காய்கறிகள் மக்களிடம் நேரடி விற்பனை : விவசாயிகளுக்கு பலன் அளிக்குமா?

மகாராஷ்டிராவில் மொத்த விற்பனை சந்தைகள் மூடப்பட்டுள்ளதால், 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் - தயாரிப்பு நிறுவனங்கள் மாநிலத்தின் நகர்ப்புற பகுதிகளில், காய்கறிகளை நேரடியாக மக்களிடையே வர்த்தகம் செய்து வருகின்றன.

By: Updated: April 10, 2020, 04:00:13 PM

மகாராஷ்டிராவில் ஊரடங்கு உத்தரவின் மூலம் விற்பனை மண்டிகளுக்கு செல்லாமல், வயல்களில் விளைந்த காய்கறிகள் நேரடியாக பயனாளர்களை நோக்கி சென்று கொண்டிக்கின்றன.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக, மக்கள் ஒரே சமயத்தில் அதிகளவில் கூட தடை விதிக்கப்பட்டிருப்பதால், மொத்த விற்பனைக்கூடம் என்ற முறை ஒழிக்கப்பட்டு, மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

விவசாயிகளின் குழுக்கள் மற்றும் விவசாயிகள் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்டவைகள் இணைந்து சிறிய அல்லது குறைந்த மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் மக்களிடம் நேரடியாக காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றன.

மகாராஷ்டிரா மாநிலத்தில், நாட்டிலேயே அதிகளவில் விவசாயிகள் தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த மாதிரி முறை, மாநில விவசாய துறை மற்றும் மகாராஷ்டிரா மாநில விவசாய பொருட்கள் விற்பனை வாரியம் இணைந்து உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பு, ஊரக மற்றும் நகர்ப்புற பகுதி விவசாயிகளிடமிருந்து காய்கறிகளை மொத்தமாக பெற்று காய்கறி வர்த்தகத்தை நிகழ்த்தி வருகிறது.

இந்த முறையில் வர்த்தகம் எவ்வாறு செயல்படுகிறது?

மாநில அரசு மற்றும்மகாராஷ்டிரா மாநில விவசாய பொருட்கள் விற்பனை வாரியம், மாநிலத்தில் உள்ள விவசாயி குழுக்கள் மற்றும் விவசாயி தயாரிப்பு நிறுவனங்களை அடையாளம் கண்டு அவர்களுக்குள் மண்டலங்களை உருவாக்குகின்றன. உள்ளாட்சி நிர்வாகங்கள் சந்தைக்கான இடத்தை தேர்வு செய்கின்றன.இந்த சந்தைகள் எல்லாம் ஒருங்கிணைக்கப்பட்டு கூட்டுறவு வீட்டு சங்கங்களுக்கு நேரடி டெலிவரி செய்யப்படுகின்றன.
இந்த நடைமுறை, 2000மாவது ஆண்டிலேயே துவங்கி நடைபெற்று வருகிறது. விவசாயி குழுக்கள் மற்றும் விவசாயிகள் தயாரிப்பு நிறுவனங்கள், நகராட்சி மற்றும் உட்புற பகுதிகளில் வார சந்தைகள் நடத்த இடம் ஒதுக்கப்படுகிறது. சில பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், வண்டிகளின் மூலமாகவேல கூட்டுறவு வீட்டு சங்கங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்களை நேரடியாக வழங்கி வருகின்றன. உள்ளூர்களில் விளையும் காய்கறிகள் அங்கே அதிகளவில் கிடைப்பதால் மக்களுக்கு குறைந்த விலையில் அதிகளவில் கிடைக்க வழிவகை ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு

கொரோனா வைரஸ் தொற்று பரவலால், மத்திய அரசு மக்கள் நெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் தனி மனித இடைவெளியை பேண அறிவுறுத்தி வருகின்றது. இதன்காரணமாக, மண்டிகளில் குறைந்த அளவு வாடிக்கையாளர்களே வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மண்டிகளில் மக்கள் உடனான தொடர்பு குறைந்துள்ள நிலையில் முன்னணி விவசாயிகள் -தயாரிப்பு நிறுவனங்கள் காய்கறிகளை பேக்கிங் செய்து அவற்றை வர்த்தகப்படுத்த முன்வந்துள்ளது.

மும்பை மற்றும் புனே நகரங்களில், விவசாயிகள் – தயாரிப்பு நிறுவனங்கள் வீட்டு சொசைட்டிகளுக்கு நேரடியாக காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றன. இந்த நிறுவனங்கள், தொலைபேசி வசதியை அமைத்து அதன்மூலம் ஆர்டர்களை பெற்று வாடிக்கையாளர்களுக்கு காய்கறிகளை வழங்கி வருகின்றன.

மகாராஷ்டிராவில் மொத்த விற்பனை சந்தைகள் மூடப்பட்டுள்ளதால், 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் – தயாரிப்பு நிறுவனங்கள் மாநிலத்தின் நகர்ப்புற பகுதிகளில், காய்கறிகளை நேரடியாக மக்களிடையே வர்த்தகம் செய்து வருகின்றன.

காய்கறிகள் அறுவடை காலத்தில் சரியாக இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் சந்தைகள் முழுவதும் மூடப்பட்டுள்ளன. இதன்காரணமாக, நாட்டில் 100 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள காய்கறிகள் வீணாகும் நிலை ஏற்பட்டது. வாடிக்கையாளர்களுக்கு நேரடி டெலிவரியின் மூலம், விவசாயிகளின் வாழ்வில் சிறிது மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

காய்கறிகள் வளர்ப்போர், இப்போது நேரடியாக வாடிக்கையாளர்களிடமே தங்களது காய்கறிகளை விற்று வருகின்றனர். இதன்மூலம் அவர்களுக்கு நேரடியான லாபம் உடனடியாக கிடைத்து விடுகிறது. இதன்மூலம் அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விற்பனைக்கு போக மீதம் உள்ள காய்கறிகளை பேக்கிங் செய்து அபார்ட்மெண்ட்களில் பெறும் ஆர்டர்களை பொறுத்து விநியோகித்து வருகின்றனர்.

விவசாயிகள் நேரடி விற்பனை மூலம் மிகுந்த பயன் பெறுகின்றனர். நகர்ப்புற பகுதிகளில் உள்ள தொழில்முனைவோர்கள், விவசாயிகளிடமிருந்து காய்கறிகளை பெற்று பல்வேறு இடங்களில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலை, இன்னும் சிலகாலம் நீடிக்குமென அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Coronavirus india lockdown india lockdown food supply india lockdown essential services

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X