வளர்ப்பு பிராணிகளால் கொரோனா வைரஸ் பரவுகிறதா? : நிபுணர்கள் சொல்வது என்ன?..

நாம் வீட்டில் வளர்க்கும் நாய் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகள், வேட்டையாட பயன்படுத்தப்படும் விலங்குகளின் மூலம், மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவுகின்றன என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை.

By: March 9, 2020, 4:29:15 PM

Abantika Ghosh

coronavirus infection : நாம் வீட்டில் வளர்க்கும் நாய் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகள், வேட்டையாட பயன்படுத்தப்படும் விலங்குகளின் மூலம், மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவுகின்றன என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றின்படி, வீட்டு வளர்ப்பு பிராணிகளான நாய், பூனை உள்ளிட்டவைகளை பாதிக்கும் புதிய கொரோனா வைரஸ் குறித்த எந்த தகவலும் இல்லை. இருந்தபோதிலும், வீட்டில் வளர்ப்பு பிராணிகளுடன் விளையாடி முடித்தவுடனோ இல்லையோ அதை தொட நேர்ந்தாலோ, உடனடியாக சோப்பை கொண்டு கை, கால்களை உடனடியாக சுத்தமாக கழுவ அறிவுறுத்தப்படுகிறார்கள். இது மற்ற நோய்த்தொற்றை ஏற்படுத்தும் பாக்டீரிய வகைகளான ஈ.கோலை, சால்மோனெல்லா உள்ளிட்டவைகளின் மூலம் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்த்தொற்றுகளிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.

ஹாங்காங் நாட்டில், வீட்டில் வளர்க்கப்படும் நாய்க்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாய்க்கு வைரஸ் தொற்று எதன்மூலம் ஏற்பட்டது என்பது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஒருவேளை, இந்த தொற்று மனிதரிடமிருந்து விலங்குங்கு பரவியதா என்பது குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கொரோனா வைரஸ் தொற்று, ஒரு மனிதனிடமிருந்து மற்றொரு மனிதனுக்கு பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவவில்லை என்பதும் தெளிவாகியுள்ளது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மனிதரிடமிருந்தே, அந்த நாய்க்கு இந்த தொற்று ஏற்பட்டுள்ளதாக ஹாங்காங் தேசிய கால்நடை மருந்தக ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் ஆயுட்காலம், செயல்திறன் எப்படி?…

கொரோனா வைரசின் செயல்பாடு மற்றும் அதன் ஆயுட்காலம், வெப்பநிலையை பொறுத்தே அமைகின்றது. இந்த வைரஸ், அதிகபட்சமாக ஒருஅறை வெப்பநிலையில் 9 மணிநேரங்கள் மட்டுமே ஆக்டிவ் ஆக இருக்க முடியும் என்று நோய்கள் தடுப்புக்கான தேசிய மையம் அறிவித்துள்ளது. கடினமான இடங்களில் 9 மணிநேரங்களில், சற்று வெப்பம் குறைவான இடங்களிலும் அதற்கு மேலும் ஆக்டிவ் ஆக இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த வைரஸின் சில ஸ்டிரெய்ன்கள் 9 மணிநேரம் முதல் 9 நாட்கள் வரை ஆக்டிவ் ஆக உள்ளன. வைரஸ் தொற்று உள்ளதாக எண்ணும் இடங்களில், சோடியம் ஹைப்போகுளோரைடை கொண்டு சுத்தம் செய்துவந்தால், வைரஸ் ஆக்டிவ் ஆக இருக்கும் நேரத்தை 4 முதல் 6 மணி நேரங்களாக குறைக்கலாம் என்று தேசிய நோய் தடுப்பு இயல்துறை தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Coronavirus in india coronavirus in dogs pet animals dogs cats coronavirus infection

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X