Advertisment

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு ஆண்கள் தான் அதிக இலக்கா?. இந்த என்சைமின் அளவும் முக்கிய காரணமா?

ACE2 என்சைம், நுரையீரல் செல் திசுக்களில் அதிகமாக காணப்படும்போது தான் நுரையீரல் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus, coronavirus men, men affected by coronavirus, covid 19, men's enzyme, indian express,coronavirus news, coronavirus tamil news, coronavirus tamil nadu news, coronavirus chennai news, coronavirus Tamil nadu, coronavirus outbreak

coronavirus, coronavirus men, men affected by coronavirus, covid 19, men's enzyme, indian express,coronavirus news, coronavirus tamil news, coronavirus tamil nadu news, coronavirus chennai news, coronavirus Tamil nadu, coronavirus outbreak

கொரோனா வைரஸ் பாதிப்பு பெண்களை காட்டிலும் ஆண்களுக்கே அதிகளவில் ஏன் ஏற்படுகின்றது என்பது தொடர்பான ஆய்வுகள், ஆராய்ச்சிகள் தொடர்ந்து வரும் நிலையில், இருபாலரிடம் உள்ள ரத்தத்தில் உள்ள ஒரு முக்கியமான என்சைமின் அளவே இதற்கு காரணமாக உள்ளதாக ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

ஐரோப்பிய மெடிக்கல் ஜெர்னலில் இதுகுறித்த ஆய்வுக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ரத்தத்தில் உள்ள ACE2 என்ற என்சைமின் அளவே ஆண், பெண் இடையே கொரோனா பாதிப்புக்கு காரணமாக அமைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில், ACE2 என்ற என்சைமிற்கு உள்ள தொடர்பு வரையறுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ், தொற்று ஏற்பட்ட மனிதரின் உடற்செல்லில் ஒட்டிக்கொள்ளும்.

publive-image

ஐரோப்பிய நாடுகளிலிருந்து இதய பலவீனமடைந்தவர்களின் ரத்தத்திலிருந்து இந்த ACE2 என்சைமின் அளவு குறித்த ஆய்வு நடத்தப்பட்டிருந்தது. பல்லாயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்களிடம் நடத்திய ஆய்வில், பெண்களை விட ஆண்களிடம் தான் ரத்தத்தில் இந்த ACE2 என்சைமின் அளவு அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது.

இதய செயலிழப்பு நோயாளிகள், RAAS inhibitors போன்ற மருந்துகளை உட்கொள்வதினால், அவர்களது ரத்தத்தில் ACE2 என்சைமின் அளவு குறைவாகவே உள்ளது. சில ஆய்வுகளில், RAAS inhibitors போன்ற மருந்துகள், ACE2 என்சைமின் அளவை ரத்த பிளாஸ்மாவில் அதிகரித்து விடுகின்றன. இந்த என்சைமின் அளவு அதிகரித்ததனாலேயே, அவர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரையறைகள்

ஐரோப்பிய இதயநோய் இயல் சொசைட்டி இந்த ஆய்வின் வரையறைகளாக குறிப்பிட்டுள்ளதாவது, இந்த ஆய்வு, பிளாஸ்மாவில் உள்ள ACE2 என்சைமின் அளவு ஒன்றையே கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளது. ACE2 என்சைம், நுரையீரல் திசுக்கள் உள்ளிட்ட உடலின் பல்வேறு செல்களில் உள்ள திசுக்களிலும் காணப்படுகிறது. ரத்தத்தினுள் உள்ள அளவிலேயே, மற்ற இடங்களிலும் இருக்கும் என்பதற்கு எவ்வித ஆதாரமுமில்லை.

 

publive-image

ACE2 என்சைம், நுரையீரல் செல் திசுக்களில் அதிகமாக காணப்படும்போது தான் நுரையீரல் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுகள் குறிப்பாக, இதய செயலிழப்பு நோயாளிகளிடமே நடத்தப்பட்டுள்ளது. இதில் முக்கிய விஷயம் யாதெனில், அவர்கள் யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு RAAS inhibitors மருந்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து இந்த ஆய்வில் எவ்வித உறுதியான முடிவும் தெரிவிக்கப்படவில்லை என்று ஐரோப்பிய இதயநோய் இயல் சொசைட்டி தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Corona Virus Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment