கொரோனா அறிகுறி: தனிமைப்படுத்தல் வழிமுறைகள் என்னென்ன?

Covid-19 patients self isolation rules : கொரோனா தொற்று உள்ளவருக்கென்று தனியாக சமைக்க வேண்டும். அந்த பாத்திரங்களை தனியாக வைத்து பாதுகாக்க வேண்டும். இந்த பாத்திரங்களை கையாளும்போது கட்டாயமாக கையுறைகளை அணிந்திருக்க வேண்டும்.

coronavirus, covid-19 patients self isolation rules, guidelines for self isolation, rules for home quarantine, home quarantine, covid symptoms, indian express,coronavirus news, coronavirus tamil news, coronavirus tamil nadu news, coronavirus chennai news, coronavirus Tamil nadu, coronavirus outbreak
coronavirus, covid-19 patients self isolation rules, guidelines for self isolation, rules for home quarantine, home quarantine, covid symptoms, indian express,coronavirus news, coronavirus tamil news, coronavirus tamil nadu news, coronavirus chennai news, coronavirus Tamil nadu, coronavirus outbreak

கொரோனா பாதிப்புக்குள்ளாகி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் அல்லது கொரோனா முன் அறிகுறி காணப்படுவோர் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மறுவரையறை செய்துள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

கொரோனா தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில், பாதித்தவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துமனைகளில் படுக்கைகள் உள்ளிட்ட போதிய வசதிகள் இல்லாததை குறிப்பிட்டு, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை, மத்திய சுகாதாரத்துறை, இதற்கான வழிமுறைகளில் மாற்றம் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி இருந்தது.

கொரோனா தொற்றுக்கான முன் அறிகுறி உள்ள நபர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும் என்றும், மருத்துவ பணியாளர்களுக்கு மேலும் சுமையை ஏற்றிவிடக்கூடாது என்பதற்காகவும், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை, இந்த கோரிக்கையை வலியுறுத்தியிருந்தது.

கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் அதற்கான அறிகுறி தென்பட்டவர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனை செட்டப்பிலேயே வைத்து தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

தற்போதைய நடைமுறைகளின்படி, அறிகுறிகள் தென்பட்டோரிடம் அவர்களுக்கு உள்ள அறிகுறியின் அளவை பொறுத்து அவர்கள் 3 வகையாக பிரிக்கப்படுகின்றனர். அதி தீவிர அறிகுறி உள்ளவர்களே, பாதுகாப்பு மையம், மருத்துவ சுகாதார மையம் அல்லது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

மறுவரையறை செய்யப்பட்ட வழிமுறைகளின்படி, லேசானா அறிகுறி அல்லது முன் அறிகுறி காணப்பட்டவர்களும் தங்களை சுய தனிமை செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் முன் அறிகுறி உள்ளவர்களுக்கு தொற்றுக்கான அறிகுறிகள் ஏற்பட்டு பின் அவர்களால் பாதிப்பு பரவும் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளுதல் – யார் யார் மேற்கொள்ளலாம்?

லேசான அறிகுறி அல்லது கொரோனா தொற்றுக்கான முன் அறிகுறி உள்ளதாக மருத்துவ அலுவலரால் சோதனை செய்யப்பட்டவர்கள்.
வீட்டிலேயே சுயதனிமை மேற்கொண்டிருப்பவர்கள், மற்றவர்களுடன் தொடர்பில் இல்லாமல் விலகி இருப்பவர்கள்
வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணிநேரமும் மருத்துவ உதவிகளை பெற தேவையான கட்டமைப்பு பெற்றவர்கள். இவர்களுக்கு உதவியாளர் ஒருவர் இருக்க வேண்டும். இவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ள காலம் முழுவதும் தேவையான மருத்துவ வசதிகளை, இந்த உதவியாளர் செய்துதர வேண்டும்.

இந்த உதவியாளர் மற்றும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளவருடன் தொடர்பில் உள்ளவர்களுக்கு மருத்துவ அலுவலரின் அறிவுரையின்படி ஹைட்ரோகுளோரோகுயின் புரோபைலாக்சிஸ் மருந்து தவறாமல் வழங்கப்பட வேண்டும்.

கொரோனா தொற்று உள்ளதாக சந்தேகிக்கப்படுவோர் என அனைவரும் தவறாது தங்கள் மொபைல் போனில், ஆரோக்ய சேது செயலியை டவுன்லோடு செய்து பயன்படுத்த வேண்டும்.

தொற்று உள்ளதாக சந்தேகிக்கப்படுவர்கள், தங்களது உடல்நிலையை மாவட்ட கண்காணிப்பு அலுவலரிவ் உத்தரவுப்படி மருத்துவ பணியாளர்கள் கண்காணிக்க அனுமதிக்க வேண்டும்.

கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள், தங்களை சுய தனிமைக்குட்பட்டுத்திக்கொள்வதுடன், மற்றவர்களுடன் விலகி இருக்கும் வகையிலான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா முன் அறிகுறி கொண்டவர்கள் எப்போது மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்?

கொரோனா முன் அறிகுறி கொண்டவர்கள் அல்லது லேசான அறிகுறி கொண்டவர்கள், சுவாசித்தலில் பிரச்சனை ஏற்பட்டாலோ, மார்பு பகுதியில், வலி உணர்ந்தாலோ அல்லது வாய் அல்லது முகம் பகுதியில் ஏதாவது நிறமாற்றம் ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

எப்போது வரை வீட்டிலேயே தனிமை தொடர வேண்டும்?

கொரோனா முன் அறிகுறி அல்லது லேசான அறிகுறி உள்ளவர்கள், தங்களுக்குள்ள அறிகுறிகள் முழுவதுமாக மறையும் வரை அல்லது மருத்துவரை சந்தித்து தங்களால் மற்றவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படாது என்று ஆய்வக சோதனையில் உறுதியாக தெரியும்வரை அவர்கள் வீட்டு தனிமையிலிருந்து விடுபடக்கூடாது.

வீட்டு தனிமையின் போது செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை

கொரோனா அறிகுறி உள்ளவர்கள் எப்போதும் முக கவசம் அணிந்தபடி இருக்க வேண்டும். 8 மணிநேரத்திற்குள்ளோ அல்லது முக கவசம் ஈரமடைந்தாலோ அல்லது அழுக்கு படிந்தாலோ உடனடியாக அப்புறப்படுத்திவிட வேண்டும்.

பயன்படுத்தப்பட்ட முக கவசங்களை, 1 சதவீத சோடியம் ஹைப்போகுளோரைட் கரைசல் கொண்டு கழுவி அப்புறப்படுத்த வேண்டும்.
கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தாங்கள் இருக்கும் அறை, மற்றவர்களுடன் எளிதில் தொடர்பு கொள்ள இயலாத அறையாக தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். வயது மூத்தவர்கள், இதய நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ள குடும்ப நபர்களின் தொடர்பு முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும்.

தங்களது உடலில் நீர்ச்சத்து குறையாத வண்ணம் அடிக்கடி நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடிக்கடி சோப், சானிடைசர் கொண்டு 40 வினாடிகள் காலஅளவிற்கு கைகளை கழுவ வேண்டும்.

இவர்கள் தாங்கள் பயன்படுத்திய பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது.

கொரோனா அறிகுறி உள்ளவர் தங்கியிருக்கும் அறையின் தளம், கதவு, ஹேண்டில்கள், தாழ்ப்பாள் உள்ளிட்டவைகளை தினமும் 1 சதவீத சோடியம் ஹைப்போகுளோரைட் கொண்டு சுத்தம் செய்திட வேண்டும்.

மருத்துவரின் அறிவுரையை தவறாது கடைப்பிடிக்க வேண்டும். உடலின் வெப்பநிலையை தவறாது சுயமாகவே சோதித்துக்கொள்ள வேண்டும். ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

உதவியாளர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்

முக கவசங்கள் : கொரோனா அறிகுறி தென்பட்டவருக்கு உதவியாக இருப்பவருக்கும் நல்ல தரமான 3 அடுக்கு முக கவசம் வழங்கப்பட வேண்டும். தனது வாய், முகம் உள்ளிட்ட பகுதிகளை தொட்டுப்பார்ப்பதை தவிர்க்க வேண்டும். முக கவசம் ஈரம் ஆனாலோ அல்லது அழுக்கடைந்தாலோ உடனடியாக மாற்றிவிட வேண்டும்.

கைகளை கழுவுதல் : உதவியாளர் எந்தவொரு செயலை செய்வதற்கு முன்னும், சோப், ஆல்கஹால் கொண்ட சானிடைசரின் உதவியால் 40 விநாடிகள் கைகளை கழுவுதலை எந்நேரத்திலும் மறத்தல் கூடாது.

கைகளை கழுவியபின் உடனடியாக டிஸ்யு பேப்பர் அல்லது சுத்தமான துணியின் உதவியால் கைகளை துடைத்துக்கொள்ள வேண்டும்.
நேரடி தொடர்பு கூடாது

கொரோனா அறிகுறி உள்ளவரிடம் எக்காரணம் நேரடி தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது. அவர்களை தொடவோ அல்லது அவர்களின் உடம்பிலிருந்து சுரக்கும் திரவத்தை கையாள நேர்ந்தால், கையுறைகளை அணிந்துகொள்ள வேண்டும். இந்த கையுறைகளை பயன்படுத்தும் போதும் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும்.

நோய்த்தொற்று உள்ளவர் பயன்படுத்திய பொருட்கள், கைக்குட்டை, பாத்திரங்கள், சிகரெட் உள்ளிட்டவற்றை யாரும் பயன்படுத்த கூடாது.
கொரோனா தொற்று உள்ளவருக்கென்று தனியாக சமைக்க வேண்டும். அந்த பாத்திரங்களை தனியாக வைத்து பாதுகாக்க வேண்டும். இந்த பாத்திரங்களை கையாளும்போது கட்டாயமாக கையுறைகளை அணிந்திருக்க வேண்டும்.

கொரோனா அறிகுறி உள்ளவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து உடனுக்குடன் மருத்துவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் உள்ளிட்ட நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Web Title: Coronavirus covid 19 patients self isolation rules guidelines for self isolation

Next Story
கொரோனா வைரஸ் முதலில் எங்கு தாக்குகிறது? இரண்டு செல் வகைகளை கைகாட்டும் புது ஆய்வு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com