

ஷாப்பிங் சென்டர் அல்லது அலுவலகத்தை விட விமானத்தின் கேபின் காற்று அடிக்கடி மாற்றப்படுவதினால் விமானங்களில் தொற்றுநோய் பரவும் ஆபத்து குறைவாக இருக்கும்.

முதல் ஆய்வு

முதல் ஆய்வு, மார்ச் மாத தொடக்கத்தில் லண்டனில் இருந்து ஹனோய் செல்லும் 10 மணி நேர வணிக விமானத்தில் SARS-CoV-2-ன் பரவுதல் பற்றி மதிப்பிட்டது. இந்த ஆய்வின் ஆராய்ச்சியாளர்கள், “அறிகுறிகளுடன் பயணித்த ஒரு பயணியிடமிருந்து 10 மணி நேர நீண்ட பயணத்தில் பெரிதளவில் கோவிட் பரவுதல் ஏற்பட்டிருக்கிறது” என்று குறிப்பிட்டனர்.

இந்த விமானத்தில் 16 பணியாளர்கள் மற்றும் 201 பயணிகள் இருந்துள்ளனர். விமானத்தில் உள்ள 274 இருக்கைகளில், 28 பிசினஸ் வகுப்புகளாகவும், பிரீமியம் பொருளாதார வகுப்பில் 25 இடங்களாகவும், பொருளாதார வகுப்பில் 211 இடங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த விமானத்தில் இருந்த 201 பயணிகளில், 21 பிசினஸ் வகுப்பு (75 சதவீதம் ஆக்கிரமிப்பு), 35 பிரீமியம் பொருளாதாரம் (100 சதவீதம் ஆக்கிரமிப்பு) மற்றும் 145 பேர் பொருளாதார வகுப்பை (67 சதவீதம் ஆக்கிரமிப்பு) ஆக்கிரமித்துள்ளனர்.

Spread of corona virus in flight is low explained
Passengers wearing Personal protection suits arrives at DumDum Airport on Monday. July 06, 2020 .Flights from Delhi, Mumbai, Pune, Nagpur, Chennai and Ahmedabad restricted to Dum Dum Airport from Monday July 6, 2020, to July 19, 2020, amid the prevailing COVID-19 situation. Express photo by Partha Paul.

இந்த ஆய்வில், வியட்நாமில் இருந்து பயணித்த 27 வயதான தொழிலதிபர் ஒருவர்தான், கொரோனாவை பரப்பிய சாத்தியமான நபராக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பிசினஸ் வகுப்பில் அமர்ந்திருந்த இந்தக் குறிப்பிட்ட நபருக்கு, விமானம் புறப்படும் நேரத்தில் ஏற்கெனவே தொண்டை வலி மற்றும் இருமல் ஏற்பட்டிருக்கிறது. இறுதியில், விமானத்தில் இருந்த 15 பேர் கோவிட் -19 பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டது. இந்த 15 பேரில், 12 பேர் பிசினஸ் வகுப்பிலும், இருவர் பொருளாதார வகுப்பிலும், மீதமுள்ள நபர் பிசினஸ் வகுப்பில் விமான உதவியாளராகப் பயணம் செய்துள்ளனர். இவர்களில் 11 பேர் பாதிக்கப்பட்டவரின் இருக்கையிலிருந்து 2 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் அமர்ந்துள்ளனர்.

ஆனாலும், விமானம் எடுப்பதற்கு முன்னும் பின்னும் தொற்றுநோயைப் பரப்புவதற்கு வலுவான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதை ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். “விமான பயணத்தின்போது ஏரோசல் அல்லது டிராப்லெட் (droplet), நோய் பரவுவதற்கான பாதையை உருவாக்கியிருக்கலாம் அதிலும் குறிப்பாக பிசினஸ் வகுப்பில் அமர்ந்திருக்கும் நபர்களுக்கு நிச்சயம் இருந்திருக்கலாம்” என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இரண்டாவது ஆய்வு

இரண்டாவது ஆய்வில், ஜனவரி 23 முதல் ஜூன் 13 வரை ஹாங்காங்கில், கோவிட் -19-ஆல் பாதிக்கப்பட்டு ஆய்வகத்தால் உறுதிப்படுத்தப்பட்ட 1,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கான பொது பதிவுகளை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். கோவிட் -19-ஆல் பாதிக்கப்பட்ட நான்கு நபர்களைக் கொண்ட ஒரு குழுவை ஆய்வாளர்கள் அடையாளம் கண்டனர். இவர்கள் பாஸ்டனில் இருந்து மார்ச் 9 அன்று புறப்பட்டு மார்ச் 10-ம் தேதி ஹாங்காங்கிற்கு வந்து சேர்ந்தவர்கள். இந்த விமானம் 15 மணி நேரம் பயணத்தில் அதிகபட்சமாக 294 பயணிகளை ஏற்றிச் சென்றது.

இந்த நான்கு நபர்களில், இரண்டு கேபின் உறுப்பினர்கள் மற்றும் இரண்டு பயணிகள் இருந்தனர். இவர்களில், ஏ மற்றும் பி நோயாளிகள் திருமணமான தம்பதியர். ஏ நபர் பிசினஸ் வகுப்பில் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்திருந்தார் அதே நேரத்தில் அவருடைய மனைவி பி அவருக்கு நேர் எதிரே இருக்கும் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்துள்ளார். சி மற்றும் டி நோயாளிகள் இருவரும் விமான உதவியாளர்களாக இருந்துள்ளனர்.

Spread of corona virus in flight is low explained
Inside view of commercial airplane with lonely man traveler – Emergency travel concept about flight cancellation – Aerospace industry crisis with empty plane on bright azure filter

“ஏ மற்றும் பி பயணிகளில் ஒருவர் அல்லது இருவருமே வட அமெரிக்காவில் SARS-CoV-2 தோற்று ஏற்பட்டு, விமான பயணத்தின்போது சி மற்றும் டி விமான உதவியாளர்களுக்கு வைரஸை பரப்பியிருக்கலாம்” என்று ஆய்வாளர்கள் முடிவு செய்தனர். மேலும், சி நோயாளியிடமிருந்து டி நோய்த்தொற்றைப் பெற்றிருக்கலாம் என்றும் அவர்கள் முடிவு செய்கிறார்கள். “ஆனால் அவற்றின் சோதனை முடிவுகள் முதல் இன்குபேஷன் காலத்திற்குள் பாசிட்டிவாக இருந்ததால், ஏ அல்லது பி நோயாளியால் டி பாதிக்கப்பட்டிருக்கலாம்” என்று குறிப்பிட்டனர்.

விமானத்தில் தொற்றுநோயைப் பரப்புவது பற்றித் தெரிந்துகொள்ளவேண்டியவை

ஆரோக்கியமான பயணி, தொற்று வைரஸைச் சுமக்கும் ஒருவருக்கு மிக அருகில் அமர்ந்திருக்கும் சந்தர்ப்பங்களைத் தவிர பொதுவாக, விமானத்திற்குள் வைரஸ் தொற்று பரவும் அபாயம் குறைவாகவே கருதப்படுகிறது.

“பொதுவாகப் பாதிக்கப்பட்ட தனிநபரின் இருமல் அல்லது தும்மல் அல்லது தொடுதலின் விளைவாக… ஓர் விமானத்தில் அதே பகுதியில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு இடையே தொற்று பரவுதல் ஏற்படலாம். விமானக் காற்றோட்ட அமைப்பு சரியாக இயங்காத சூழ்நிலைகளில் இன்ஃப்ளூயன்ஸா போன்றவை மற்ற பயணிகளுக்கும் பரவ வாய்ப்புள்ளது” என்று நீர்த்துளிகள் மூலம் தொற்று பரவும் நிலை குறித்து WHO விளக்கமளித்துள்ளது.

விமானங்களில் குறைந்த விகிதத்தில் பரவுவதற்கான காரணம் என்ன?

விமான பரிமாற்றத்தின் குறைந்த விகிதங்களுக்கான காரணங்கள் முழுமையாகத் தெரியவில்லை என்றாலும், நேரடி தொடர்பு இல்லாதது, காற்றோட்டத்தின் சிறப்பியல்புகள் ஆகியவை சாத்தியமான சில காரணங்களாக இருக்கலாம் என்று IATA கூறுகிறது.

விமானங்களில் காற்றோட்டம் ஒரு மணி நேரத்திற்கு, 20-30 முறை காற்றின் மாற்றத்தை வழங்குகிறது என்று WHO கூறியுள்ளது. மேலும், பெரும்பாலான நவீன விமானங்களில் மறுசுழற்சி முறைகள் உள்ளன. அவை கேபின் காற்றில் 50 சதவீதம் வரை மறுசுழற்சி செய்ய முடியும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Corona virus tamil news spread of corona virus in flight is low explained

Next Story
நேருவை கேள்வி கேட்ட வாஜ்பாய்: 1962 சீனா ஆக்கிரமிப்பு நினைவுகள்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com