பயம் காட்டிய சில மாநிலங்களில் கொரோனா வளர்ச்சி விகிதம் சரிவு

கடந்த இரண்டு வாரங்களாக பீகார் மாநிலத்தில், கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும், கொரோனா தொடர்பான இறப்புகள் அங்கு அதிகம் காணப்படவில்லை.

இந்தியாவில்  கொரோனா பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டாலும், சிக்கலாக கருதப்பட்ட சில மாநிலங்களின் கொரோனா வளர்ச்சி விகிதத்தில் தற்போது குறிப்பிட்ட மந்தநிலை காணப்படுகிறது.

குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் தலா 6,000 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க புதிய பாதிப்புகள் மொத்த எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. இருப்பினும், கடந்த இரண்டு வாரங்களாக, இந்த மாநிலங்களில்  பாதிப்பு வளர்ச்சி விகிதங்களில் குறிப்பிடத்தக்க சரிவு காணப்படுகிறது. குறிப்பாக, இந்த மாநிலங்களின் வளர்ச்சி விகிதம் தேசிய மட்டத்தை விட தற்போது  வீழ்ச்சியடைந்துள்ளது.

குறிப்பாக, குஜராத் மாநிலம் ஒரு சுவாரஸ்யமான போக்கைக் காட்டுகிறது. கடந்த மூன்று வாரங்களில், ஒவ்வொரு நாளும் 300-400 என்ற எண்ணிகையில் தான் கொரோனா தொற்று அங்கு  கண்டறியப்படுகிறது.   இந்த காலகட்டத்தில், மே 16 அன்று மட்டும், அசாதாரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டன . நோய் பரவ அதிக வாய்ப்புள்ள மக்களுக்கு ஒரு வார காலம் சிறப்பு கொரோனா பரிசோதனை இயக்கத்தின் போது கண்டறியப்பட்ட 700க்கும்  மேற்பட்ட பாதிப்புகள் மே-16 அன்று சேர்க்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் ஒவ்வொரு நாளும் 150 முதல் 300 வரை கொரோனா தொற்றை பதிவு செய்துவருகின்றன .

எனவே, தற்போதைக்கு இந்தியாவில் கொரோனா அதிகரிப்பை மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களும்,டெல்லி யூனியன் பிரேதேசமும் இயக்கி வருகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பாக, இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பின் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டிருந்த மகாராஷ்டிரா, தற்போது  மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது.

கடந்த பத்து நாட்களில், இந்தியாவில் பதிவான கொரோனா பாதிப்பு  எண்ணிக்கையில், 40 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கண்டறியப்பட்டது.

கடந்த ஒரு வாரமாக, மகாராஷ்டிரா ஒவ்வொரு நாளும் 2,000 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றை உறுதி செய்துவருகிறது. சனிக்கிழமை வரை, மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 47,190 ஆகும். அதாவது, இந்தியாவின் ஒட்டுமொத்த கொரோனா எண்ணிகையில்(1.3 லட்சம் ) 36 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்புகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் உறுதி செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த சில நாட்களாக தமிழகமும் ஏராளமான  கொரோனா பாதிப்ப்பை உறுதி செய்து வருகிறது. இந்தியாவில் இரண்டாவது கொரோனா பாதிப்புகள் கொண்ட மாநிலமாக விளங்கும் தமிழகத்தில் இதுவரை 15,512 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் புதிதாக உறுதி செய்யப்படுவர்களின் வளர்ச்சி விகிதம்  சரிவை சந்தித்த நிலையில், கொரோனா தொடர்பான இறப்பு எண்ணிக்கை  அங்கு கட்டுக்குள் வரவில்லை. நாட்டில் மிக அதிக எண்ணிக்கையிலான இறப்பு விகிதங்களை குஜராத் கொண்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 829 பேர் இதுவரை அங்கு இறந்துள்ளனர். கொரோனா தொற்றில் குஜாரத் மாநிலத்தை விட அதிகம் பாதிப்படைந்த தமிழகத்தில் இதுவரை 103 பேர் மட்டுமே இறந்துள்ளனர்.  மறுபுறம், மத்திய பிரதேசம் ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள்  சில நாட்களாக குறைவான உயிரிழப்பை பதிவி செய்து வருகிறது.

கடந்த இரண்டு வாரங்களாக பீகார் மாநிலத்தில், கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும், கொரோனா தொடர்பான இறப்புகள் அங்கு அதிகம் காணப்படவில்லை. இதுவரை, மாநிலத்தில் 11 இறப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன. அதே சமயம் பீகார் போன்று தொற்று பாதிப்பு  கொண்ட ஆந்திராவில் 56 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் சத்தீஸ்கர் மாநிலம் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட கொரோனா தொற்றை உறுதி செய்த நிலையில், இது வரை ஒரு மரணத்தைக் கூட பதிவு செய்யவில்லை.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close