கொரோனா பாதிப்பு இரட்டிப்பு விகிதம் : அன்றும் இன்றும்
Corona doubling time : கொரோனா விவகாரத்தில் கேரள அரசின் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, சர்வதேச நாடுகள் பலவும் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Corona doubling time : கொரோனா விவகாரத்தில் கேரள அரசின் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, சர்வதேச நாடுகள் பலவும் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
coronavirus, coronavirus news, covid 19 tracker, covid 19 india tracker, coronavirus latest news, covid 19 india, coronavirus latest news, coronavirus india, coronavirus india news, coronavirus india live news, coronavirus in india, coronavirus in india latest news, coronavirus latest news in india
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு கடந்த மார்ச் 24ம் தேதி அமல்படுத்தப்பட்ட தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவின் பயனாக, பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் காலம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
Advertisment
ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர், 3.4 நாட்கள் இடைவெளியில் பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்திருந்த நிலையில், ஊரடங்கிற்கு பின்னர் தொற்று முழுவீச்சில் கட்டுப்படுத்தப்பட்டு பாதிப்பு எண்ணிக்கை இரண்டு மடங்காக 10.77 நாட்கள் ஆகியுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரட்டிப்பு நேரம் என்ற கொள்கை, சர்வதேச நிதி அடிப்படையில் வகுக்கப்பட்டு வருகிறது. ஒரு நேரத்தில் நாம்செய்யும் முதலீடு இரண்டு மடங்காக அதிகரிக்கும். அந்த குறிப்பிட்ட நேரத்தையே நாம் பெரும்பாலும் இரட்டிப்பு நேரம் என்று அழைக்கிறோம்.
தொற்றுநோய் விவகாரத்தில் இரட்டிப்பு நேரம் என்பது, ஒரேநாளில் ஏற்படும் பாதிப்பை பொறுத்து வரையறுக்கப்படுகிறது.
Advertisment
Advertisements
100 பேர் பாதிப்புக்குள்ளாகியிருந்த நிலையில், முதல்நாள் அதன் எண்ணிக்கை 200 இரண்டாம் நாள் 400 3ம் நாள் 800 என அதிகரிப்பதையே நாம் இரட்டிப்பு நேரம் என்று இங்கு அழைக்கிறோம். ஆனால் இதுவே இரட்டிப்பு விகிதம் 3 நாட்களாக இருக்கும் பட்சத்தில் (100 பேருடன் இருந்த பாதிப்பு 3வது நாள் அன்று 200 ஆக அதிகரித்தது) அதன் இரட்டிப்பு விகிதத்தை நாம் முன்கூட்டிய அறிவிக்க முடியாது.
புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை பொறுத்தே, நாம் இரட்டிப்பு விகிதத்தை கணக்கிட முடியும்.
சிலநேரங்களில், நோயின் பாதிப்பு அதிகரித்தோ அல்லது குறைந்தோ இருக்கும். அந்த நேரத்தில், நோய்த்தொற்று பரவல் குறித்து நாம் தீர்க்கமான முடிவுகளுக்கு வர இயலாத நிலை நிலவும். பாதிப்பின் இரட்டிப்பு விகிதம் பொதுவாக 5 , 7, 10 நாட்கள் போன்ற காலஇடைவெளியை வைத்தே கணக்கிடப்பட்டு வருகிறது. பொதுவாக 7 நாட்கள் கால இடைவெளி கணக்கிடப்பட்டு வரும் நிலையில், இந்த கொரோனா பாதிப்பில் அரசு 5 நாட்கள் கால இடைவெளியிலான கணக்கெடுப்பை மேற்கொண்டுள்ளது.
ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு அதாவது மார்ச் 23ம் தேதி, 3.21 நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்தது. மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஏப்ரல் 17ம் தேதி ( முதல் ஊரடங்கு நிறைவடைந்த காலம்) நிலவரப்படி, 7.82 நாட்களில், பாதிப்பு எண்ணிக்கை இரண்டு மடங்கானது. ஏப்ரல் 27ம் வரையிலான காலகட்டத்தில்,10.77 நாட்களில் தான் பாதிப்பு எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்தது.
இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள தொற்றுகளின் அடிப்படையிலான கணக்கீட்டின்படி, ஏப்ரல் 27ம் தேதி நிலவரப்படி, 12 மாநிலங்களில் பாதிப்பு மிக அதிகளவில் இருந்தது.
மேற்குவங்க மாநிலத்தில் இரட்டிப்பு நாள் 7.13 நாள்கள் என்ற அளவிலும், மகாராஷ்டிராவில் 7.9 நாட்களிலும், குஜராத்தில் 8.3 நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை 2 மடங்களாக அதிகரித்துள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் ஏப்ரல் 20 முதல் 27 வரையிலான காலகட்டத்தில் பாதிப்பு 93 சதவீத அளவிற்கு அதிகரத்துள்ளது. இதேகாலகட்டத்தில் மகாராஷ்டிராவில் 85 சதவீதமும், குஜராத்தில் 93 சதவீத அளவிற்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.
கேரள மாநிலத்தில் ஜனவரி மாத இறுதியிலேயே 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இதன் எண்ணிக்கை, ஊரடங்கு துவங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்பாக அதாவது 37.17 நாட்களுக்கு பிறகே இரண்டு மடங்காக அதிகரித்தது.
கொரோனா விவகாரத்தில் கேரள அரசின் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, சர்வதேச நாடுகள் பலவும் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், பாதிப்பு இரட்டிப்பின் விகிதம் 12 மாநிலத்தில் குறிப்பிட்ட அளவிற்கு அதிகரித்துள்ளது. மேற்குவங்கத்தை தவிர்த்து மற்ற் மாநிலங்களில் இதன் எண்ணிக்கை 10 சதவீதத்திற்கும் மேலாக குறைந்திருந்தது. ஏப்ரல் முதல்வாரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சராசரி இரட்டிப்பு விகிதம் 8.74 சதவீதமாக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கானாவில், 58 நாட்களுக்கு பிறகு பாதிப்பு எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம், தற்போதைய அளவில் கொரோனா அறிகுறி தென்படுபவர்கள், வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள், தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களுக்கு மட்டுமே சோதனைகளை செய்து வருகின்றது. 80 சதவீதம் பேர், அறிகுறிகள் இல்லாமலும், மேலும் தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளதால், அவர்களையும் சோதனைக்குட்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அதிகமானோருக்கு சோதனைகள் மேற்கொள்ளப்படும்போது பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கும் இதனால், பாதிப்பு இரட்டிப்பு காலம் வெகுவாக குறையும். மருத்துவமனைகளில் தற்போது இன்புளுயான்சா தொடர்பான நோய்கள், பல்மோனரி பாதிப்பு தொடர்பான நோயாளிகள் அதிகரித்து வருவதால், கொரோனா பாதிப்பு தொடர்பான விபரங்களை நாம் எளிதில் அறிவது சிரமமாக உள்ளதாக இந்திய பொதுசுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஸ்ரீநாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil