கொரோனா வைரஸ் பாதிப்பு: கோழி கறி சாப்பிடுவது பாதுகாப்பானதா?

COVID-19 Updates : பல இந்தியர்கள் சமூக ஊடகங்களில் வதந்திகள் மற்றும் தவறான தகவல்களை நம்பி கோழி கறி சாப்பிடுவதை நிறுத்திவிட்டனர். இது விலைகளில் சரிவுக்கு வழிவகுத்தது, கோழித் தொழிலுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது

Coronavirus Is chicken safe to eat covid 19
Coronavirus Is chicken safe to eat covid 19

Corona Virus: ஆம், இது முற்றிலும் பாதுகாப்பானது. எந்தவொரு விலங்கு அல்லது பறவையின் இறைச்சியை உட்கொள்வதற்கும், தொற்றுநோய் உண்டாவதற்கும் இடையே எந்த தொடர்பும் இருப்பதாக இதுவரை கண்டறியப்படவில்லை.

SARS-CoV-2 வைரஸ் தற்போது பரவி வருவதற்கு ஒரே காரணம், தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் இருமும் போதும். தும்மும் போதும் அதனால் வெளிப்படும் நீர்த்துளிகள் மூலம் வைரஸ் பரவுகிறது. இல்லையெனில் வைரஸ் பாதித்த இடங்களில் கை வைத்த பிறகு, அந்த கைகளால் நம் முகத்தையோ, வாயையோ அல்லது மூக்கையோ தொடும் போது வைரஸ் தொற்று ஏற்படுகிறது.

நாட்டின் 60% மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட வேண்டும் என பிரிட்டன் ஏன் எண்ணுகிறது?

இதனால்தான் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களும் வல்லுநர்களும் நெரிசலான இடங்களைத் தவிர்க்கவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை முழுமையாகவும் அடிக்கடி கழுவவும், உங்கள் முகத்தைத் தொடக்கூடாது என்று முயற்சி செய்யவும் சொல்கிறார்கள்.

பல இந்தியர்கள் சமூக ஊடகங்களில் வதந்திகள் மற்றும் தவறான தகவல்களை நம்பி கோழி கறி சாப்பிடுவதை நிறுத்திவிட்டனர். இது விலைகளில் சரிவுக்கு வழிவகுத்தது, கோழித் தொழிலுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மீன்வள மற்றும் கால்நடை பராமரிப்பு அமைச்சர் கிரிராஜ் சிங் இறைச்சி மற்றும் பால் பாதுகாப்பானது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார். “இந்த வணிகத்தில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகளை தவறான வதந்தி தாக்கியுள்ளது. இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வதந்திகளுக்கு இரையாக வேண்டாம் என்று நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் : இந்தியாவில் பரிசோதனை மையங்கள் போதுமானவையா?

எவ்வாறாயினும்,  “சமைக்கப்படாத இறைச்சிகளை” சாப்பிடுவதை WHO கடுமையாக எச்சரிக்கிறது. இது கூறுகிறது. அதாவது சமைக்கபடாத இறைச்சி, கொதிக்க வைக்கப்படாத பால், சமைக்கப்படாத விலங்குகளின் உறுப்புகளை கண்டிப்பாக உண்ணக் கூடாது என WHO எச்சரிக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Coronavirus is chicken safe to eat covid

Next Story
நாட்டின் 60% மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட வேண்டும் என பிரிட்டன் ஏன் எண்ணுகிறது?corona virus, covid 19
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com