கொரோனா வைரஸ் தொற்றால், இந்தியாவில் இதுவரை 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மூன்று பேர் இறந்துள்ளனர். இறந்தவர்களைக் கையாளுவதில் கூடுதல் கவனம் தேவை என்ற கருத்தை நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த வாரம், தேசிய தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸில் இறந்த 68 வயது பெண்ணின் இறுதி சடங்குகள் வைரஸ் தொற்று அச்சம் காரணமாக தாமதமானது. மருத்துவர்களும், அதிகாரிகளும் தலையிட்ட பின்பு தான் உடல் தகனம் செய்யப்பட்டது.
கொரோனா வைரஸால் இறந்தவர்களின் உடல்களை அகற்றுவது தொடர்பான நெறிமுறையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இறந்தவர்களின் உடலில் இருந்து, கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இல்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், பிரேத பரிசோதனையின் போது, கொரோனாவால் உயிர் இழந்தவரின் நுரையீரல் சரியாகக் கையாளப்படாவிட்டால், வைரஸ் தொற்று உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
பொதுவாக தொற்று நோய்களால் இறந்தவர்களுக்கு, பல்வேறு உயிர் பாதுகாப்பு நிலைகளை- biosafety levels (பி.எஸ்.எல்) உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றால் இறந்த நோயாளிகளின் உடல்களுக்கு, அந்த அமைப்பு பி.எஸ்.எல்-3 நிலையை கட்டாயப்படுத்துகிறது.
கொரோனா தொற்று உள்ளதா?. இந்த 5 நடைமுறைகளின் மூலம் எளிதாக அறியலாம்...
"பி.எஸ்.எல் -3 நிலையில், இறந்தவர்களின் உடல்கள் கசிவு இல்லாத பிளாஸ்டிக்கில் பொதி செய்யப்பட்டு, தகனம் செய்யப்பட வேண்டும். தகனத்தின் போது உடலைத் தொட உறவினர்கள் அனுமதிக்கப் படமாட்டார்கள்,”என்று தொற்று நோய்களுக்கான மருத்துவ நிபுணர் டாக்டர் ஓம்.ஸ்ரீவாஸ்தவா கூறினார். பொதி செய்யப்பட்ட உடலை எம்பாமிங், அன்சிப் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
சுகாதார ஊழியர்களுக்கு; கை சுகாதாரம், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்துதல் (நீர் எதிர்ப்பு உடை கவசம், கையுறை, முககவசம்) உடல் வைக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக்கை கிருமி நீக்கம் செய்தல் போன்ற சில நிலையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கின்றன. உடலைக் கட்டிப்பிடிக்கவோ, கழுவவோ, முத்தமிடவோ கூடாது என்று குடும்ப சொந்தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இறந்தவரின் உடலில் இருந்து வெளியாகும் திரவங்களின் மூலம் மருத்துவர்கள் மற்றும் சவக்கிடங்கு தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க பிரேத பரிசோதனை தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இறப்புக்கான காரணம் குறித்து சந்தேகம் வலுவானதாக இருந்தால் மட்டுமே சோதனை செய்ய வேண்டும்.
“ஐரோப்பாவில், உடல்கள் எரிக்கப்படுகின்றன. பிரேத பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டால், நாங்கள் பாதுகாப்பு கியர் அணிய வேண்டும், கருவிகள் உட்பட முழு பிரேத பரிசோதனை அறையையும் சோடியம் ஹைபோகுளோரைட் கொண்டு கிருமி நீக்கம் செய்ய வேண்டும் ”என்று மும்பை கேஇஎம் மருத்துவமனையின் தடயவியல் துறை தலைவர் டாக்டர் ஹரிஷ் பதக் கூறினார். உடனடியாக தகனம் செய்யாவிட்டால், ஒரு சவக்கிடங்கில், உடல் 4-6°C வெப்பநிலையில் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஒரு குடும்பம் தனது மதசடங்குகளின் பெயரில் அடக்கம் செய்வதை வலியுறுத்தாவிட்டால், உடலை தகனம் செய்ய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பும், எய்ம்ஸ் மருத்துவமனையும் அறிவுறுத்துகின்றன. H1N1 தொற்று காலத்தில் இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்ய அனுமதிக்கப்பட்டதாக மகாராஷ்டிரா சுகாதார இயக்குநரகத்தின் உதவி இயக்குநர் டாக்டர் சதீஷ் பவார் தெரிவித்தார். "அடக்கம் செய்யும் போது உடலைத் தொடக்கூடாது என்று குடும்பத்திற்கு அறிவுறித்தியதாகவும்,"அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.