குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் பாராமல் அனைவரையும் தாக்கும் கொடிய பாதிப்பாக கொரோனா வைரஸ் உள்ளதை சமீபத்திய ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று உள்ள கருவுற்ற பெண்ணின் மூலம் பிறக்கப்போகும் குழந்தைக்கு கொரோனா தொற்று இருக்குமா அல்லது பிரசவத்தில் ஏதாவது பிரச்சனை நிகழுமா போன்றதொரு கேள்விக்கு இந்த ஆய்வின் முடிவுகள் தெளிவான பதிலை அளித்துள்ளன.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
கர்ப்பிணிகளுக்கு அளிக்கப்படும் அறிவுரை என்ன
கொரோனா வைரஸ் தொற்று கர்ப்பிணிகளிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு எவ்வித தரவுகளும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அவர்கள் சொல்லும் அறிவுரை யாதெனில், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். மக்கள் நெருக்கடி மிக்க இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் மற்றும் தான் வசிக்கும் பகுதிகளில் சுவாசித்தலுக்கேற்ற சுகாதாரம் பேண வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்க தேசிய நோய் தடுப்பு மையமும் இந்த அறிவுரைகளையே பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டும் தாய்மார்கள், தங்கள் குடும்பத்தினருடனான தொடர்பை சில காலம் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. ஏனெனில், தொற்று ஒருவருக்கு இருக்கும் பட்சத்தில், அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு எளிதில் பரவும் வாய்ப்பு இருப்பதால், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இந்த பரிந்துரை அறிவுறுத்தப்படுகிறது.
சீனா மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிபரங்களின்படி, தொற்று காணப்பட்ட கர்ப்பிணிகளில் 8 சதவீதத்தினருக்கே இது அதிக பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன. அதேபோல், தேசிய சுகாதார ஆணையம் , பிப்ரவரி 16 முதல் 24 ம் தேதி காலத்தில் கணக்கில் எடுத்துக்கொண்ட 147 கர்ப்பிணிகளில் ( 64 தொற்று உறுதி செய்யப்பட்டது, 82 சந்தேகிக்கப்பட்டது 1 அறிகுறிகள் இல்லாதது) 1 சதவீதத்தினருக்கே அதிக பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது.
கர்ப்பிணிகளை கோவிட் 19 எளிதில் தாக்குமா?
உடலில் தோன்றும் ஏதாவது ஒரு பாதிப்பிற்கு எதிராக நமது உடலில் உள்ள நோய் தடுப்பு ஆற்றல் எதிர்வினை ஆற்றி உடல்நிலையை பேணிக்காக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இது தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுவிற்கும் பொருந்தும். புற்றுநோயாளிகளில், இந்த நோய் தடுப்பாற்றல் வேறுவிதமாக உள்ளது. புற்றுநோயாளிகளின் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் பெருமளவில் குறைந்து விடுவதால், அவர்களால், இந்த வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள இயலவில்லை. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட நபர்களும் இந்த வைரஸ் பாதிப்பினால் மரணமடையும் நிகழ்வை நாம் ஆங்காங்கே பார்த்து வருகிறோம்.
கர்ப்பிணிகளுக்கும், பிரசவத்தின் போது ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்து, இந்த கொரோனா வைரசின் பாதிப்பு இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தி ஆண்களின் நோய் எதிர்ப்பு சக்தியை விட கூடுதல் பலமாகவே இருக்கும். அதுவும் பிரசவ காலத்தில் எந்தவொரு நோய்த்தொற்றும் ஏற்படாதவகையில், அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலம் பெற்று விடும். சில விஷயங்களில் இதற்கு நேர்மாறான நிகழ்வுகளும் ஏற்படும். பிரசவ காலத்தில், அவர்களின் மேல் சுவாச பாதையில் உள்ள ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரோன் மற்றும் நுரையீரலின் விரிவாக்கம் தடைபடுவதினால், அவர்கள் சுவாசித்தலில் பாதிப்பை விளைவிக்கும் நோய்க்காரணிகளுக்கு ஆளாகிவிடுகின்றனர்.
ஆனால், இந்த தொற்று பிறக்கப்போகும் குழந்தைக்கும் இருக்கும் என்று இதுவரை எந்த குறிப்பும் இல்லை. சார்ஸ் தாக்கத்தின் போது கர்ப்பிணிகளுக்கு அதிகளவில் கருச்சிதைவு மற்றும் குறைந் எடையிலான குழந்தை பிறந்தது கண்டறியப்பட்டது.
ஆனால், இந்த கொரோனா வைரஸ் விவகாரத்தில், கர்ப்பிணிப்பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
கர்ப்பிணிகள், கோவிட் 19 பாதிப்பு இல்லாதபோதும் அவர்கள் சுவாசம் சம்பந்தமான பிரச்னைகளில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அத்தகைய பெண்களிடையே இந்த கோவிட் 19ம் அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது புலனாகியுள்ளது.
கர்ப்பிணிகளிடையே கோவிட் 19 தாக்கம் அதிகமாக உள்ளபோதிலும், இதன்காரணமாக, பிறக்கப்போகும் குழந்தைக்கும் அந்த தொற்று இருக்குமா என்ற தரவு இதுவரை எந்த இடத்திலும் கண்டறியப்படவில்லை.
கர்ப்பிணிகளை எவ்வாறு காப்பது?
கர்ப்பிணிக்கு கோவிட் 19 தொற்று கண்டறியப்படும் பட்சத்தில் அவர்களது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். வைரஸ் தொற்றின் படிநிலைகளை கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சை முறைகளை தொடர்ந்து வழங்க வேண்டும். கருவின் வளர்ச்சியிலும் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஏதேனும் அசவுகரிய நிலை ஏற்படும் பட்சத்தில் அதிலிருந்து அப்பெண் மீளும் நடவடிக்கைகளில் உடனடியாக களமிறங்க வேண்டும்.
கோவிட் 19 தொற்று ஏற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவ காலம் மற்றும் அதன் பின்பும், தேவையான வைரஸ் எதிர்ப்பு சிகிச்சைகளை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.