கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு, இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் இந்த வைரசின் கொடூரத்தை அறியாது பொது இடங்களில் இன்னும் நடமாடி வருகின்றனர். இதன்மூலம், தொற்று பரவல் மிக அதிகளவிலானதாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையே தொடர்ந்தால், இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏப்ரல் 15ம் தேதிக்குள் 4,800 ஆகவும், மே மாதத்தில் இந்த எண்ணிக்கை 58,600 ஆக அதிகரிக்கும் என்ற அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் மிக்சிகன் மற்றும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைகழக விஞ்ஞானிகள் இணைந்து ஆய்வு நடத்தியுள்ளனர். அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆய்வு முடிவுகள், இந்தியாவில் மார்ச் 16ம் தேதி நிலவரப்படி மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சுதாரித்த மத்திய அரசு, விமான நிலையங்களில் பரிசோதனை, தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. இதில் முத்தாய்ப்பான நடவடிக்கைகளாக சுய ஊரடங்கு, மற்றும் 21 நாட்கள் முடக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை சொல்லலாம்.
சமூக விலகல், நிகழ்வின் ஒரு பகுதியாக பயணங்களுக்கு தடை விதிக்கும் வகையில், ரயில்கள், விமானங்களின் போக்குவரத்துகளுக்கு தடைவிதித்துள்ளதன் மூலம், நோவல் கொரோனா வைரசின் தொற்றை கட்டுப்படுத்த முடியும்.
இத்தகைய கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டிராவிட்டால், மே 15ம் தேதியே, நாட்டில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்தை கடந்திருக்கும். தற்போதைய நடவடிக்கைகளில், இந்த காலகட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரம் என்ற அளவில் இருக்கும். இந்த விவகாரத்தில், நாம் மேலும் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் உள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான நடவடிக்கைகள், தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் என்னென்ன என்று குறிப்பிடப்படவில்லை. சமூக விலகல், பயணங்களுக்கு தடை, முடக்கம், பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை (குணமடைந்தவர்களையும் சேர்த்து) போன்ற நடவடிக்கைகள் இல்லாமல் இருந்திருந்தால், நாட்டில் இத்தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை ஜூன் 15ம் தேதிக்குள் 1.31 லட்சம் என்ற இமாலய அளவை எட்டியிருக்கும்.
மார்ச் 21ம் வரையிலான டேட்டாக்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில், தொற்று பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற தகவலே வெளியாகியுள்ளதாக, அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைகழகத்தின் பொது சுகாதாரத்துறை பேராசிரியர் பிராமர் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
மார்ச் 21ம் தேதி வரையிலான டேட்டாக்களின் படி, மே 15ம் தேதியில் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 1 லட்சமாகவும், (அதிகபட்சமாக 1.3 மில்லியன்) அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆய்வில் இதன் மதிப்பு 58,600 (அதிகபட்சமாக 9,15,000) என்ற அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. தினமும் கிடைக்கும் டேட்டாக்களை கொண்டு ஆய்வு நிகழ்த்தி வருவதாக முகர்ஜி மேலும் கூறியுள்ளார்.
கொரோனா தொற்று உள்ள நபர் அதிகபட்சமாக 3 நபர்கள் வரையில் தொற்றுவை பரவிவந்துள்ள நிலையில், இந்தியாவில் தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளினால், சராசரியாக 2 பேருக்கு மட்டுமே பரவும் வகையில் பரவல் தடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள கணித அறிவியல் மைய நிபுணர்கள் செளமியா ஈஸ்வரன் மற்றும் சிதாப்ரா சின்கா நடத்திய ஆய்வில், இந்தியாவில், ஒரு தொற்று உள்ள நபர், சராசரியாக 1.7 மனிதர்களிடையே மட்டும் இத்தொற்றை உருவாக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 மாதங்களில் ( சீனாவின் வுஹானில் கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து) இதுகுறித்த சமூக கூட்டு கற்பனைகளின் தோல்விகளையே நாம் சந்தித்து வந்துள்ளோம். கோவிட் -19 தொற்றுவை பெரிய விசயமாக கருதிய நாம் தான், இன்று வீடுகளில் முடங்கியுள்ளோம், முடக்கப்பட்டுள்ளோம்.
இந்தியா, தற்போது எடுத்துள்ள நடவடிக்கைகள் மட்டுமல்லாது, இன்னும் அதிதீவிர முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே, இதன் பாதிப்பிலிருந்து நாம் மீள முடியும் என்று முகர்ஜி மேலும் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க