Corona Virus Test Dogs Research Tamil News : கடந்த ஒரு மாதத்தில், விஞ்ஞானிகளின் இரண்டு குழுக்கள் மனிதர்களில் கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கண்டறியும் ஸ்னிஃபர் நாய்கள் குறித்து தனித்தனியான கண்டுபிடிப்புகளை தெரிவித்துள்ளன. இரண்டு ஆவணங்களும் 90%-க்கும் அதிகமான துல்லிய முடிவை அறிவித்துள்ளன. தொற்றுநோய்களின் போது ஆராய்ச்சி மற்றும் பரிசோதனைக்கு உட்பட்டவை பற்றிய முதல் இரண்டு ஆய்வுகள் இவை அல்ல. அதற்கு முன்பே, பிற நோய்களையும் மருந்துகள் பொருட்களையும் கண்டறிய நாய்கள் பயிற்சி பெற்றன.
இதனால், எதிர்காலத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனையில் நாய்கள் சேர்க்கப்படுமா? கூட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண அவை உண்மையிலேயே பயனுள்ளதாக இருக்கும் என்பதற்கான சான்றுகள் இதுவரை சுட்டிக்காட்டுகின்றன. வழக்கமான சோதனைகளுக்கு உட்படுத்த வேண்டிய எண்ணிக்கையை குறைக்க இவை உதவுகின்றன.
இந்த புதிய ஆய்வுகள் என்ன?
கடந்த ஏப்ரல் மாதத்தில், பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கூட்டுப்பணியாளர்கள் PLOS One இதழில் ஒரு ஆய்வை வெளியிட்டனர். அதில், எட்டு லாப்ரடோர் ரெட்ரீவர்ஸ் மற்றும் ஒரு பெல்ஜிய மாலினாய்ஸ் உள்ளிட்ட பயிற்சி பெற்ற நாய்கள், SARS-CoV-2-க்கு சாதகமான நோயாளிகளின் சிறுநீர் மாதிரிகளை அடையாளம் கண்டு, வைரஸுக்கு நெகட்டிவ் முடிவுகளை பெற்றவர்களின் மாதிரிகளை பிரித்தன. அவர்கள் 96% துல்லியத்துடன் பாசிட்டிவ் மாதிரிகளைக் கண்டறிந்தனர். ஆனால், தவறான நெகட்டிவ் கண்டறியும் திறன் குறைவாக இருந்தது.
கடந்த வாரம், லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் (London School of Hygiene and Tropical Medicine (LSHTM)) ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கூட்டுப்பணியாளர்கள் இங்கிலாந்து அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட ஒரு வருட கால ஆய்வின் கண்டுபிடிப்புகளின் முன் பதிப்பை வெளியிட்டனர். பயிற்சியளிக்கப்பட்ட ஆறு நாய்கள், வாசனை மாதிரிகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை 94 துல்லியத்துடனும், நோய்த்தொற்று இல்லாத நபர்களை 92% துல்லியத்துடன் அடையாளம் காண முடிந்தது என்று அவர்கள் தெரிவித்தனர்.
கொரோனா வைரஸுக்கு வாசனை இருக்கிறதா?
பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வரும் கழிவுப்பொருட்களுக்கு ஒரு தனித்துவமான மணம் இருக்கிறது என்று பல்வேறு ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. நமது சிறுநீர், உமிழ்நீர் மற்றும் வியர்வை போன்றவை வொலடைல் கரிம சேர்மங்கள் எனப்படும் ரசாயனங்களை வெளியிடுகின்றன. ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா இல்லையா என்பதைப் பொறுத்து இந்த சேர்மங்கள் வெவ்வேறு மணங்களை கொண்டுள்ளன.
கடந்த டிசம்பரில், பிரெஞ்சு விஞ்ஞானிகள் PLOS One-ல் கொரோனா வைரஸைக் கண்டுபிடிக்கும் நாய்கள் குறித்த மற்றொரு ஆய்வை வெளியிட்டனர். "வைரஸ் நகலெடுக்கும் போது அல்லது உயிரணு அதன் 'நச்சு' மூலக்கூறுகளை உருவாக்கும்போது, குறிப்பிட்ட மூலக்கூறுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும், அவை உடலை வளர்சிதை மாற்றங்கள் அல்லது catabolites-ஆக விட்டுவிட வேண்டும்" என்று பிரான்சின் தேசிய கால்நடை பள்ளி ஆல்போர்ட்டின் பேராசிரியர் டொமினிக் கிராண்ட்ஜியனின் ஆய்வு, கடந்த டிசம்பர் மாதத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் மின்னஞ்சல் மூலம் கூறினார். "வெளியேற்றப்பட்ட காற்றில் SARS-CoV-2-க்கு குறிப்பிட்ட மூலக்கூறுகளை நாம் காணலாம்" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
நாய்களைத் தவிர, ஆர்கானிக் செமி-கண்டக்டர் சென்சார்கள் எனப்படும் சென்சார்களையும் இங்கிலாந்து ஆய்வு பயன்படுத்தியது. இது, அறிகுறியற்ற அல்லது லேசான அறிகுறிகள் உள்ளவர்களிடமிருந்தும், பாதிக்கப்படாத நபர்களிடமிருந்தும் வாசனைகளை வேறுபடுத்துகிறது.
ஏன் நாய்கள்?
மனிதர்களால் முடியாத இந்த வாசனையை அவர்களால் கண்டறிய முடியும். இங்கிலாந்தின் ஆய்வுக்காக நாய்களுக்கு பயிற்சியளித்த மருத்துவ கண்டறிதல் நாய்களின் கூற்றுப்படி, ஒரு நாயின் வாசனையின் உணர்வு அதன் மூக்கின் சிக்கலான அமைப்பு காரணமாக உயர்த்தப்படுகிறது.
பல ஆய்வுகள் நாய்கள் எவ்வாறு தங்களின் வாசனை உணர்வு மூலம் பல்வேறு விதமான நோயை அடையாளம் கண்டுள்ளன என்று தெரிவிக்கின்றன. பி.எம்.ஜே.யில் 2004-ம் ஆண்டு நடத்திய ஆய்வில், பயிற்சி பெற்ற நாய்கள் 54 முறை 22-ல் சிறுநீர்ப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிறுநீர் மாதிரிகளை சரியாக அடையாளம் கண்டுள்ளன. அறிகுறிகள் தோன்றுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, பயிற்சி பெற்ற நாய்களால் பார்கின்சன் நோயைக் கண்டறிய முடியும் என்பதற்கான ஆதாரங்களை மருத்துவக் கண்டறிதல் நாய்கள் (Medical Detection Dogs) மேற்கோள் காட்டுகின்றன. கான்சியாவில் மலேரியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை தங்கள் கால் வாசனையிலிருந்து நாய்கள் எவ்வாறு அடையாளம் கண்டன என்பதை லான்செட்டில் 2019-ம் ஆண்டு நடத்திய ஆய்வில் விவரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு துபாய் விமான நிலையம் பயணிகளிடையே இத்தகைய தொற்றுநோயைக் கண்டறிய நாய்களை நிலைநிறுத்திய உலகின் முதல் நாடு என்ற பெயரை பெற்றது. பின்லாந்து மற்றும் லெபனான் விமான நிலையங்களிலும் இத்தகைய சோதனைகளை நடத்தியுள்ளன. அங்கு பயணிகள் வியர்வை மாதிரிகளில், தொற்றுநோயை நாய்கள் கண்டறிந்துள்ளன.
புதிய ஆய்வுகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன?
அமெரிக்க ஆய்வில், SARS-CoV-2 பாசிட்டிவ் நோயாளிகளிடமிருந்து சிறுநீர் மாதிரிகளுக்கு பதிலளிக்கவும், எதிர்மறை மாதிரிகளிலிருந்து நேர்மறையை அறியவும் நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மூன்று வாரங்களுக்குப் பிறகு, ஒன்பது நாய்களும் SARS-CoV-2 நேர்மறை மாதிரிகளை அடையாளம் காண முடிந்தது. இருப்பினும், அவர்கள் சில நேரங்களில் எதிர்மறை மாதிரிகளுக்கும் பதிலளித்தனர்.
இங்கிலாந்து ஆய்வில், 1,000 பாசிட்டிவ் மற்றும் 2,000 நெகட்டிவ் என 3,000-க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து வாசனை மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. நாய்களுடன் இரண்டு முறை கண்கள் கட்டியபடி சோதனை நடத்தப்பட்டது. நேர்மறையான நிகழ்வுகளைக் கண்டறிவதில் அவர்கள் 94% துல்லியத்துடன் கண்டறிந்துள்ளனர். இது, நிலையான ஆர்டி-பி.சி.ஆர் சோதனைக்கு 97.2% உடன் ஒப்பிடுகிறது.
இந்த கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் கணித மாடலிங், நிஜ வாழ்க்கை அமைப்பில் நாய்கள் எவ்வாறு செயல்படும் என்பதை மதிப்பிட்டுள்ளன. பயிற்சி பெற்ற ஸ்னிஃபர்கள் ஒரு விமான நிலையத்தில் 300 பயணிகளுக்கு மேல் 30 நிமிடங்களுக்குள் ஸ்க்ரீனிங் செய்ய முடியும் என்று மாடலிங் பரிந்துரைத்தது.
RT-PCR சோதனைகளுக்கு நாய்கள் மாற்றாக இருக்கக்கூடும் என்று அர்த்தமா?
இங்கிலாந்தின் ஆய்வு ஆசிரியர்கள் இதை மாற்றாகக் காட்டிலும் ஒரு நிரப்பியாக வழங்குகிறார்கள். அதாவது, LSHTM-ன் ஒரு அறிக்கையில், ஒரு விமான நிலையத்தில் நாய்கள் பாதிக்கப்பட்ட பயணிகளை வெளியேற்றிவிட்டால், இவை மட்டுமே உறுதிப்படுத்த RT-PCR சோதனைகளை எடுக்க வேண்டும். இந்த அணுகுமுறை, பயிற்சி பெற்ற நாய்கள் மற்றும் உறுதிப்படுத்தும் பி.சி.ஆர் சோதனை ஆகியவற்றில் அறிகுறி மற்றும் அறிகுறியற்ற கேரியர்களில் கிட்டத்தட்ட 91% தொற்றுநோய்களைக் கண்டறிய முடியும் என்று மாடலிங் கண்டறிந்தது. அறிகுறி நிகழ்வுகளை மட்டும் தனிமைப்படுத்துவதன் மூலம் கண்டறியப்படும் விகிதத்தின் இரு மடங்கு இது.
மீண்டும் இந்த ஆய்வுகள் ஒரு சோதனை சூழலில் நடத்தப்பட்டன. அங்கு நாய்கள், கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் பயிற்சி பெற்றன. இங்கிலாந்து ஆய்வில் மாடலிங் செய்வதைத் தாண்டி, பயிற்சி பெற்ற நாய்களின் செயல்திறன் ஒரு நிஜ உலக அமைப்பில் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
கடந்த நவம்பரில், கொரோனா வைரஸைக் கண்டுபிடிப்பதில் ஸ்னிஃபர் நாய்களின் பங்கு குறித்து நேச்சர் ஒரு கட்டுரையை வெளியிட்டது. "அவர்கள் (நாய்கள்) ஒரு பி.சி.ஆர் இயந்திரத்தை மாற்ற முடியும் என்று யாரும் கூறவில்லை. ஆனால் அவை மிகவும் நம்பிக்கைக்குரியவை" என்று ஜெர்மனியில் இதுபோன்ற ஒரு ஆய்வுக்கு தலைமை தாங்கும் கால்நடை நரம்பியல் நிபுணர் ஹோல்கர் வோல்க் மேற்கோளிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.