நாம் அன்றாடம் பயன்படுத்திவரும் மொபைல்போன், கொரோனா உள்ளிட்ட நோய்களை உருவாக்கும் கிருமிகளின் புகலிடமாக உள்ளதாக சர்வதேச ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
மொபைல் போன்களில் நோயை உண்டாக்கும் கிருமிகள் என்ற தலைப்பில் சர்வதேச அளவில் 24 நாடுகளில் 56 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகள், தற்போது உலகையே அச்சுறுத்திவரும் கொரோனாவின் எதிரொலியாக மேற்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்று உள்ளவர்கள் வைத்திருக்கும் மொபைல் போன்கள், கொரோனா தொற்றை உருவாக்கும் SARS-CoV2 வைரஸ் மட்டுமல்லாது பல்வேறு நோய்களை உண்டாக்கும் கிருமிகளின் புகலிடமாக இருப்பதாக அந்த ஆய்வு முடிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முடிவுகள், டிராவல் மெடிசின் அண்ட் இன்பெக்சியஸ் டிசீசஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. கொரோனா தொற்று உள்ளவர்களின் மொபைல்போன்களை ஆய்வு செய்ததில், 68 சதவீதம் போன்களில் கிருமிகள் இருந்தது தெரியவந்தது. கோல்டன் ஸ்டாப், இ.கோலி உள்ளிட்ட நுண்ணுயிரிகளும், இந்த கிருமிகளுடன் இணைந்து காணப்பட்டன.
இந்த பாதிப்பிற்குள்ளான மொபைல் போன்களை தினமும் 70 சதவீத ஐசோபுரோபைல் கொண்டோ அல்லது போன்சோப் போன்ற புறஊதாக்கதிர்களை அடிப்படையாக கொண்டு இயங்கும் கருவிகளினாலேயோ சுத்தப்படுத்த வேண்டும் என்பது தங்களது பரிந்துரை என இந்த ஆய்வை மேற்கொண்ட குழுவின் தலைவரான பயோமெடிக்கல் விஞ்ஞானியும், ஆஸ்திரேலியாவின் பாண்ட் பல்கலைகழக பேராசிரியருமான லோட்டி டஜோரி கூறியுள்ளார்.
இந்த ஆய்வு தொடர்பாக, விஞ்ஞானி டஜோரி கூறியுள்ளதாவது, நாம் உணவருந்தும்போதும் உள்ளிட்ட எல்லா நிலையிலும், இடங்களிலும் மொபைல் போன்களை தன்னிடமே வைத்திருக்கிறோம். எங்கு சென்றாலும், அதனை நாம் எடுத்துச்செல்கிறோம். மொபைல் போனில், பேசும்போது நமது வாயில் இருந்து தெறிக்கும் உமிழ்நீரில் உள்ள வைரஸ்கள், பாக்டீரியாக்கள் உள்ளிட்ட நுண்ணுயிரிகள் மொபைல் போனில் ஒட்டிக்கொள்கின்றன. இந்த மொபைல் போன்கள், நோயை உண்டாக்கும் நுண்ணுயிரிகளுக்கு ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் போன்று அதற்கு தேவையான விதவிதமான ஊட்டச்சத்துகளை வழங்குகின்றன. நமது உடலின் ஒரு அங்கமாகவே மொபைல் போன் மாறிவிட்டதால், நுண்ணுயிரிகள் அதவை பிரீமியம் ஸ்பா ஆகவே கருதுவதாக டஜோரி தெரிவித்துள்ளார்.
நாம் ஒரு எல்லையில் இருந்து மற்றொரு எல்லை கடக்கும்போது நமது மொபைல் போனை யாரும் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. நாம் செல்லும் புது இடங்களில் அந்த நோயை உண்டாக்கும் கிருமிகளை எடுத்துச்சென்று அங்கும் அது நோய்களை பரப்ப நாமே காரணமாக அமைகின்றோம்
நாம் நாள் ஒன்றுக்கு சராசரியாக மொபைல்போன்களை கைகளிலேயே வைத்திருக்கிறோம். நீங்கள் அடிக்கடி கைகளை கழுவிவந்தாலும், கிருமி தொற்றுள்ள மொபைல் போன்களை தொடர்ந்து கையாள்வதால், கைகழுவி எவ்வித பயனுமில்லை
.
கொரோனா உள்ளிட்ட தொற்றுகளிலிருந்து நாம் நம்மை பாதுகாத்துக்கொள்ள மொபைல் போன் போன்ற தொடுதிரை வசதி கொண்ட சாதனங்களிலிருந்து விலகி இருப்பது நன்மை பயக்கும் என டஜோரி மேலும் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.