Blood samples from volunteers participating in the National Institutes of Health-funded Moderna COVID-19 vaccine third phase clinical trail wait to be processed in a lab at the University of Miami Miller School of Medicine in Miami, Fla., Wednesday, Sept. 2, 2020 in Miami. (AP Photo/Taimy Alvarez)
Coronavirus Vaccine Tracker: கொரோனா வைரஸ் தடுப்பூசியின் வளர்ச்சி மற்றும் உற்பத்தியை விரைவுபடுத்துவதற்கும் அனைவருக்கும் அதனைக் கொண்டு சேர்ப்பதற்கும் உலக சுகாதார அமைப்பின் முயற்சி, இதுவரை 3 பில்லியன் டாலர் முதலீடுகளை மட்டுமே பெற்றுள்ளது. இதற்குக் குறைந்தபட்சம் 38 பில்லியன் டாலர்கள் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவாக்ஸ் (COVAX) என அழைக்கப்படும் இந்த துவக்க முயற்சி, கொரோனா வைரஸ் தடுப்பூசி கோருபவர்களின் நம்பிக்கைக்குரிய வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான வளங்களைத் திரட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இதில் பங்கேற்கும் அனைத்து நாடுகளுக்கும் சமமாக அணுகக்கூடியதாக இருக்கிறதா என்பதையும் உறுதி செய்கிறது. இந்த செயல், அமெரிக்கா போன்ற சில வளர்ந்த நாடுகள் தங்களுக்கு விருப்பமான தடுப்பூசிகளின் வளர்ச்சிக்கு நிதி அளித்து, அவர்களின் சோதனை வெற்றியடைந்தால், முன்கூட்டியே முன்பதிவு உத்தரவாதம் அளிக்கப்பட்ட பொருள்களாகப் பெறப்படும் நடவடிக்கைகளுக்கு மாற்றாக இருக்கும்.
Advertisment
கோவக்ஸ் வசதி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால், இறுதியாகத் தாயாராகப்போகும் தடுப்பூசிகள், வளர்ச்சியில் பின்தங்கிய நாடுகள் வரை அனைவர்க்கும் சென்றடைகிறதா என்பதை உறுதி செய்யும். சில நாடுகளில் உள்ள அனைத்து மக்களுக்குப் பதிலாக எல்லா நாடுகளிலும் இருக்கும் தேவை உள்ளவர்களுக்கு மட்டுமே முதலில் தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் உறுதியளிக்கிறது.
ஏராளமான நாடுகள் இதற்கு ஆர்வம் காட்டிய போதிலும், இந்த முயற்சிக்காகக் கிடைத்த முதலீடுகள் திருப்திகரமாக இல்லை. இது தொண்டு அல்ல. ஒவ்வொரு தேசத்தின் நலனுக்காக மேலும் சில நாடுகள் பங்களிப்பு செய்யுமாறு WHO-ன் பொது இயக்குநர் டெட்ரோஸ் கெப்ரேயசஸ் (Tedros Ghebreyesus) வேண்டுகோள் விடுத்தார்.
"இதுவரை, இதற்கு 3 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் வெற்றிகரமான தொடக்கக் கட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், இது அளவீடு மற்றும் தாக்கத்திற்குத் தேவையான மீதமுள்ள 35 பில்லியன் டாலர்களில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே. வேகத்தை நிலைநிறுத்தவும், குறிப்பிட்ட இலக்குக்குள் மருந்தைக் கண்டுபிடிக்கவும் 15 பில்லியன் டாலர் உடனடியாக தேவைப்படுகிறது." என்று டெட்ரோஸ் கூறினார்.
"நாங்கள் ஒரு முக்கிய மையப் புள்ளி. நாடுகளின் அரசியல் மற்றும் நிதி உறுதிப்பாட்டில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எங்களுக்குத் தேவை. இது சரியான செயல் மட்டுமல்ல, புத்திசாலித்தனமான விஷயமும்கூட. ஓர் பயனுள்ள தடுப்பூசி விநியோகிக்கப்பட்டு, சர்வதேச பயண மற்றும் வர்த்தகம் முழுமையாக மீட்டமைக்கப்பட்டதும், பொருளாதார ஆதாயங்கள் 38 பில்லியன் டாலர் முதலீட்டை விட அதிகமாக இருக்கும் என்று எங்கள் மதிப்பீடுகள் கூறுகின்றன" என டெட்ரோஸ் குறிப்பிடுகிறார்.
கோவாக்ஸ் வசதி முழுமையாகச் செயல்பட்டால், அடுத்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் இரண்டு பில்லியன் டோஸேஜ் (doses) கிடைப்பதை உறுதிசெய்ய முடியும் என்றும் கூறினார் பொது இயக்குநர் டெட்ரோஸ்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிப்பில் இதுவரை நடந்தவை:
*முன் மருத்துவ அல்லது மருத்துவ பரிசோதனைகளில் 182 தடுப்பூசி வேட்பாளர்கள் பங்குபெற்றனர்
*அவர்களில் 36 பேர் மருத்துவ பரிசோதனைகளில் ஈடுபட்டனர்
*இறுதிக் கட்டங்களில் அதாவது மூன்றாம் கட்ட மனித சோதனைகளில் ஒன்பது பேர் இருந்தனர்
*இந்தியாவில் குறைந்தது எட்டு தடுப்பூசிகள் உருவாக்கப்படுகின்றன. இவற்றில் இரண்டு முதல் கட்ட சோதனையை முடித்து இரண்டாம் கட்ட சோதனையில் நுழைந்துள்ளன.
அதிகம் பேசப்பட்டவை:
* அஸ்ட்ராசெனெகா (AstraZeneca) / ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
* மாடர்னா
* ஃபைசர் (Pfizer) / பயோஎன்டெக் (BioNTech)
* ஜான்சன் & ஜான்சன்
* சனோஃபி / கிளாக்சோ ஸ்மித் க்லைன்
* நோவாவக்ஸ்
* மாஸ்கோவில் உள்ள கமலேயா நிறுவனம் உருவாக்கிய ரஷ்ய தடுப்பூசி
*மூன்றாம் கட்ட சோதனைகள் நிறைவடையாமல் மூன்று தடுப்பூசிகள் சீனாவில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றிற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அவசரக்கால பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"