குறையத் தொடங்கும் கொரோனா தொற்று விகிதம்; புதிய தொற்று கண்டறிதல்களில் தேக்கம்

மே மாதத்திற்குப் பிறகு முதல்முறையாக நாட்டில் ஒட்டுமொத்த கொரோனா தொற்று விகிதம் குறையத் தொடங்கியுள்ளது. பரிசோதனை செய்யபடுபவர்களில் முன்பைவிட இப்போது மிகக் குறைந்த எண்ணிக்கையில்  கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது.

மே மாதத்திற்குப் பிறகு முதல்முறையாக நாட்டில் ஒட்டுமொத்த கொரோனா தொற்று விகிதம் குறையத் தொடங்கியுள்ளது. பரிசோதனை செய்யபடுபவர்களில் முன்பைவிட இப்போது மிகக் குறைந்த எண்ணிக்கையில்  கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது.

author-image
WebDesk
New Update
coronavirus, coronavirus news, india positivity rate, india covid 19 cases, corona news, கொரோனா வைரஸ், இந்தியாவில் குறையும் கொரோன தொற்று விகிதம், coronavirus cases in india, புதிய தொற்றுகள் கண்டறிதல்களில் தேக்கம், coronavirus india update, coronavirus cases today update, coronavirus cases

மே மாதத்திற்குப் பிறகு முதல்முறையாக நாட்டில் ஒட்டுமொத்த கொரோனா தொற்று விகிதம் குறையத் தொடங்கியுள்ளது. பரிசோதனை செய்யபடுபவர்களில் முன்பைவிட இப்போது மிகக் குறைந்த எண்ணிக்கையில்  கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது.

Advertisment

கொரோனா தொற்று விகிதம் கடந்த 3 மாதங்களாக படிப்படியாக உயர்ந்து, ஆகஸ்ட் 9 ம் தேதி 9.01 சதவீதத்தை எட்டியது. அதன் பின்னர் குறையத் தொடங்கிய கொரோன தொற்று விகிதம் இப்போது 8.72 சதவீதமாக வந்துள்ளது.

கொரோனா தொற்று விகிதத்தில் சரிவு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஏனென்றால், மக்கள்தொகையில், தொற்றுநோய் பரவுவது குறைந்து வருகிறது. பரிசோதனைகள் ரேண்டமாக மேற்கொள்ளப்பட்டால் இது நிச்சயமாக உண்மையாக இருக்கும். இருப்பினும், பெரும்பாலான மாநிலங்கள் இன்னும் பரிசோதனை இலக்கை நம்பியுள்ளன. அதாவது நோய் அறிகுறி உள்ளவர்கள் அல்லது ஏற்கனவே பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பு உள்ளவர்கள் மட்டுமே பரிசோதிக்கப்படுகிறார்கள். மேலும் ரேண்டம் பரிசோதனைக்கு மாறுவது தொற்று விகிதத்தில் வீழ்ச்சியைத் தூண்டக்கூடும். ஏனென்றால் பரிசோதனை இலக்கில், அதிக எண்ணிக்கையிலான மக்கள் கொரோனா தொற்று கண்டறியப்படுவார்கள்.

Advertisment
Advertisements

கொரோனா தொற்று விகிதம் வீழ்ச்சியடைவதற்கான மற்றொரு காரணம் என்னவென்றால், சமீபத்திய செரோலாஜிக்கல் ஆய்வுகள் காட்டியுள்ளபடி, ஏராளமான மக்கள், ஏற்கனவே அவர்களுக்குத் தெரியாமலேயே வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் போது, ​​சில இடங்களில் இது மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கு அப்பால் சென்றுவிட்டதாகத் தெரிகிறது. கொரோன தொற்று விகிதம் குறைய வாய்ப்புள்ளது. ஏனெனில், முன்னர் பாதிக்கப்பட்டவர்களில் சிலரும் சோதனைகளில் சேர்க்கப்படலாம். மேலும், அவர்கள் பரிசோதனையில் கொரோனா தொற்று எதிர்மறையாக மாறுவார்கள்.

கொரோனா தொற்று வீதத்தில் ஏற்படும் சரிவு ஒவ்வொரு நாளும் கண்டறியப்படும் புதிய தொற்றுநோய்களின் எண்ணிக்கையில் ஏற்படும் தேக்கத்துடன் தொடர்புடையது.  இந்த எண்ணிக்கை இப்போது 60,00க்கு மேல் இரண்டு வாரங்களாக உயர்ந்துள்ளது. இது சமீபத்தில் வேறு எந்த வரம்பிலும் செய்ததை விட சற்று அதிகமனாது. எடுத்துக்காட்டாக, 60,000க்கும் மேற்பட்ட புதிய தொற்றுகள் கண்டறியத் தொடங்குவதற்கு முன்பு, 8 நாட்களில் புதிய தொற்று கண்டறிதல்கள் 50,000களில் இருந்தன. இதேபோல், ஒரு வாரம் தலா 30,000 மற்றும் 40,000 எண்ணிக்கைகளில் இருந்தன.

60,000 தொற்று எண்ணிக்கையில் ஒப்பீட்டளவில்  ஸ்திரத்தன்மை இல்லை. புதிய தொற்று கண்டறிதல்களின் எண்ணிக்கையும் இந்த நேரத்தில் 50,000களில் பல முறை குறைந்துவிட்டது. முக்கியமாக வார இறுதிக்குப் பிறகு சோதனை எண்ணிக்கை வழக்கமாக ஒரு குறிப்பிடத்தக்க அளவு குறையும்.

ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளப்படும் சோதனைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வரும் நேரத்தில் நேர்மறை விகிதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நோயாளிகளின் தினசரி புதிய தொற்று கண்டறிதலின் எண்ணிக்கை ஆகஸ்ட் முதல் வாரத்தில் 60,000ஐத் தாண்டியபோது, ​​ஒவ்வொரு நாளும் சுமார் 6.5 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இப்போது, ​​ஒவ்வொரு நாளும் சுமார் 8.5 லட்சம் சோதனைகள் நடத்தப்படுகின்றன. வழக்கமாக, அதிக எண்ணிக்கையிலான சோதனைகள் நேர்மறையான நிகழ்வுகளை அதிக அளவில் கண்டறியும்.  இந்த எண்ணிக்கை 60,000க்கு இடையில் தினசரி தொற்று கண்டறிதல் தொடர்ந்து தேக்க நிலையில் உள்ளது என்பது நோய் பரவல் குறையும் இந்த போக்கு சுட்டிக்காட்டுகிறது.

இந்த போக்குகள் இந்திய மக்கள்தொகையில் நோய்த்தொற்றின் அளவு வைரஸை மேலும் பரப்புவதைத் தொடங்கும் கட்டத்தை எட்டியுள்ளதா என்ற விவாதத்தைத் திறக்கக்கூடும். புனேவில் அண்மையில் நடந்த செரோலாஜிகல் கணக்கெடுப்பில் ஏற்கனவே 51 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோயின் பரவல் அந்த அளவை எட்டும் போது, ​​நோய்த்தொற்று ஏற்படாதவர்களை விட அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தொற்றுநோயைப் பெறக்கூடிய நபர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பரவும் வீதம் அல்லது நோய் பரவும் வேகம் குறையும். இது இன்னும் ஆரம்ப நாட்களில் இருக்கலாம். ஆனால், இது ஒரு குறிப்பிட்ட அளவில், குறைந்தபட்சம் சில இடங்களில் நடக்கத் தொடங்கியிருப்பதற்கான வாய்ப்பை நிராகரிக்க முடியாது. இதுதான் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி என்ற கருத்து நடைமுறைக்கு வருவது ஆகும்.

நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை 64,000க்கும் மேற்பட்ட புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டன. இதனால், உறுதிப்படுத்தப்பட்ட மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 27.67 லட்சமாக இருந்தது. இவர்களில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர், சுமார் 73.6 சதவீதம் பேர் ஏற்கனவே நோயிலிருந்து மீண்டுள்ளனர். அதே நேரத்தில், இறப்பு எண்ணிக்கை 53,000ஐ எட்டியுள்ளது. செவ்வாய்க்கிழமை 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: