/tamil-ie/media/media_files/uploads/2020/04/template-2020-04-03T145555.448.jpg)
india lockdown, 21 days of india lockdown, orimew minister narendra modi, easing of curbs, lockdown impact, coronavirus india, indian express, coronavirus tamil news, coronavirus tamil nadu news, coronavirus chennai news, coronavirus Tamil nadu, coronavirus outbreak
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், 9 நாட்கள் நிறைவடைந்துள்ளன. இந்த ஊரடங்கு உத்தரவால், பல்வேறு துறைகளில் பொருளாதார சுணக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த இக்கட்டான நிலையிலிருந்து மீளும் வகையிலான நடவடிக்கைகள் மற்றும் ஆலோசனைகளில் அரசுகளுடன் நிறுவனங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
இதற்கு பதிலளிக்கும் வகையில், பிரதமர் மோடி, கடந்த ஏப்ரல் 2ம் தேதி, மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்..இந்த ஊரடங்கு உத்தரவு விரைவில் நிறைவு அடைய உள்ள நிலையில், மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள், இந்த இக்கட்டான நிலையிலிருந்து மீள்வதற்கான நடைமுறைகள் குறித்து விவாதித்ததாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டை பொருளாதார சரிவிலிருந்து மீட்பது முக்கியம் என்றாலும், அதற்காக கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தவறிவிடக்கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. மத்திய அரசு, ஊரடங்கு உத்தரவை 21 நாட்களுக்கு பிறகு விலக்கிக்கொண்டாலும், பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள், தங்கள் வசதிக்கேற்ப அங்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏப்ரல் 14ம் தேதியுடன் முடிவடையும் ஊரடங்கு உத்தரவு கால நேரத்தில் புதிதாக எந்தவொரு நோய் தொற்றும் இல்லாதபட்சத்தில், மாநில அரசுகள், மீண்டும் நோய்த்தொற்று ஏற்படாவண்ணம் தேவையான நடவடிக்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
நாட்டின் பெரும்பாலான நிலைகளில் இதுபோன்ற நிலை தொடரும் பட்சத்தில் அத்தகைய இடங்களில் இன்னும் அதிக கவனம் செலுத்தி அங்கு மீண்டும் நோய் தொற்று ஏற்படாநிலையை உறுதி செய்ய வேண்டும். இதன்மூலமே, இந்த கொரோனா பீதியிலிருந்து நாம் நம்மை முழுவதுமாக தற்காத்துக்கொள்ளும் நடவடிக்கை என மத்திய அரசின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
நோய்த்தொற்று நீங்கிய இடங்களில் அதிக கவனம் செலுத்தி, அங்கு மீண்டும் நோய் தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கண்காணிப்பு சோதனைகளில் எந்தவொரு தொய்வும் ஏற்படாதவகையில் பார்த்துக்கொள்வதோடு மட்டுமல்லாது, கடைபிடிக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
நாட்டின் சில பகுதிகளில் நோய்த்தொற்று குறைந்துவந்த நிலையில், டெல்லி தப்லிக் மாநாட்டில் பங்கேற்றவர்களின் மூலம் நோய்த்தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த சிலநாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டதாக 9 மாநிலங்களிலிருந்து 400க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குனரும், கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள உயர்மட்டக்குழுவில் இடம்பெற்றுள்ள டாக்டர் ரன்தீப் குலேரியா, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது,
இந்த ஊரடங்கு உத்தரவு இன்னும் எத்தனை காலம் தொடரும்?
ஊரடங்கு உத்தரவு தேசிய அளவில் இருக்குமா?
சில இடங்களில் இந்த உத்தரவு விலக்கிக்கொள்ளப்படுமா
என்ற 3 வகையான கேள்விகள் நம்மில் பெரும்பாலானோரிடம் உள்ளது. இந்த கேள்விக்கு அந்தந்த இடங்களில் நோய்த்தொற்று பரவலை பொறுத்தே அமையும் என்பது தான் எனது பதிலாக இருக்கும். நோய்தொற்று குறைவு, தொற்று பரவல் தடுப்பு , எந்தெந்த பகுதிகள் பாதுகாப்பானது, ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்ட பலன்கள், மீண்டும் தொற்று ஏற்படாநிலை உள்ளிட்டவைகளின் அடிப்படையிலேயே ஊரடங்கு உத்தரவை தளர்த்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்.என்று அவர் கூறினார்.
ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா என்ற கேள்விக்கு தற்போதைக்கு நீட்டிக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று கேபினட் செயலாளர் ராஜீவ் கவுபா தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும், நாட்டில் இயல்புநிலை திரும்பும் வரையில், இதுபோன்ற தடை உத்தரவுகள் அமலில் வைத்திருக்கும் திட்டம் பலபகுதிகளில் இருப்பதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது நோய் தொற்று குறைந்திருப்பதாக தோன்றினாலும் மீண்டும் வைரஸ் தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக விஞ்ஞானிகள், நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த விசயத்தில் நாம் அனைவரும் சிறிது அதிர்ஷ்டம் செய்திருக்கிறோம். பல பகுதிகளில் நாம் வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். வைரஸ், மீண்டும் பரவுவதற்கான வழிகளை நாம் அடைத்துள்ளோம்.
மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நடத்திய ஆலோசனைகளின் போதும், பிரதமர் மோடி இதையே எடுத்துரைத்துள்ளார். நாம் கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி அடைந்துவிட்டோம் என்று எண்ணிவிடாமல், நாம் முதற்படியிலேயே இருக்கிறோம் என்பதை மறந்துவிட வேண்டாம் என்று மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஊரடங்கு உத்தரவை மேலும் இரண்டு வார காலங்கள் நீட்டிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அவசர கால நிலையில், இதுகுறித்து முடிவெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவின் மூலமாகவே, ,நாம் வைரஸ் தொற்றை இந்தளவிற்கு கட்டுப்படுத்த முடிந்ததாகவும், இந்த உத்தரவை மேலும் சில வாரங்களுக்கு நீட்டிப்பதனால் நன்மையே விளையும் என்று மருத்துவத்துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், நாட்டின் பொருளாதாரம் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளோம் என்பதை நாம் யாரும் மறந்துவிடக்கூடாது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.