கொரோனா வைரஸ் : தமிழகத்தில் பாதிப்பு சமீபகாலமாக அதிகரித்தது ஏன்?

மகாராஷ்டிராவில் ஒரேநாளில் நிகழ்ந்துள்ள 37 மரணங்களில், மும்பையில் மட்டும் 27 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

By: May 6, 2020, 2:54:52 PM

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் மிக அதிக அளவில் உள்ளது. கடந்த ஒரு வாரகாலஅளவிலேயே, பாதிப்பு எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது 2058 என்ற அளவில் இருந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 4058 ஆக அதிகரித்துள்ளது. கடைசி 2 நாட்களில் மட்டும் 500 பேருக்கு மேல் புதிதாக தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவை தொடர்ந்து அதிகளவில் தொற்று கண்டறியப்பட்டும் மாநிலமாக தமிழகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் மாநிலத்தில் பாதிப்பு அதிகரித்ததற்கு மகாராஷ்டிராவின் நாண்டிட் பகுதியிலிருந்து வந்தவர்கள் தான் காரணம். மேற்குவங்கத்திலும் இதேபோல் பாதிப்பு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்ததற்கு சென்னை கோயம்பேடு சந்தையே காரணமாக சொல்லப்படுகிறது. அங்கிருந்து தான் மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு தொற்று அதிகளவில் பரவியுள்ளது.

கோயம்பேடு சந்தை தான் தொற்று அதிகமாக பரவியதற்கான காரணம் என தெரிந்தநிலையில், தமிழகத்தில் கொரோனா சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. மே 5ம் தேதி வரை, அங்கு 1,74,828 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தை விட 1.5 மடங்கு அதிக மக்கள் தொகை கொண்ட மகாராஷ்டிராவிலேயே, 1,82,884 பேருக்கே சோதனை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

கொரோனா ஹாட்ஸ்பாட் ஆக சென்னை கோயம்பேடு சந்தை செயல்பட்டதனாலேயே, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆயிரம் என்ற பாதிப்பு அளவிலிருந்து 2 ஆயிரமாக அதிகரிக்க 17 நாட்கள் தேவைப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை ஒரே வாரத்தில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் மே 5ம் தேதி 2,949 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 49,339 ஆக உள்ளதாகவும் இவர்களில் 12,750 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதத்தின் முதல் 5 நாட்களிலேயே 15 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மே 4ம் தேதியுடன் ஊரடங்கு நிலை தளர்த்தப்பட்டிருப்பின் என்ன ஆகியிருக்கும் என்பதை நம்மால் நினைத்துக் கூட பார்க்க இயலவில்லை. பல்வேறு மாநிலங்களில் கொரோனா சோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருப்பதனால், பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மே 5ம் தேதி நிலவரப்படி, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குஜராத்தில் 6 ஆயிரமாகவும், டெல்லியில் 5 ஆயிரமாகவும், மத்திய பிரதேசத்தில் 3 ஆயிரமாகவும் அதிகரித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் ஒரேநாளில் 49 மரணங்கள் பதிவாகியுள்ளன.இவற்றில் 39 மரணங்கள் அகமதாபாத்தில் நிகழ்ந்துள்ளன. மகாராஷ்டிராவில் ஒரேநாளில் நிகழ்ந்துள்ள 37 மரணங்களில், மும்பையில் மட்டும் 27 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

குஜராத்தில் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 350 என்ற எண்ணிக்கையை கடந்துள்ளது. குஜராத் தற்போது, மரணமடைந்தவரின் வயது, அவருக்கு இதற்கு முன் இருந்த நோய் பாதிப்புகள் உள்ளிட்ட விவரங்களை தற்போது வெளியிட துவங்கியுள்ளன. குஜராத் உள்ளிட்ட 3 மாநிலங்களே இத்தகைய விபரங்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Coronavirus covid 19 numbers explained covid 19 cases india coronavirus tamil nadu

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X