உலகை அச்சுறுத்திவரும் கொரோனா பாதிப்பிற்கு இந்த வகை வைரஸ் தான் காரணமா?.

New study on covid-19 virus : உலகையை பெரும்அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு SARS-CoV-2 வைரஸின் இரண்டு வகைகளே காரணம் என சீனாவின்...

உலகையை பெரும்அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு SARS-CoV-2 வைரஸின் இரண்டு வகைகளே காரணம் என சீனாவின் ஷாங்காயின் பாஸ்டர் இன்ஸ்ட்டியூட் மற்றும் பெகிங் பல்கலைகழக லைப் சயின்சஸ் துறை விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

SARS-CoV-2 வைரஸின் இரண்டு வகைகளும் அதிக வீரியம் கொண்டவையாக இருந்தன. இவைகளின் வீரியம், 2020 ஜனவரி மாதத்திற்கு பிறகு கணிசமான அளவில் குறைய துவங்கியுள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் எங்கு தோன்றியது?. இதன் தாக்கங்கள் என்ன?

விஞ்ஞானிகள் தங்களது ஆய்வில், SARS-CoV-2 வைரஸின் 103 ஜீனோம்களை உட்படுத்தினர். இவைகளில், 103 வகைப்படுத்த ஸ்டிரெய்ன்களில், 149 இடங்களில் சடுதிமாற்றம் (mutation) நிகழ்ந்துள்ளதை கண்டறிந்துள்ளனர்.

 

இந்த 103 ஜீனோம்களில், SARS-CoV-2 வைரஸில், L மற்றும் S வகை ஸ்டிரெயன்கள் மிகுதியாக இருந்ததை கண்டறிந்தனர்.
தற்போது கொரோனா வைரஸ் பரிசோதனையில், பெரும்பாலும் L வகை ஸ்டிரெய்ன் தான் விரவி கிடக்கிறது. எனவே S வகை ஸ்டிரெய்ன் பழமையான ஒன்று என்றும், அதனிலிருந்து தான் இந்த L வகை ஸ்டிரெய்ன் தோன்றியிருக்க வேண்டும். இந்த ஸ்டிரயின் மனித உடலில் பல்கி பெருகியிருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்துள்ளனர். ஏனெனில், இந்த L வகை ஸ்டிரெயினே அதிக வீரியம் மிக்கதாக உள்ளது.

சீனாவின் வுஹான் நகரத்தில் பாதிக்கப்பட்ட மக்களிடையே விஞ்ஞானிகள் பரிசோதனைகளின் மூலம் 103 வைரஸ்களில் 27 வைரஸ்கள் தனிமைப்படுத்தப்பட்டன. இவற்றில் 26 வகை வைரஸ்கள் L வகை (96.3 சதவீதம்) ஆகும். வுஹான் நகரத்திற்கு வெளியே பிரித்தெடுக்கப்பட்ட 73 வைரஸ்களில் 45 வைரஸ்கள் L வகையை (61.6 சதவீதம்) சேர்ந்தது என்றும், எஞ்சியுள்ள 28 வைரஸ்கள் S வகையை சேர்ந்தவையாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஜனவரி 7ம் தேதிக்கு முன்னதாக பரிசோதிக்கப்பட்ட 26 வைரஸ் சாம்பிள்கள், வுஹான் நகரில் இருந்து எடுக்கப்பட்டது. மொத்தம் பரிசோதிக்கப்பட்ட 74 வைரஸ் சாம்பிள்களில் 1 வுஹானிலிருந்தும் 33 சீனாவின் மற்ற பகுதிகளிலிருந்தும், 40 சீனாவிற்கு வெளியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. இவைகளில் அதிகளவு L வகை ஸ்டிரெயின்களே இருந்தது குறிப்பிடத்தக்கது.

இருந்தபோதிலும், S வகையை காட்டிலும் L வகை ஸ்டிரெயின்கள் அதிக வீரியத்தன்மை கொண்டது என்பதற்கு போதிய உறுதியான காரணங்கள் இல்லை என்று விஞ்ஞானிகள் தங்களது ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close