Donald Trump's Experimental Cocktail: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது கோவிட் -19 சிகிச்சையின் ஒரு பகுதியாக ஓர் சோதனை ஆன்ட்டிபாடி காக்டெய்லைப் பெறத் தொடங்கியுள்ளார்.
சிகிச்சை முறை
REGN-COV2 என்பது ஓர் இன்வெஸ்டிகேஷனல் ஆன்ட்டிபாடி காக்டெயில் (investigational antibody cocktail). இது மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத நோயாளிகளின் அறிகுறிகளைத் தணிப்பதற்காக வைரஸ் சுமை மற்றும் நேரத்தைக் குறைந்திருக்கிறது என்று அதனை உருவாக்கிய ரீஜெனெரான் பார்மாசூட்டிகல்ஸ் இன்க் (Regeneron Pharmaceuticals Inc) நிறுவனம் தெரிவித்துள்ளது.
REGN10933 மற்றும் REGN10987 எனும் இரண்டு மோனோக்ளோனல் ஆன்டிட்பாடிகளின் (monoclonal antibodies) கலவைதான் இந்த காக்டெயில். இது, SARS-CoV-2-ன் தொற்றுநோயைத் தடுப்பதற்காகவே “குறிப்பாக” வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது எப்போது வந்தது மற்றும் அதன் பின்னணியில் உள்ள ஆராய்ச்சி என்ன?
அமெரிக்காவில் தடையற்ற 1/2/3 கட்ட மருத்துவ சோதனைக்கு காக்டெயில் உட்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில், 275 நோயாளிகள் இதைப் பெற்றுள்ளனர். இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்டங்களில் மொத்தம் 1,300 நோயாளிகள் சேர்க்கப்படுவார்கள்.
இந்த மருந்துக்கான சோதனைகள் ஜூன் மாதத்தில் தொடங்கியது. இந்த மருந்து மேம்பாட்டுத் திட்டத்தில் 2,000-க்கும் மேற்பட்டோர் பதிவுசெய்துள்ளனர்.மேலும், எதிர்பாராத பாதுகாப்பு முடிவுகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று நிறுவனத்தின் சோதனை தரவு கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
இதற்கு முன் யார் முயற்சி செய்தார்கள்?
மருத்துவமனையில் சேர்க்கப்படாத நோயாளிகளுக்கு இந்த சோதனை மேற்கொண்டதோடு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளுக்கு COVID-19 சிகிச்சைக்காக REGN-COV2 தற்போது 2/3 கட்ட மருத்துவ பரிசோதனையில் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக ரீஜெனெரோன் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் 3-ம் கட்ட மீட்பு சோதனை மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களின் வீட்டுத் தொடர்புகளில் COVID-19-ஐ தடுப்பதற்கான 3-ம் கட்ட சோதனை ஆகியவற்றிலும் இது ஆய்வு செய்யப்படுகிறது. இந்த 4 சோதனைகளிலும் ஆட்சேர்ப்பு நடந்து வருகிறது.
இது வேறு மருந்துகளுடனும் இணைந்து செயல்படுமா?
இந்த மருந்துக்கு, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (US Food and Drug Administration (US FDA)) அவசரக்கால பயன்பாட்டு அங்கீகாரம் (Emergency Use Authorisation (EUA)) வழங்கப்படவில்லை என்பதால், இதனைப் பரிசோதனை சிகிச்சையாக மட்டுமே பயன்படுத்தப்படும். மேலும், சோதனைகளுக்கு உட்பட்டுள்ளதால், இந்த காக்டெயிலுக்கு என்று நிலையான கலவை மருந்துகள் இல்லை.
ஜின்க் (Zinc), வைட்டமின் டி மற்றும் ஆன்ட்டாசிட் பெப்சிட்டின் (antacid Pepcid) பொதுவான பதிப்பு ஆகியவற்றுடன் இணைந்து டொனால்ட் ட்ரம்பிற்கு REGN-COV2 பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.