உத்தரபிரதேச மாநிலத்தின் பரேலி பகுதியில் கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் நுழைந்த டில்லி உள்ளிட்ட மற்ற மாநிலங்கள், பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் மீது டிஸ்இன்பெக்டண்ட்களை பீச்சியடித்து அவர்களை சுத்தப்படுத்தும் பணியில், உ.பி.சுகாதராத்துறையினர் ஈடுபட்டனர். இந்த நிகழ்வு, பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொழிலாளர்கள் மீது பீச்சியடிக்கப்பட்ட டிஸ்இன்பெக்டண்ட்களில், சோடியம் ஹைப்போகுளோரைடு முக்கிய பகுதிப்பொருளாக இருந்தது. இந்த சோடியம் ஹைப்போகுளோரைடு கரைசல், பெரும்பாலும் சுத்தப்படுத்தும் பொருளாகவே பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் நீச்சல் குளங்களை சுத்தப்படுத்த இந்த வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.
இந்த வேதிப்பொருள் குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வீடுகள், கட்டடங்கள் உள்ளிட்டவைகளை சுத்தப்படுத்த பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த வேதிப்பொருள் பாதுகாப்பானதா?
சோடியம் ஹைப்போகுளோரைடு எனும் இந்த வேதிப்பொருள் பெரும்பாலும் சுத்தப்படுத்தும் பணியிலும், நோய்த்தொற்றை அகற்றும் டிஸ்இன்பெக்டண்ட்களிலும் முக்கிய பொருளாக உள்ளது. டிஸ்இன்பெக்டண்ட் ஆக இதனை பயன்படுத்தும்போது அது குளோரின் வாயுவை வெளியிடுகிறது. இடத்தில் உள்ள அழுக்கு, நோய்த்தொற்று உள்ளிட்டவைகளை பொறுத்து இதன் அடர்த்தி வேறுபடுகிறது. அதிகப்படியான குளோரின் வாயு, மனித உடலுக்கு தீங்குவிளைவிக்கும். வீடுகளில் சாதாரணமாக பயன்படுத்தப்படும் டிஸ்இன்பெக்டண்ட்களில் 2 முதல் 10 சதவீதம் வரையிலான சோடியம் ஹைப்போகுளோரைடு கரைசலே உள்ளது. 0.25 முதல் 0.5 சதவீதம் வரையிலான இந்த வேதிப்பொருள், உடலில் ஏற்படும் காயங்கள் மற்றும் தழும்புகளை சுத்தப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. 0.05 சதவீத இந்த கரைசல், ஹேண்ட்வாஸ் ஆக பயன்படுத்தப்படுகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2020/03/template-2020-03-31T154748.304-300x200.jpg)
வெவ்வேறு இடங்களில் பயன்படுத்தப்படும் இந்த வேதிப்பொருளின் அடர்த்தி என்ன?
டில்லியில் உள்ள வேற்று மாநில தொழிலாளர்களின் கடைகள், வீடுகள் உள்ளிட்டவைகளை சுத்தப்படுத்தும் பொருட்டு, 1 சதவீத சோடியம் ஹைப்போகுளோரைடு கரைசல் பயன்படுத்தப்பட்டது. கட்டடங்கள், வாகனங்கள் போன்றவற்றை சுத்தப்படுத்த வெவ்வேறு இடங்களில் இந்த வேதிப்பொருள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், அதன் அளவு குறித்து தெரிவாக விளக்கப்படவில்லை.
மனிதனின் உடல் மற்றும் தோலுக்கு தீங்கு தருவதாக 1 சதவீத சோடியம் ஹைப்போகுளோரைடு கரைசல் உள்ளது. இந்த கரைசல் உடலின் உள் செல்லும்பட்சத்தில் நுரையீரலுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தும். . இது அரிக்கும் தன்மை கொண்டதால், தரை உள்ளிட்ட இடங்களில் உள்ள அழுக்கை நீக்க இது பயன்படுத்தப்படுகிறது. இது, மனித உடலின் பயன்பாட்டிற்கு ஏற்றத்தக்கல்ல என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே, இதை பீச்சியடிக்கும் நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படுவதில்லை. 0.05 சதவீத இந்த கரைசல், கண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.
மும்பை முனிசிபல் கார்ப்பரேசன் பூச்சசிகள் ஒழிப்புத்துறை அதிகாரி டாக்டர் ராஜன் நரின்கிரேகர் இதுகுறித்து கூறியதாவது, சோடியம் ஹைப்போகுளோரைடு கரைசல், மனித உடலில் பட்டால், எரிச்சல், அரிப்பு உள்ளிட்டவைகளை ஏற்படுத்தவல்லது. எனவே, இதுபோன்ற வேதிப்பொருட்களை மனிதர்களின் மீது செலுத்த அனுமதிக்கப்படுவதில்லை. மனிரதர்கள் அதிகம் பயன்படுத்தும் நீச்சல் குளங்களில் கூட, மிகவும் குறைவான அடர்த்தி கொண்ட சோடியம் ஹைப்போகுளோரைடு கரைசலே பயன்படுத்தப்படுகிறது. இதனாலேயே, நீச்சல் குளத்தை பயன்படுத்துபவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை என்று கூறினார்.
மகாராஷ்டிரா மாநில பொது சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் சுபாஷ் சலுங்கே கூறியதாவது, மனிதர்கள் மீது இந்த கரைசல் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. புனே உள்ளிட்ட பகுதிகளில், கட்டடங்கள் உள்ளிட்டவைகளை சுத்தம் செய்ய மட்டுமே பயன்படுத்த வேண்டுமே தவிர, மனிதர்களின் மீதான பிரயோகத்திற்கு பயன்படுத்தக்கூடாது என்று அவர் கூறினார்.
கொரோனா வைரஸ் ஒழிப்பில் இது பலனளிக்குமா?
உலக சுகாதார நிறுவனம், அமெரிக்காவின் தேசிய நோய் தடுப்பு மையங்கள் உள்ளிட்டவைகளின் பரிந்துரைகள் யாதெனில், 2 முதல் 10 சதவீத வரையிலான வீட்டில் பயன்படுத்தப்படும் பிளீச்சிங் பொருட்கள், கொரோனா வைரஸ் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடங்களை சுத்தம் செய்ய பயன்படுகின்றன.
அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைகழக பேராசிரியர் கூறியதாவது, சோடியம் ஹைப்போகுளோரைடு கரைசல், நோவல் கொரோனா வைரசை ஒழிக்க பயன்படுகிறதோ இல்லையோ புட் பாயசனிங் மூலமாக பரவும் ப்ளூ உள்ளிட்ட நோய்த்தொற்றுகளை அழிக்க பயன்படுகிறது. இந்த வேதிக்கரைசலை பெரும்பாலும் வெட்டவெளிகளிலேய பயன்படுத்த வேண்டும் என்று இதை கையாளும்போது கைகளில் கையுறை அணிந்திருக்க வேண்டும் போன்ற பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க..