கொரோனா பரவலில் ஏ.சி-யின் பங்கு என்ன? அவசியமான நெறிமுறைகள் இங்கே!
ஏசி வசதி கொண்ட ஓட்டல்களில், டேபிள்கள் அதிக இடைவெளியில் அமைக்கப்பட வேண்டும், போதிய வெளிச்சம், காற்றோட்ட வசதி செய்யப்பட்டிருப்பின், கொரோனா பரவலை கட்டுப்படுத்த இயலும்
ஏசி வசதி கொண்ட ஓட்டல்களில், டேபிள்கள் அதிக இடைவெளியில் அமைக்கப்பட வேண்டும், போதிய வெளிச்சம், காற்றோட்ட வசதி செய்யப்பட்டிருப்பின், கொரோனா பரவலை கட்டுப்படுத்த இயலும்
coronavirus, coronavirus and ac temperature, covid 19, covid-19 heat, coronavirus ac guidelines, air conditioner during covid, ac guidelines during coronavirus, air conditioners and coronavirus, indian express news
கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமாக உள்ள இந்த நேரத்தில், கோடைகாலமும் துவங்கியுள்ளது. இந்த நேரத்தில், ஏசியை பயன்படுத்தும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். கொரோனா வைரஸ், அதிக வெப்பநிலையிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பல ஆய்வுகள் எடுத்துரைத்துள்ள வண்ணம் உள்ளன. ஆனால், அதன் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை.
Advertisment
கொரோனா தொற்று உள்ளவர்களிடமிந்து வெளியாகும் நீர்த்திவலைகள், ஏசியிலிருந்து வரும் குளிர்ந்த காற்றின் மூலம், பரவி மற்றவர்களுக்கு தொற்றை ஏற்படுத்தும் என்று சீன ஆய்வியலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்களால், கொரோனா வைரசுக்கும், ஏசிக்கும் உள்ள தொடர்பை விவரிக்க இயலவில்லை.
இந்த நிலையில், மத்திய அரசு, ஏசி பயன்படுத்துதலில் உள்ள நெறிமுறைகளை வகுத்துள்ளது. இதன்படி ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை மற்றும் ஈரப்பதம், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் என்பதனடிப்படையில், இந்த வழிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
Indian Society of Heating Refrigeration and Air Conditioner Engineers (ISHRAE) இந்த அமைப்பு, இந்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது
நெறிமுறைகள் என்ன?
வீடுகளில் ஏசி பயன்படுத்தப்படின், அதன் வெப்பநிலை 24 முதல் 30 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலேயே இருக்க வேண்டும். ஈரப்பத அளவு 40 சதவீதம் முதல் 70 சதவீத அளவினதாக இருக்க வேண்டும்.
ISHRAE அமைப்பு, சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட 100 நகரங்களிலிருந்து தரவுகளை பெற்று ஆய்வு மேற்கொண்டு இந்த வழிமுறைகளை வகுத்துள்ளது. இன்புளுயான்சா தொற்று விவகாரத்தில் அதிக வெப்பநிலை , அதிக ஈரப்பதம் உள்ளிட்ட காரணிகள், இன்புளுயான்சா பாதிப்பை குறைத்ததை இதன்மூலம் தெரியவந்தது.
பல்வேறு RH அளவுகளை கொண்ட வைரல் கல்சர்களை, குறைந்த வெப்பநிலை (7-8 டிகிரி செல்சியஸ்), மிதமான வெப்பநிலை (20.5-24 டிகிரி செல்சியஸ், அதிக வெப்பநிலை 30 டிகிரி செல்சியசிற்கு மேல் இன்புளுயான்சா வைரஸ்களை வைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
கொரோனா வைரஸ், 4 டிகிரி வெப்பநிலையில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் 14 நாட்களும், 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் ஒருநாள் காலஅளவிற்கும், 56 டிகிரி செல்சியசில் 30 நிமிடங்கள் கால அளவிற்கே SARS-CoV-2 வைரஸ் உயிர்வாழும், அதன்பின்னர் அது செயலற்றதாகி விடும் என்பதை ISHRAE ஆய்வில் கண்டறிந்தது.
ஈரப்பத தன்மையின் முக்கியத்துவம்
கொரோனா வைரசின் தொற்று பாதிப்பை ஈரப்பதம் ;நிர்ணயிப்பதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். சுவாசப்பாதையில் ஏற்படும் தொற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நடவடிக்கைகளில் காற்றில் உள்ள ஈரம் முக்கிய பங்கு வகிக்கிறது. சுவாச பாதையின் மேற்பக்கத்தில் உள்ள சளி அடுக்குகளின் ஈரப்பதம் கொண்ட அமைப்புகள், மூச்சுக்குழல், குரல்வளை பகுதிகளில் பெரிய பொருட்கள் செல்வதை தடுக்கின்றன. சுவாச பாதையின் கீழ்புறத்தில் உள்ள மூச்சுக்குழாய்கள் மற்றும் ஆல்வியோலிகள் சிறிய அந்நிய பொருட்களை தடுக்கின்றன.
நாம் வறண்ட காற்றை சுவாசிக்கும் போது, நுரையீரலில் உள்ள சளி அடுக்குகளும் வறண்டு போகும். வறண்ட காற்றில் உள்ள அழுக்கு, தூசி போன்ற பொருட்கள், சுவாச பாதையில் உள்ள சிறு முடி, சிலியா உள்ளிட்டவைகளால் தடுக்கப்படும், இவைகள் உள்ளே நுழைந்துவிட்டால், நுரையீரல் சிலநேரம் செயலற்றதாகி விடும் நிலையும் ஏற்பட்டுவிடும். மனித உடலில் 40 முதல் 70 சதவீத ஈரப்பதமே, நோயை உண்டாக்கும் வைரஸ்கள், பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிரிகளை தடுக்க ஏதுவான சூழல் ஆகும். 80 சதவீத ஈரப்பதம், கொரோனா வைரசை, செயலிழக்க செய்ய போதுமான சூழல் என்று ISHRAE மேற்கோள் காட்டியுள்ளது.
வறண்ட சூழலில், ஈரப்பதம் 40 சதவீதத்திற்கு கீழ் குறையாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு ஏசியிலிருந்து வெளியேறும் நீரை, நாம் அந்த அறையிலேயே வைத்திருப்பதன் மூலம், ஈரப்பதம் 40 சதவீத்திற்கு கீழ் குறையாமல் இருக்கும்.
ஏசி சாதனத்தில் இருந்து வெளியேறும் குளிர்ந்த காற்று அறையை குளிர்விக்கும்போதும், அறையின் ஜன்னல்களை சிறிது திறந்து வைத்திருந்தால், இயற்கையான காற்று பரிமாற்றம் ஏற்பட வழிவகுக்கும். இயற்கையான காற்று ஏசியில் உள்ள பில்டர்களினால் சுத்திகரிக்கப்பட்டு அது குளிர்ந்த காற்றாக மாறும். அதேநேரத்தில் சமையலறை, கழிப்பறைகளில் உள்ள எக்சாஸ்ட் பேனை இயக்க வைப்பதன் மூலம், காற்றில் உள்ள அழுக்குகளை நீக்க முடியும்.
கொரோனா வைரசிற்கும் ஏசிக்கும் உள்ள தொடர்பு
ஏசி வசதி உள்ள ஓட்டலில், 3 பேர் உணவருந்தும்போது அவர்களிடமிருந்து வெளியேறும் நீர்த்திவலைகளின் மற்றவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக குவான்சு மாகாணத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்தது. இதற்கு மாற்றாக, அந்த ஓட்டலில், டேபிள்களுக்கு இடையே உள்ள இடைவெளி அதிகரிக்கப்பட்டு, தேவையான காற்றோட்டத்திற்கு வசதி செய்யப்பட வேண்டும்.
இந்த ஓட்டலில் உணவருந்திய 3 குடும்பங்களை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது . வுஹான் பகுதியில் இருந்து வந்த 3 பேரின் மூலம், மற்ற இரண்டு டேபிள்களில் அமர்ந்திருந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது ஆய்வில் தெரியவந்தது.
தொற்று உள்ளவர்களிடமிருந்து வெளியேறிய நீர்த்திவலைகள் குளிர் காற்றில் சிறிது தொலைவே பயணித்து மற்றவர்களுக்கு தொற்றை ஏற்படுத்திவிடுகின்றன.
எனவே ஏசி வசதி கொண்ட ஓட்டல்களில், டேபிள்கள் அதிக இடைவெளியில் அமைக்கப்பட வேண்டும், போதிய வெளிச்சம், காற்றோட்ட வசதி செய்யப்பட்டிருப்பின், கொரோனா பரவலை கட்டுப்படுத்த இயலும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil