கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களை பிரிஹன்மும்பை மாநகராட்சிஙநிர்வாகம், எவ்வித சடங்குகளும் இல்லாமல், எரியூட்ட உத்தரவிட்டிருந்தது. இடம் பெரியதாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே, புதைக்க அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு ஏன் அறிமுகப்படுத்தப்பட்டது?
மும்பை மாநகராட்சி ஆணையர் 1897 தொற்றுநோய் சட்டத்தின் கீழ், கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையிலான சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். கொரோனா நோயாளிகளை புதைக்கும் பட்சத்தில், அவர்களிடமிருந்து அதிகளவிலான பேருக்கு இந்த தொற்று ஏற்படுவதோடு மட்டுமல்லாது, இந்த கல்லறைக்கு அருகில் உள்ள பகுதியினருக்கும் தொற்று பரவ வாய்ப்புள்ளது.
மும்பை இந்துஜா மருத்துவமனையில் 85 வயது மருத்துவர் ஒருவர் கொரோனா வைரஸ் தாக்குதலில் பலியானார். மார்ச் 27ம் தேதி, இவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், பொதுத்துறை பணியாளர்களின் உதவி இல்லாமல், அந்த உடலை குடும்பத்தினர் புதைத்துவிட்டனர். இது பெரும் சர்ச்சையாகவே, பெரிய இடங்கள் இருந்தால் மட்டுமே, உடலை புதைக்க வேண்டும், இல்லையெனில், எந்த மதத்தினராக இருந்தாலும், எரியூட்ட வேண்டும் என்று பிரிஹன்மும்பை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
உடல்களை மின்சாரம் அல்லது குழாய் முறையிலான தகனங்களின் மூலமே எரியூட்டப்பட வேண்டும். உடல் சிதைவடைவதற்கு முன்னதாகவே பிளாஸ்டிக்கினால் நன்கு சுற்றிவிட வேண்டும். இதனால், உடல் சிதைவடைவது தாமதப்படுத்தப்படுகிறது. உடல்களை அந்த பிளாஸ்டிக் உடனேயே எரியூட்டிவிட வேண்டும். இதனால், தொற்று பரவுவது முற்றிலும் தடுக்கப்பட்டு விடும். இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில், 5 பேருக்கு மேல் கலந்துகொள்ளக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உடல்களை புதைப்பதற்கு பெரிய இடங்கள் இருந்தால் மட்டுமே, அதனை புதைக்க அனுமதிக்கப்படுவர் என்றும், கல்லறைகளுக்கு அருகில் உள்ள பகுதிகளுக்கு எவ்வித தொற்று அபாயமும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். உடலை புதைக்கும் கல்லறையின் அளவு எத்தகைய அளவில் இருக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்படவில்லை.
இதுதொடர்பாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்த மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் கூறியதாவது, கொரோனா வைரசால் இறந்தவர்களின் உடலை புதைப்பதற்கு மத்திய அரசு வகுத்துள்ள நெறிமுறைகளை மகாராஷ்டிரா அரசு பின்பற்ற உள்ளது. இறந்தவர்களின் உடல்களை எரியூட்டவோ அல்லது புதைக்கவோ அவர்களுக்கு முழு உரிமை உண்டு. உடல்கள் புதைக்கப்படும் பட்சத்தில், அருகில் வசிப்பவர்களுக்கு இதன்மூலம் தொற்று ஏற்படாமல் இருக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இறந்தவர்களின் உடல்கள் காற்றுபுகா வண்ணம் பிளாஸ்டிக்கினால் முழுவதும் சுற்றப்பட வேண்டும். முகத்தை மற்றவர்கள் பார்க்க சிறிது இடைவெளி விடலாம். இறந்தவர்களின் உடலை தொடவோ, குளிப்பாட்டவோ, கட்டிப்பிடித்து அழவோ யாரையும் அனுமதிக்கக்கூடாது. இறுதிச்சடங்கு நிகழ்வில், அவரவர் முறைப்படி மந்திரம் ஓதுதல், புனித நீர் தெளித்தல் முதலியவற்றை மேற்கொள்ளலாம். ஆனால், யாரும் உடலை தொட்டுவிடக்கூடாது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் உடல்களை எம்பால்மிங், பிரேத பரிசோதனை செய்யப்படுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அவர்களது உடலில் காயங்கள் ஏதாவது இருப்பின் 1 சதவீத ஹைட்ரோகுளோரைடு கரைசலால் பதப்படுத்த வேண்டும். வாய், மூக்கு பகுதியில் இருந்து ஏதாவது கசிவு வருவது தெரிந்தால், உடனடியாக காற்று புகா பிளாஸ்டிக்கினால் அந்த பகுதியை முழுவதும் சுற்றிவிட வேண்டும்.
பிளாஸ்டிக்கினால் சுற்றப்பட்ட உடலை, கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்திட வேண்டும். உடலை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தகுந்த பாதுகாப்புடனே கொண்டு செல்ல வேண்டும். உடன் செல்பவர்களும் தகுந்த பாதுகாப்பு முறையினை செய்துகொள்ள வேண்டும்.
உடலை புதைப்பதால், தொற்று பாதிப்பு அதிகமா?
இறந்தவர்களின் உடலில் எஞ்சியிருக்கும் கொரோனா மற்றும் ஹெச்ஐவி வைரசால், மற்றவர்களுக்கு அதிக தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடலை புதைக்கும்பட்சத்தில் அவர்களது உடல் முழுவதும் சிலீடப்பட்டிருக்க வேண்டும். இறந்தபின் ஒருவரது உடல், முழுவதுமாக சிதைவடைய 7 முதல் 10 நாட்கள் ஆகும். அவரின் உடலிலுள்ள திரவங்கள் உலர 3 முதல் 4 நாட்கள் ஆகும். புதைக்கப்பட்டவர்களின் உடலில் உள்ள வைரஸ்கள், திரவத்தின் மூலம் வெளியாகி நிலத்தடி நீருடன் இணைய வாய்ப்புள்ளது. ஆனால், இதன்காரணமாக, மற்றவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதற்கான ஆதாரமில்லை என்று மகாராஷ்டிரா சுகாதார சேவை இணை இயக்குனர் டாக்டர் சதீஷ் பவார் தெரிவித்துள்ளார்.
உடல் எரிக்கப்பட்விட்டால், அதன் சாம்பலில் அந்த வைரஸ் இருக்க வாய்ப்பில்லை. மின் தகன இடத்தில் வேலை செய்பவர்களுக்கு மட்டும் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ளும்பட்சத்தில் இறந்தவர்களின் உடலை எரிக்கவோ அல்லது புதைக்கவோ எவ்வித தடையுமில்லை. இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளின்போது மட்டும் அதிகளவிலான மக்கள் சேராமல் இருப்பதும் தொற்று பரவலை கட்டுப்படுத்தும்.
உடல்களை எத்தனை மணிநேரத்திற்குள் புதைக்கவோ அல்லது எரிக்கவோ வேண்டும்?
இறந்தவர்களின் உடல்களை பிணவறையில் இருந்து வெளியே கொண்டு வந்தவுடனே, உடனடியாக 4 முதல் 6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு கொண்டுவந்துவிட வேண்டும். பின் இறுதிச்சடங்குகளை உடனடியாக மேற்கொண்டுவிட வேண்டும்.
பயோமெடிக்கல் கழிவுகளை எரிக்க தேவையான 800 டிகிரி செல்சியஸ வெப்பநிலையில், உடலை எரித்துவிட வேண்டும் என்று மும்பை கெம் மருத்துவமனையின் தடயவியல் துறை தலைவர் டாக்டர் ஹரீஷ் பதக் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.