கொரோனா வைரஸ் : மேற்குவங்கத்தில் அதிக பாதிப்பு - அதிர்ச்சி தகவல்
West Bengal : ஏப்ரல் 29ம் தேதி நிலவரப்படி, மகாராஷ்டிராவில் புதிதாக 597 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 9,915 ஆக அதிகரித்துள்ளது.
West Bengal : ஏப்ரல் 29ம் தேதி நிலவரப்படி, மகாராஷ்டிராவில் புதிதாக 597 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 9,915 ஆக அதிகரித்துள்ளது.
coronavirus, covid-19, west bengal, India lockdown, corona infection,coronavirus latest update, indian express, coronavirus news, coronavirus tamil news, coronavirus tamil nadu news, coronavirus chennai news, coronavirus Tamil nadu, coronavirus outbreak,
இந்தியாவில் அதிகம் கொரோனா பாதிப்பு பரவி வரும் மாநிலமாக மேற்குவங்க மாநிலம் உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 29ம் தேதி மட்டும், அங்கு புதிதாக 696 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இதன்மூலம், அங்கு பாதிப்பு விகிதம் ஒரேநாளில் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.
Advertisment
மேற்குவங்க மாநிலத்தில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாக 7.13 நாட்கள் கால அளவு எடுத்திருந்த நிலையில், ஏப்ரல் 23 முதல் 27ம் தேதி காலகட்டத்தில் இரட்டிப்பு விகிதம் எட்டப்பட்டுள்ளது. இது மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது மிக அதிகம் ஆகும். குஜராத் மற்றும் ஆந்திர மாநிலங்கள் இதற்கு விதிவிலக்கு ஆகும். இங்கு இரட்டிப்பு விகித காலம் 10 நாட்களுக்கு மேற்பட்டு உள்ளது.
கேரள மாநிலத்தில் பாதிப்பு இரட்டிப்பு விகித காலஅளவு 37 நாட்களாக உள்ளது.
Advertisment
Advertisements
தெலுங்கானா மாநிலத்தில் பாதிப்பு இரட்டிப்பு கால அளவு 58 நாட்களாக உள்ளது.
கொரோனா தொற்று உள்ள நபரிடமிருந்து புதிதாக மற்ற நபர்களுக்கு பாதிப்பு பரவும் எண்ணையே இனப்பெருக்க எண் என்று வரையறுக்கிறோம். தேசிய அளவில் இதன் சராசரி 1.29 ஆக உள்ள நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் இதன் மதிப்பு 1.52 ஆக உள்ளது. அதாவது ஒவ்வொரு 100 நபர்களும், மற்ற 152 நபர்களுக்கு இந்த தொற்றை ஏற்படுத்துகின்றனர்.
ஜார்க்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களிலேயே இந்த தொற்று பரவல் எண் அதிகமாக இருந்த நிலையில், தற்போது அதனை மேற்குவங்கம் பின்னுக்கு தள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும், அங்கு கொரோனா பாதிப்பு இதுவரை அபாய கட்டத்தை எட்டவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா, குஜராத், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், டில்லி, மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. நாட்டில் கொரோனா பாதிப்பு நபர்களின் எண்ணிக்கை 33 ஆயிரம் என்ற அளவை எட்டியுள்ளது. இவர்களில் 8 ஆயிரத்திற்கும் குறைவான பேரே குணமடைந்துள்ள நிலையில், பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்திற்கும் மேல் உள்ளது.இவர்களால் மற்றவர்களுக்கும் எளிதாக தொற்று பரவும் என்ற உண்மை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 29ம் தேதி மட்டும் புதிதாக 1685 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 80 சதவீதத்தினர் மகாராஷ்டிரா, குஜராத், மத்தியபிரதேசம் மற்றும் தமிழ்நாடு மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 29ம் தேதி நிலவரப்படி, மகாராஷ்டிராவில் புதிதாக 597 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 9,915 ஆக அதிகரித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் 308 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அங்கு பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை பெரிய உச்சத்தை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil