இந்தியாவில் கோவிட்-19 தொற்றுகளின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன?

நாட்டில் கடந்த சில நாட்களாக மிகவும் சுவாரசியமான எண்ணிக்கையில் தொற்று குறைந்துள்ளது. இதற்கு, இப்போது நல்ல விளக்கம் எதுவும் கிடைக்கவில்லை.

இந்தியாவில் கொரோனா வைரஸ் புதிய தொற்று கண்டறிதல்களின் எண்ணிக்கை சனிக்கிழமையன்று மேலும் குறைந்துள்ளது. இந்தியாவில் சனிக்கிழமை 76,000க்கும் குறைவான மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்ட எண்ணிக்கையை விட சுமார் 3,000 குறைவாக உள்ளது. இது ஒரு மாதத்தில் பதிவான மிகக் குறைந்த தொற்று எண்ணிக்கை ஆகும். இது மிகக் குறைந்த பரிசோதனை காரணமாக ஏற்பட்டது அல்ல.

கடந்த சில நாட்களாக மிகவும் சுவாரஸ்யமாக அதிக எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் தொற்று பதிவானது. அதற்கு இப்போது நல்ல விளக்கம் எதுவும் கிடைக்கவில்லை. புதிய தொற்று கண்டறிதல்கள் கனிசமாகக் குறைந்துவிட்டன. ஆனால், இதற்கு கொரோனா வைரஸ் பரிசோதனையில் குறிப்பிடத்தக்க வையில் ஏற்பட்ட குறைவு காரணம் அல்ல. நாடு முழுவதும் பரிசோதனை செய்யப்பட்டுள்ள மாதிரிகளின் எண்ணிக்கை செப்டம்பர் 2வது மற்றும் 3வது வாரத்தில் பரிசோதனை செய்யப்பட்டதற்கு சமமாக உள்ளது. இதில், தினமும் 90,000க்கு மேற்பட்ட தொற்றுகள் பதிவாகின்றன. இன்னும், கடந்த ஒரு வாரத்தில், ஒவ்வொரு நாளும் சராசரியாக 80,000க்கும் குறைவான புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டன.

இது மிகவும் வரவேற்கத்தக்க முன்னேற்றமாகத் தோன்றும். ஆனால், இந்த சரிவைச் சரியாகச் செய்வது எது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த நேரத்தில் மக்களின் நடமாட்டம் மற்றும் தொடர்புகள் அதிகரித்திருக்கும்; குறைந்திருக்காது. முகக் கவசங்களை அணிவது, தனிநபர் இடைவெளியை பின்பற்றுவது உலகளாவியதாக தடுப்பு நடவடிக்கைகளாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் நோய் பரவுதல், சீரோ கணக்கெடுப்பு முடிவுகளால் அளவிடப்படுகிறது. தொற்றுநோய் வீழ்ச்சியைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் அளவு எந்த இடத்தில் எட்டப்படும் என்பதைக் காட்டவில்லை.

பரிசோதனை எண்ணிக்கையும் நிலையானதாக இருப்பதால், தொற்று எண்ணிக்கை குறைவதற்கு வெளிப்படையான காரணம் எதுவும் இல்லை. இது ஒரு நாள் அல்லது இரண்டு பிறழ்வு அல்ல. ஆனால், இது ஒரு போக்காக கருதப்படுவதற்கு நீண்ட காலமாக நீடிக்க வேண்டும். உண்மையில், இந்தியாவில் இதுவரை தொற்றுநோய்களின் ஒப்பீட்டளவில் உறுதித் தன்மை மிக நீண்ட காலத்திற்கு எண்ணிக்கையில் ஒரு பெரிய சரிவு இல்லாத ஒரு முழு மாதமாக உள்ளது.

தினசரி கொரோனா தொற்று கண்டறிதல் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியின் விளைவாக, கடந்த சில நாட்களில் தொற்று வளர்ச்சி விகிதம் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுகள் ஒரு நாளைக்கு 1.28 சதவீதமாக மட்டுமே வளர்ந்து வருகின்றன. ஆந்திரா, தமிழ்நாடு, பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களின் வளர்ச்சி விகிதம் ஒரு நாளைக்கு 1 சதவீதத்திற்கும் குறைவாகவே காணப்படுகிறது.

உண்மையில், ஒப்பீட்டளவில் சிறிய அளவில் தொற்று எண்ணிக்கை கொண்டவை ஐந்து மாநிலங்கள் மட்டுமே உள்ளன. அவை இப்போது 2 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ந்து வருகின்றன. இதில் மிகவும் சிக்கலான மாநிலம் கேரளாதான். இப்போது தொற்று வளர்ச்சி விகிதம் ஒரு நாளைக்கு 4 சதவீதத்திற்கு மேல் உள்ளது. வெள்ளிக்கிழமை, அம்மாநிலத்தில் 9,200க்கும் மேற்பட்ட புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை சனிக்கிழமை 8,000க்கு கீழே வந்தது. மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவைத் தவிர வேறு எந்த மாநிலத்தையும் விட கடந்த ஒரு வாரத்தில் 53,000க்கும் மேற்பட்ட புதிய தொற்றுகளை அந்த மாநிலம் சேர்த்துள்ளது.

புனேவில் தொற்று எண்ணிக்கை இப்போது 3 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்த நகரத்தில் பெரும்பாலான மாநிலங்களை விட அதிகமான தொற்றுகள் உள்ளன. 5 மாநிலங்களில் மட்டுமே அதிக தொற்று எண்ணிக்கை உள்ளன. புனேவில் புதிய தொற்று கண்டறிதல்களும் ஒரு முக்கியமான சரிவைக் காட்டுகின்றன. இருப்பினும் புனே நகரத்தில் ஒவ்வொரு நாளும் 2,000 முதல் 3,000 தொற்றுகள் வரை பதிவாகியுள்ளது. ஆனால், இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்த நகரத்திலிருந்து 5,000க்கும் மேற்பட்ட தொற்றுகள் பதிவானதைக் கருத்தில்கொண்டால் இது ஒரு பெரிய முன்னேற்றம் ஆகும். இந்த சரிவு பரிசோதனைகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க குறைவு காரணம் இல்லை.

நாட்டில் சனிக்கிழமை 82,000க்கும் அதிகமானோர் தொற்றில் இருந்து மீண்டு வந்ததாக அறிவிக்கப்பட்டது, இது புதிய தொற்று கண்டறிதல் எண்ணிகையைவிட அதிகமாக இருந்தது. இதனால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை மேலும் வீழ்ச்சியடைந்தது. கடந்த இரண்டு வாரங்களில், நாட்டில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை சுமார் 80,000 ஆக குறைந்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 65.49 லட்சத்தை எட்டியுள்ளது. இதில் 55 லட்சத்துக்கும் அதிகமானோர் அல்லது சுமார் 84 சதவீதம் பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனா இறப்பு எண்ணிக்கை இப்போது 1.1 லட்சத்துக்கு மேல் உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Coronavirus india what is powering the drop in covid 19 cases

Next Story
கூட்டு வட்டியை மத்திய அரசே செலுத்தும்: இதில் வாடிக்கையாளர்களுக்கு என்ன லாபம்?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com