Advertisment

கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ பணியாளர்களின் நிலை தான் என்ன?

நோய்த்தொற்று காலம் முடிவடைந்தவுடன் அவர்களின் உடல்நலம் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus, covid 19,health workers,mental health nurses,doctors, express explained, indian express, coronavirus tamil news, coronavirus tamil nadu news, coronavirus chennai news, coronavirus Tamil nadu, coronavirus outbreak

coronavirus, covid 19,health workers,mental health nurses,doctors, express explained, indian express, coronavirus tamil news, coronavirus tamil nadu news, coronavirus chennai news, coronavirus Tamil nadu, coronavirus outbreak

இந்தியா மட்டுமல்லாது சர்வதேச நாடுகள் அனைத்திலும் மருத்துவ பணியாளர்களின் முதன்மை பணியாக கொரோனா பாதித்த நபர்களை பாதுகாப்பதாகவே உள்ளது. சீனாவில் உள்ள இந்த மருத்துவ பணியாளர்களிடையே நடத்திய ஆய்வில், இவர்கள் ஒருவிதமான மனநல பிரச்சனைகளால் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது.

Advertisment

மருத்துவ பணியாளர்கள் என்ன விதமான மனநல பிரச்சனைகளுக்கு ஆட்படுகின்றனர். அதிலிருந்து அவர்கள் எவ்வாறு மீள்கின்றனர் என்பது குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.

உளவியல் பிரச்சனைகளால் அவதிப்படுகிறார்களா?.

ஆம், இந்த ஆய்வு அவர்களுக்கு ஏற்படும் உளவியல் சார்ந்த பிரச்சனைகளை மையப்படுத்தியே அமைந்துள்ளது. சீனாவின் வுஹான் பகுதியில் உள்ள 20 மருத்துவமனைகள், ஹூபெய் பகுதியில் உள்ள 7 மற்றும் மற்ற பகுதிகளில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் 1,257 மருத்துவ பணியாளர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வெளியாகியுள்ளன.

publive-image

இந்த மருத்துவ பணியாளர்களுக்கு பதட்டம், மன இறுக்கம், தூக்கமின்மை, மனஅழுத்தம் போன்றவைகளால் அவர்கள் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

மொத்தமுள்ள 1,257 மருத்துவ பணியாளர்களுள் 634 பேருக்கு மனஇறுக்கமும், 560 பேர் பதட்டத்தினாலும், 427 பேர் சரியான தூக்கம் இல்லாதததாலும், 899 பேர் மனஅழுத்தத்தினாலும் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த பாதிப்புகளானது அவர்களை மனநலம் மற்றும் உளவியல் சார்ந்த நிகழ்வுகளுக்கு இட்டுச்செல்லும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியான மற்றொரு ஆய்வில், வுஹான் பகுதியில் உள்ள மருத்துவ பணியாளர்கள் அதிகமான மன அழுத்ததினால் அவதிப்படுகின்றனர். இவர்களுக்கு நோய் தொற்று பாதிப்பு அதிகம், தொற்றுகளிலிருந்து போதிய பாதுகாப்பு இல்லாதது, அதிக பணிச்சுமை, விரக்தி, குடும்பத்திலிருந்து பிரிந்து இருத்தல் போன்ற காரணங்களினால், இவர்களுக்கு அதிகளவில் மன அழுத்தம் மற்றும் மனப்பதட்டம் ஏற்படுகிறது. இவர்களுக்கு தூக்கமின்மை, அதிகப்படியான கோபம், பயம் உள்ளிட்ட அறிகுறிகளும் தென்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

மருத்துவ பணியாளர்கள் இதுபோன்ற அசவுகரியங்களால் பாதிக்கப்படுவது இது முதல்முறை அல்ல என்றும் கடந்த 2003ம் ஆண்டு சார்ஸ் பாதிப்பின் போதும் இந்த நிலை ஏற்பட்டது. சிகிச்சை நடைமுறைகளில் இருந்த மருத்துவ பணியாளர்களுக்கு மனஅழுத்தம், அசதி, சரியான தூக்கம் இல்லாதது, உடல்நலம் குறித்த பயம், கவலைகள் உள்ளிட்டவைகள் குறித்து 2007ம் ஆண்டு வெளியான உளவியல் குறித்த ஜர்னலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

உலகளாவிய தொற்றுநோய்கள் பரவும் காலத்தில் தான் நாம் மருத்துவ பணியாளர்கள் குறித்து அறிய முற்படுகிறோம். இவர்கள் கோவிட் 19 தொற்றுடன் நேரடியாக தொடர்பு இல்லாதபோதிலும், அந்த தொற்று கொண்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது இந்த தொற்று அவர்களுக்கும் எளிதாக பரவிவிடுகிறது.

சீனாவில் மட்டும் 3 ஆயிரம் மருத்துவ பணியாளர்களுக்கு இந்த தொற்று ஏற்பட்டு அவர்களில் 22க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அதேபோல் இத்தாலியிலும் 20 சதவீதத்திற்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்களுக்கு தொற்று ஏற்பட்டு அவர்களில் சிலர் மரணமடைந்தும் உள்ளனர்.

மருத்துவ பணியாளர்களுக்கு ஏற்படும் மனநலம் சார்ந்த நோய்கள் குறித்து நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. உலகளாவிய தொற்றுநோய் ஏற்படும் சமயத்தில், மக்களுக்கு ஏற்படும் பதட்டங்களை தவிர்க்க உதவி எண்கள் அறிவிப்பது போன்று, மருத்துவ பணியாளர்களின் நலன்களிலும் நாம் போதிய அக்கறை செலுத்த வேண்டும்.

publive-image

மருத்துவர்களை விட மருத்துவ பணியாளர்களே, தொற்று கொண்ட நோயாளிகளிடம் அதிகநேரம் செலவிடுவதால், அவர்களுக்குத்தான் முதலில் அதிகப்படியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அந்த ஜர்னலில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

இந்த பாதிப்புகளானது மருத்துவ பணியாளர்களை, முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுதல், சரியான கவனிப்பின்மை, புரிந்துகொள்ள இயலாமை போன்ற செயல்பாடுகளுக்கு உட்படுத்துகிறது.

உலகளாவிய தொற்று நோய்களிடமிருந்து மக்களை காப்பது அந்தந்த நாட்டு அரசுகளின் தலையாய கடமைதான் என்றாலும், நோயாளிகளை பாதுகாக்கும் மருத்துவ பணியாளர்களின் உடல்நிலையையும் அவர்கள் கவனத்தில் கொள்வது மிக மிக அவசியம்.

மருத்துவ பணியாளர்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்

ஒவ்வொரு மருத்துவ பணியாளருக்கும் ஒரு குறிப்பிட்ட நோயாளிகளை மட்டுமே வழங்க வேண்டும். மருத்துவ பணியாளர்களின் உடல்நலமும் அவ்வப்போது பரிசோதிக்கப்பட வேண்டும். குடும்பம் மற்றும் நண்பர்களிடையே கலந்துரையாட அனுமதி அளிக்க வேண்டும்

பணியாளர்களின் மனஅமைதியை போற்றும் வகையில் அவர்களை அவ்வப்போது உற்சாகப்படுத்த வேண்டும். மனநல ஆலோசகர்களின் ஆலோசனைகளை அவ்வப்போது வழங்க வேண்டும்.

நோய்த்தொற்று காலம் முடிவடைந்தவுடன் அவர்களின் உடல்நலம் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment