டெல்லியில் இன்னும் அதிகரித்துவரும் தொற்றுநோயின் ஆரம்பகட்ட உடனடி அபாயத்தை காட்டுவதாகத் தெரிகிறது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், தேசிய தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் உச்சத்தை அடைந்தது. பின்னர், கீழ்நோக்கி சரிவடைகிறது என்ற தோற்றத்தை அளித்தது. டெல்லியில் புதிய தொற்றுகளைக் கண்டறிதல் ஒரு நாளைக்கு 1,000க்குக் கீழே வந்துள்ளது. கொரோனா இறப்புகள் ஒவ்வொரு நாளும் ஒற்றை இலக்கங்களில் அல்லது ஆரம்ப இரட்டை இலக்கங்களில் பதிவாகின்றன. பெரும்பாலான நாட்களில் புதிய தொற்றுகளைவிட ஒவ்வொரு நாளும் தொற்றிலிருந்து குணமடைந்து மீண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கையை சுமார் 10,000 என்ற அளவுக்கு குறைந்துவருகிறது.
ஆனால், இது உண்மையாக இருப்பது மிகவும் நல்லது என்று தோன்றும். கடந்த 2 வாரங்களாக தொற்றுகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த 3 நாட்களில், 2,000க்கும் மேற்பட்ட புதிய தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை (செப்டம்பர் 3) 2,700க்கு மேல் புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டன. இந்த எண்ணிக்கை 2 மாதங்களுக்கும் மேல் கண்டறியப்பட்டதைவிட மிக அதிகமாகும். டெல்லியில் அதிக தொற்று கடைசியாக ஜூன் 28ம் தேதி கண்டறியப்பட்டது.
இந்த உயர்வுக்கு என்ன காரணம் என்று தெளிவாக தெரியவில்லை. மேலும், தொற்றுக்கான தூண்டுதல் மிக சமீபத்தியதாக இருக்க வேண்டும். ஏனென்றால், தேசிய தலைநகர் டெல்லியில் 2வது சுற்று சீரோபிரவெலன்ஸ் கணக்கெடுப்பு ஆகஸ்ட் முதல் வாரத்தில் மேற்கொள்ளப்பட்டது. அது ஒரு மாதத்திற்கு முன்னர், முதல் சுற்று கணக்கெடுப்பு நடத்தப்பட்ட காலத்திலிருந்து தொற்றுநோயின் பரவல் கணிசமாக அதிகரிக்கவில்லை என்று காட்டியது. டெல்லியில் முதல் சுற்று சீரோபிரவலன்ஸ் கணக்கெடுப்பு டெல்லியின் மக்கள் தொகையில் சுமார் 23 சதவீதம் பேர் அந்த நேரத்தில் தொற்றுநோய் இருந்திருக்கலாம் என்று சுட்டிக்காட்டியிருந்தது. 2வது சுற்றில் கணக்கெடுக்கப்பட்ட மக்களில் 29 சதவீதம் பேர் தொற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த காலகட்டத்தின் தரவுகளுடன் ஒத்துப்போகின்ற இரண்டு கணக்கெடுப்புகளுக்கிடையில், இந்த தொற்றுநோய் மிக வேகமாக பரவவில்லை என்பதே இதன் பொருள். ஆனால், பின்னர் அது விரைவாக பரவுவதற்கு வழியைத் திறந்து விட்டுள்ளது. ஏனென்றால் மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் இன்னும் அதுவரை பாதிக்கப்படாமல் இருந்ததால், எளிதில் பாதிக்கப்பட்டனர்.
இப்போது நடத்தப்பட்ட ஒரு செரோபிரெவலன்ஸ் சோதனையானது, இந்த நோய் மக்கள் தொகையில் மிக அதிகமான விகிதத்தில் பரவியுள்ளது என்பதைக் காட்டக்கூடும். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திரும்பி வருவது, பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்கியிருப்பது, மற்றும் போக்குவரத்தில் தளர்வுகளை ஏற்படுத்தியதே சமீபத்திய உயர்வுக்குக் காரணம். ஆனால், தொற்று எண்ணிக்கையின் தொடர்ச்சியான வீழ்ச்சி பொதுமக்களிடையே மனநிறைவைத் ஏற்படுத்தக்கூடும் என்று வல்லுநர்கள் நம்புகின்றனர். இது தனிமனித இடைவெளியையும் முகக்கவசம் அணியும் விதிமுறைகளை விடுவதற்கு வழிவகுக்கிறது.
அடுத்த வாரம் முதல் மெட்ரோ ரயில் போக்குவரத்து நடவடிக்கைகள் மீண்டும் தொடங்குவதால் தொற்றுகள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு நாளும் குறைந்தது 40,000 மாதிரிகள் பரிசோதனையை உறுதி செய்வதற்காக பரிசோதனை மையங்களை அதிகரிப்பதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் வியாழக்கிழமை, 32,000க்கு மேல் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரையில் மிக உயர்ந்தது. கொரோனா வைரஸ் கண்டறியும் கொரோனா வைரஸ் கண்டறியும் பரிசோதனைகளை மேற்கொள்ள கிட்டத்தட்ட 470 மொஹல்லா கிளினிக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிராவிலும் இதேபோன்ற தொற்று உயர்வு காணப்படுகிறது. அம்மாநிலத்தில் சிலநாட்களில் தினசரி புதிய தொற்றுகள் புதிய உச்சங்களைத் தொடக் கூடும். ஆகஸ்ட் மாதத்தின் பெரும்பகுதியில், மகாராஷ்டிரா ஒவ்வொரு நாளும் 7,000 முதல் 11,000 புதிய தொற்றுகளை பதிவு செய்து வருகிறது. ஆனால், அந்த அதிகரிப்பு ஆகஸ்ட் கடைசி வாரத்திலிருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது. அம்மாநிலத்தில், வியாழக்கிழமை முதல் முறையாக 18,000க்கு மேல் புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டன.
நாட்டில் சமீபத்திய கொரோன தொற்று எண்ணிக்கை அதிகரிப்பில், மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களும் மிகப் பெரிய பங்களிப்பவைகளாக உள்ளன. கடந்த ஒன்பது நாட்களாக, ஆந்திராவில் 10,000 முதல் 11,000 வரை புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக, நாட்டின் 2வது மிக அதிக தொற்றுகளைக் கொண்ட மாநிலமாக ஏற்கனவே தமிழகத்தை முந்திக்கொண்டுள்ளது.
நாட்டில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வியாழக்கிழமை 83,000க்கு மேல் புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 39.36 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை, வெள்ளிக்கிழமை 40 லட்சத்தைக் கடக்கும் என்று தெரிகிறது. அப்படி நடந்தால் இந்தியாவின் கொரோனா வைரஸ் எண்ணிக்கையில் மிக வேகமாக அரை மில்லியன் அதிகரிக்கும். ஒரு வாரத்திற்குள் 5 லட்சத்துக்கும் மேலான புதிய தொற்றுகள் சேர்க்கப்படும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.