கொரோனா வைரசின் எந்த பகுதி ஹேர்பின் வடிவத்துக்கு மாறுகிறது – ஏன் ?

SARS CoV-2 human cell : மனித செல்லுடன் இணைந்தபிறகு அது அடையும் வடிவமே, மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியில் இருந்து அதனை பாதுகாக்கிறது

By: Updated: July 25, 2020, 12:18:03 PM

Kabir Firaque

கொரோனா வைரசின் சுற்றுவட்டப்பாதையில் உள்ள SARS-CoV-2 முள் புரதமே, கோவிட் 19 நோயை மனிதர்களிடையே பரப்புவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. விஞ்ஞானிகள் மேலும் சில அறிவியல் உண்மைகளையும் கண்டுபிடித்துள்ளனர். இந்த புரதம், மனித உடலில் உள்ள செல் உடன் ஒட்டிக்கொள்கிறது. பின் அது ஹேர்பின் வடிவில் மாறி பிணைப்பை உறுதிப்படுத்திக்கொள்கிறது. இதுதொடர்பான கருத்து ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு, கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் முக்கிய உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

முள் புரதம் என்றால் என்ன?

கொரோனா வைரசின் வெளிப்புறப்பாதையில் பெரிய ஆணி வடிவத்தில் முள் புரதங்கள் நீட்டிக்கொண்டு உள்ளன. இது பார்ப்பதற்கு ஒளிவட்டம் ( corona) போல இருப்பதால், இதற்கு Corona virus என்று பெயரிடப்பட்டுள்ளது. SARS-CoV-2 கொரோனா வைரசில், இந்த முள் புரதமே, மனிதர்களில் பாதிப்பை ஏற்படுத்த காரணமாக அமைந்துள்ளது. இது மனிதனின் செல்லில் உள்ள என்சைமின் ACE2 receptor பகுதியில் ஒட்டிக்கொள்கிறது. பின் அங்கு அது பல்கிப்பெருகுகிறது.

புதிய ஆய்வின் மூலம் தெரியவந்தது என்ன?

கொரோனா வைரசில் உள்ள முள்புரதம், மனித செல்லில் இணைவதற்கு முன் மற்றும் பின் அதன் வடிவ மாறுபாட்டை, கிரையோஜெனிக் எலெக்ட்ரான் மைக்ராஸ்கோப் உதவியுடன் டாக்டர் பிங் சென் மற்றும் அமெரிக்காவின் பாஸ்டர் குழந்தைகள் நல மருத்துவமனை டாக்டர்கள் கண்டறிந்துள்ளனர்.

கொரோனா வைரசில் உள்ள முள்புரதம், மனித செல்லில் உள்ள என்சைமின் ACE2 receptor பகுதியுடன் இணைந்தவுடன் அது ஹேர்பின் வடிவத்திற்கு மாறுவதை அவர்கள் கண்டறிந்தனர். பின்னர் மீண்டும் அது பழைய நிலைக்கு திரும்புகிறது. அதாவது அது ப்ரீமெச்சூர் நிலையில், இணைவுக்கு முன் ஒரு வடிவத்திலும், இணைவுக்கு பின் மற்றொரு வடிவத்திற்கும் மாறுவதை அவர்கள் கண்டறிந்தனர்.

இதன் முக்கியத்துவம் என்ன?

கொரோனா வைரசில் உள்ள இந்த முள் புரதம் மாற்றம் பெறுவதினாலேயே, அது மனித செல்லுடன் இணைய ஏதுவாக அமைவதாக டாக்ட்ர சென் தெரிவித்துள்ளார். இந்த வைரஸ், வெவ்வேறு பரப்புகளில், வெவ்வேறு நேரங்களில் பல்வேறு வடிவங்களில் இருக்கும் என்பது தெரியவந்துள்ளது.
மனித செல்லுடன் இணைந்தபிறகு அது அடையும் வடிவமே, மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியில் இருந்து அதனை பாதுகாக்கிறது என்பது தெரியவந்துள்ளது.

 

எந்த வழியில் வைரஸ் தன்னை பாதுகாத்துக்கொள்கிறது?

மனித செல் உடனான இணைவுக்கு பிறகு வைரஸ் பெறும் வடிவம், ஆன்ட்டிபாடிகளால் வைரசிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்த முடியாத வகையில் உள்ளது. இந்நிலையில், இதன் முள் புரதம், மனித நோய் எதிர்ப்பு மண்டலத்தை சேதப்படுத்த துவங்குகிறது.
மனித உடலில் உருவாகும் ஆன்ட்டிபாடிகளால், இணைவுக்கு முந்தைய வடிவில் உள்ள வைரஸ்களை மட்டுமே அழிக்க முடியும். இந்த ஆய்வு, ஹெச்ஐவி வைரஸ் குறித்த ஆய்வில் தெரியவந்ததாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு டாக்டர் சென் அனுப்பியுள்ள இமெயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வைரசின் இரு வடிவங்களும் ஆன்ட்டிபாடியை சக்தியிழக்கச்செய்துவிடுகின்றன. இதில் இணைவுக்கு பிறகு வைரஸ் அடையும் வடிவம், அது இம்முனோஜென் ஆக செயல்படுவதாக அவர்ர அதில் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு வடிவங்களுக்கும் ஒற்றுமை உள்ளதா?

உள்ளது. இணைவுக்கு முன் மற்றும் பிந்தைய வடிவங்கள் இரண்டிலும் சர்க்கரை மூலக்கூறுகள் உள்ளன. இவை கிளைகான்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவைகள் வைரசின் குறிப்பிட்ட பகுதியில் அமைந்துள்ளன. இந்த கிளைகான்கள், மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தால், அவை கண்காணிக்கப்படாமல் இருக்க உதவுகிறது.

மாற்று வடிவம் எந்தளவிற்கு பயனுள்ளதாக உள்ளது?

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் இந்த மாற்று வடிவம் குறித்த ஆய்வு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.தற்போது புழக்கத்தில் உள்ள பல்வேறு தடுப்பு மருந்துகள் அனைத்தும் அதன் முள் புரதத்தை அடிப்படையாகக்கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், தற்போதைய கொரோனா வைரசில் இணைவுக்கு முன் மற்றும் பின் என்று இரண்டு வடிவங்கள் உள்ளதால், இது குறிப்பிட்ட அளவிற்கே நமக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று சென் கூறியுள்ளார்.

இணைவுக்கு முந்தைய வடிவத்தில் பல மாற்றங்கள் அடைந்தபின்னரே அது இணைவுக்கு பிந்தைய அதாவது ஹேர்பின் வடிவத்திற்கு மாறுகிறது. இதில் புரதம் நிலையாக இல்லாமல் இருந்தால், ஆன்ட்டிபாடிகள் தூண்டப்பட்டு, அது வைரசை செயலற்றதாக செய்திருக்கும்.
இணைவுக்கு முந்தைய வடிவத்தை ஆதாரமாக கொண்டு அதனுள் நாம் மியூட்டேசனை ஏற்படுத்தி, இணைவுக்கு முந்தைய நிலையிலேயே நாம் வைத்திருந்தால், ஆன்ட்டிபாடியால் எளிதில் வைரசை செயலற்றதாக செய்துவிட முடியும். தற்போது நாம் தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்கான முதல்கட்ட ஆய்விலேயே உள்ளோம். ஆனால் இது போதிய அளவிற்கு எங்களது நம்பிக்கையை பூர்த்தி செய்யவில்லை என டாக்டர் சென் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க – Explained: How ‘corona’ of the virus changes into a hairpin shape — and why

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Coronavirus covid 19 sars cov 2 spike protein sars cov 2 human cell coronavirus human cell

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X