Amitabh Sinha
இந்தியாவில் கொரோனா பாதிப்பு பரவல் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், அதன் பாதிப்பு இரட்டிப்பாகும் நாட்கள் தற்போது 30 நாட்களாக சரிவடைந்துள்ளது. ஆகஸ்ட் 20ம் தேதிப்படி, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29.05 லட்சமாக உள்ளது. ஜூலை 27ம் தேதி, இந்த பாதிப்பு எண்ணிக்கையில் பாதியளவை எட்டியிருந்தது. தற்போது பாதிப்பு இரட்டிப்பு விகிதம் 24 நாட்களாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த பாதிப்பு இரட்டிப்பு விகிதம், அடுத்த 30 நாட்களில் கொரோனா பரவல் விகிதத்தை பொறுத்தே அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா இரட்டிப்பு விகிதம் என்பது பாதிப்பு குறைந்த அளவில் இருந்து அதிகளவிற்கு மாற எடுத்துக்கொள்ளும் காலஅளவே ஆகும். ஒரு குறிப்பிட்ட அளவிலான மக்கள்தொகையில், நோய்த்தொற்று பரவும்விகிதத்தை, தற்போது இந்த அளவில் அளக்கப்படுகிறது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவியது. அப்போது பாதிப்பு இரட்டிப்பு விகிதம் 10 நாட்களாக இருந்தது.
மே முதல் வாரத்தில் பாதிப்பு இரட்டிப்பு விகிதம் 10 நாட்களாக இருந்தநிலையில்,நாட்கள் செல்ல செல்ல, அது சீராக அதிகரித்துக்கொண்டே வந்தது.
கொரோனா தொற்று பரவல் வெவ்வேறு அளவில் தொடர்ந்ததால், பாதிப்பு இரட்டிப்பு விகிதத்திலும் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வந்தது. தலைநகர் டெல்லியில், பாதிப்பு இரட்டிப்பாக மாற ஆகும் நாட்கள் 100 நாட்களாக உள்ளது. ஏனெனில், அங்கு நீண்டநாட்களாக கொரோனா பரவல் விகிதம் 1 சதவீத்ததிற்கும் குறைவாகவே உள்ளது.
பஞ்சாப், கேரளா, ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அங்கு பாதிப்பு இரட்டிப்பு நாட்கள் 20 நாட்களுக்கு குறைவாக உள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த 2 நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு மிக அதீதமாக உயர்ந்து வருகிறது. ஆகஸ்ட் 19ம் தேதி, புதிதாக 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், 20ம் தேதி 14,600க்கும் மேற்பட்டோருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6.43 லட்சமாக உள்ளது. இவர்களில், 4.6 லட்சம் பேர் அதாவது 72 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் நீண்ட நாட்களாக கொரோனா பாதிப்பு விகிதம் 9 சதவீதத்திற்கு மேல் இருந்த நிலையில், அது தற்போது 3 சதவீதமாக குறைந்துள்ளது. அங்கு தினமும் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் என்ற அளவில் உள்ளது. அங்கு தற்போதைய நிலையில், மொத்த கொரோனா பாதிப்பு 3.25 லட்சமாக உள்ளது. தினசரி புதிய பாதிப்பு எண்ணிக்கையில், மகாராஷ்டிராவுக்கு அடுத்த நிலையில் ஆந்திரா உள்ளது.
பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வரும் நிலையில், பஞ்சாப் மற்றும் ஒடிசா மாநிலங்களில் இது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு தினசரி பாதிப்பு விகிதம் 4.5 சதவீதமாக உள்ளது. ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்தநிலையில், ஜூலை இறுதியில் இருந்து அங்கு நாள் ஒன்றுக்கு 500க்கும் குறையாத அளவில் புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன.
ஆனால், அங்கு கடந்த 10 நாட்களாக, நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு புதிய தொற்றுக்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. கடந்த 3 நாட்களில் மட்டும் அங்கு தினசரி 1700க்கும் மேற்பட்டோருக்கு புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டு வருகின்றன. பஞ்சாப் மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 37 ஆயிரமாக உள்ள நிலையில், அங்கு பாதிப்பு இரட்டிப்பு காலம் 16 நாட்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 20ம் தேதி நாட்டில் புதிதாக 69 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 29.05 லட்சமாக அதிகரித்துள்ளது. இவர்களில் 21.6 லட்சம் பேர், கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.