கை சுத்தமாக்கும் மருந்துகள், மாஸ்க் (முகமூடிகள்) பற்றாக்குறை மற்றும் அதிக விலையில் விற்பனை செய்வதைப் பற்றிய செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, மத்திய அரசு வெள்ளிக்கிழமை (மார்ச் 13) இந்த பொருட்களை ஜூன் இறுதி வரை "அத்தியாவசிய பொருட்கள்" என்று அறிவித்துள்ளது.
நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகத்தின் உணவு மற்றும் பொது விநியோகத்துறை: “கொரோனா வைரஸ் வைரஸ் பரவலைத் தொடர்ந்து, கொரோனா தடுப்பு நடவடிக்கையில், குறிப்பாக கடந்த இரண்டு வாரங்களில், முகமூடி அறுவை சிகிச்சை முகமூடிகள், மற்றும் கை சுத்தமாக்கும் மருந்துகள் பெரும்பாலான விற்பனையாளர்களிடம் கிடைக்கவில்லை. அல்லது, அவை அதிக விலையில் மிகுந்த சிரமத்துக்கு இடையில் வாங்கப்படுகின்றன என்று செய்திகள் வெளியாகியுள்ளது. அதனால், அரசு அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ், அத்தியாவசிய பொருட்களின் அட்டவணையை 1955-ஐ திருத்துவதன் மூலம் 2020 ஜூன் 30 வரை இந்த பொருட்களை அத்தியாவசியப் பொருட்களாக அறிவிக்கப்படுகிறது” என்று அறிவித்துள்ளது.
அரசு அறிவிப்பின் பொருள் என்ன?
அத்தியாவசிய பொருட்கள் சட்டம், “பொது மக்களின் நலனுக்காக, சில பொருட்களில் உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோகம், வர்த்தகம், வணிகம் த்தைக் கட்டுப்படுத்துவதற்காக” விதிகளை வழங்குகிறது.
பற்றாக்குறை காலங்களில் பொருட்களின் நியாயமற்ற விலை, சுரண்டல் அதிகரிப்பிலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்க 1955-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம், பல ஆண்டுகளாக திருத்தப்பட்டு, மேலும் கடுமையானதாக மாற்றப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் பீதி இந்தியா உட்பட உலகெங்கிலும் பல இடங்களில் முகமூடிகள் மற்றும் கை சுத்தமாக்கும் பொருட்கள் மற்றும் மருந்துகளை வாங்குவதற்கு தூண்டியுள்ளது.
இந்த பொருட்களின் பற்றாக்குறை, அவற்றின் விலையில் திடீர் அதிகரிப்பு மற்றும் உற்பத்தியாளர்களால் பங்குகளை பதுக்கி வைத்திருப்பதாகக் கூறப்படுவதை அடுத்து அரசாங்கத்தின் இந்த உத்தரவு வந்துள்ளது.
இந்தச் சட்டத்தின் கீழ், எந்தவொரு பேக் செய்யப்பட்ட பொருளின் அதிகபட்ச சில்லறை விலையையும் (எம்ஆர்பி) அரசாங்கம் நிர்ணயிக்க முடியும்.
கொரொனா வைரஸைத் தடுக்க முகமூடி மற்றும் கை சுத்தமாக்கும் மருந்துகள் அவசியமா?
உங்களிடம் கொரொனா அறிகுறிகள் இருந்தால் மட்டுமே, அல்லது கொரொனா அறிகுறிகளைக் கொண்ட ஒருவரை நீங்கள் கவனித்துக்கொண்டால் மட்டுமே முகமூடிகளின் பயன்பாடு உதவியாக இருக்கும் என்று மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நோய்த்தொற்று பெரும்பாலும் பாதிக்கப்பட்ட இடங்களின் வழியாக பரவுகிறது. மேலும், முகமூடிகள், குறிப்பாக அறுவை சிகிச்சையால் உண்மையில் வைரஸைத் தடுக்க முடியாது.
இதேபோல், கைகளை குறைந்தது 20 விநாடிகளுக்கு நன்கு கழுவ வேண்டும். கை கழுவுவதை சோப்பு மற்றும் சூடான தண்ணீரில் கை கழுவ வேண்டும். இது சுத்தமாக்கும் மருந்துகளைக் காட்டிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் கை சுத்தம் செய்யும் மருந்தைப் பயன்படுத்தினால், அது குறைந்தது 60% ஆல்கஹாலைக் கொண்ட ஆல்கஹால் அடிப்படையிலானது என்பதை உறுதிப்படுத்தவும். “மூலிகை” கை சுத்தம் செய்யும் மருந்து என்று அழைக்கப்படுபவைகளால் பயனில்லை.
எந்த வகையான பொருட்கள் அல்லது தயாரிப்புகள் பொதுவாக அத்தியாவசிய பொருட்கள் என வகைப்படுத்தப்படுகின்றன?
அத்தியாவசியப் பொருட்கள் என வகைப்படுத்துதல் தொடர்பாக அரசாங்கத்திற்கு பெரும் அதிகாரங்கள் உள்ளன. இந்த சட்டம் ஒரு அத்தியாவசிய பண்டத்தை வெறுமனே அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு பொருள் என்று வரையறுக்கிறது.
அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் புதிய பொருட்களை எப்போது வேண்டுமானாலும் சேர்க்கவும், நெருக்கடி முடிந்ததும் அல்லது நிலைமை மேம்பட்டதும் அவற்றை பட்டியலில் இருந்து அகற்றவும் இந்த சட்டம் மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.
பல ஆண்டுகளாக, பல்வேறு மருந்துகள், உரங்கள், தானியங்கள், பருப்பு வகைகள், சர்க்கரை, சமையல் எண்ணெய்கள், பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் மற்றும் சில பயிர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களாக ஒரு நீண்ட பட்டியல் பட்டியலிடப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில், முகமூடி மற்றும் கை சுத்தமாக்கும் மருந்து பொருட்களின் வழங்கல் மற்றும் விலையை கட்டுப்படுத்த அரசாங்கம் தலையிடலாம். அவைகள் இருப்பு வைத்திருக்க வேண்டிய அளவையும் அறிவிக்க முடியும்.
மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இந்த உத்தரவுகளை எவ்வாறு செயல்படுத்துகின்றன?
இந்த உத்தரவு மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின் பேரில் செயல்படுகின்றன. மேலும் அதன் விதிமுறைகளை செயல்படுத்துகின்றன. மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்களில் வர்த்தகம் அல்லது கையாளுதல் எவரும் குறிப்பிட்ட அளவுக்கு அப்பால் சேமித்து வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசின் உத்தரவுக்கு சில்லறை விற்பனையாளர்கள் / வர்த்தகர்கள் / உற்பத்தியாளர்கள் இணங்கவில்லை என்றால் என்ன செய்வது?
எந்தவொரு பொருளையும் "அத்தியாவசியமானது" என்று குறிப்பிடுவதன் நோக்கம் அசாதாரண தேவையின் போது லாபம் ஈட்டுவதைத் தடுப்பதாகும்.
ஆகவே, இதனை மீறுபவர்கள் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருப்பவர்கள் அல்லது வழக்குத் தொடரக்கூடிய கறுப்புச் சந்தைப் படுத்துபவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இதில் அபராதம் மட்டுமில்லாமல், மீறுபவர்களுக்கு அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வழிவகுக்கும்.
மீறுபவர்களைப் பிடிக்க சோதனைகளை நடத்த மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு அதிகாரங்கள் உள்ளன. சில்லறை விற்பனையாளர்கள் / வர்த்தகர்கள் / உற்பத்தியாளர்கள் பதுக்கி வைத்திருக்கும் அதிகப்படியான பொருட்களை அரசாங்கம் பறிமுதல் செய்யலாம். மேலும் அதை ஏலம் விடலாம் அல்லது நியாயமான விலைக்கு கடைகள் மூலம் விற்பனை செய்யலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.