கொரோனா பரவலில் வென்டிலேஷன் பங்கு: புதிய ஆய்வு கூறுவது என்ன?

கோவிட்-19 பரவுவதில் காற்றோட்டத்தின் பங்கை ஆய்வு செய்ய ஆராய்ச்சியாளர்கள் ஆர்வமாக உள்ளது ஏன்? காற்றோட்ட் அமைப்புகள் பற்றி சமீபத்திய ஆய்வுகள் கூறுவது என்ன? மோசமான காற்றோட்டம் நோய் பரவும் அபாயத்தை அதிகரிப்பது ஏன்?

By: Updated: October 4, 2020, 07:10:33 AM

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு, நவீன அலுவலக இடங்களில் பயன்படுத்தப்படும் காற்றோட்ட அமைப்புகள், அறையின் அனைத்து பகுதிகளிலும் நிலைமைகளை ஒரே மாதிரியாக வைத்திருக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. அவை வான்வழி அசுத்தங்களை இடம் முழுவதும் சமமாக பரப்புவதாக கண்டுபிடித்துள்ளனர். அவர்களின் கண்டுபிடிப்புகள் திரவ இயக்கவியல் இதழியில் வெளியிடப்பட்டுள்ளது.

COVID-19 பரவலில் காற்றோட்டத்தின் பங்கை ஆய்வு செய்ய ஆராய்ச்சியாளர்கள் ஆர்வமாக உள்ளது ஏன்?

COVID-19 விஷயத்தில் நோய்கள் பரவுவதில் காற்றோட்டத்தின் பங்கை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்கின்றனர். ஏனெனில் வைரஸ் பாதிப்பு ஏற்படும் அபாயத்தை மதிப்பிடுவது முக்கியம் என்று கருதப்படுகிறது. மோசமான காற்றோட்டமுள்ள இடங்கள் வைரஸ் பரவுவதை எளிதாக்குகின்றன என்பது இப்போது அனைவரும் அறிந்துள்ளனர். வைரஸ் பரவுவது வெளிப்புறத்தைவிட உட்புறத்தில் எளிதானது என்று நம்பப்படுகிறது.கடந்த வாரம், இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சிறிய ஏரோசல் துகள்களில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர்வாழ முடியும் என்பதைத் தீர்மானிக்க தங்கள் ஆராய்ச்சியைத் தொடங்கினர்.

காற்றோட்ட அமைப்புகள் (ventilation systems) பற்றி சமீபத்திய ஆய்வு கூறுவது என்ன?

இந்த வைரஸ் முதன்மையாக மக்கள் இருமும்போது, ​​சிரிக்கும்போது, ​​பேசும்போது, ​​சுவாசிக்கும்போது அல்லது தும்மும்போது வெளியேற்றப்படும், பெரிய நீர்த்துளிகள் மற்றும் சிறிய தூசுகள் மூலம் பரவுகிறது என்பதை இந்த ஆய்வு விளக்குகிறது. இது குறித்து ஆசிரியர்கள் குறிப்பிடுகையில், “வைரஸ் வெளிப்புறத்தில் பரவுவதைவிட உட்புறத்தில் பரவுவது அதிகமாக உள்ளது. அது நீண்ட வெளிப்பாட்டு நேரமும் குறைந்த அதிர்வு நிலையும் (சிதறல்) உட்புறத்தில் காணப்படுவதால் இருக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு கணிதம் மற்றும் தத்துவார்த்த இயற்பியல் துறையின் (டிஏஎம்டிபி) பேராசிரியர் பால் லிண்டன் ஒரு செய்திக்குறிப்பில், மூடிய இடங்களுக்குள், மக்கள் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றும்போது, வைரஸ் அதனுடன் எடுத்துச் செல்லப்படுகிறது. மேலும், காற்றோட்டம் வீசுவதன் மூலம் அறையைச் சுற்றி பரவுகிறது என்று கூறியுள்ளார்.

மோசமான காற்றோட்டம் நோய் பரவும் அபாயத்தை அதிகரிப்பது ஏன்?

போதுமான காற்றோட்டம் இல்லாத இடங்கள் கார்பன் டை ஆக்சைடு வாயு அதிக அடர்த்தியாக இருக்க வழிவகுக்கும். இதனால், வைரஸ் வெளிப்படும் அபாயம் அதிகரிக்கும்.

நோய் பரவுவதில் காற்றோட்டத்தின் பங்கு என்ன?

ஒரு அறையில் காற்றோட்டம், துவாரங்கள், கதவுகள், ஜன்னல்கள் மற்றும் மக்களால் வெளிப்படும் வெப்பத்தால் உருவாகும் வெப்பச்சலன பாய்ச்சல் மற்றும் ஒரு கட்டிடத்தில் வைக்கப்பட்ட உபகரணங்கள் ஆகியவற்றைப் பொறுத்து இருக்கும். மக்கள் நடமாட்டம் அல்லது மக்கள் பேசுதல், கதவுகள் திறப்பது மற்றும் மூடுதல், இயற்கையாகவே காற்றோட்டமான கட்டிடங்களுக்கான வெளிப்புற நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற பிற பல்வேறு விஷயங்கள் காற்றோட்டத்தை பாதிக்கின்றன. இதன் விளைவாக பரவும் ஆபத்து உள்ளது என்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த ஆய்வு காற்றோட்டத்தின் இரண்டு முறைகளைப் பற்றியும் பேசுகிறது. ஒன்று காற்றோட்டத்தை கலப்பது. இது மிகவும் பொதுவானது. இடம் முழுவதும் வெப்பநிலையை ஒரே மாதிரியாக வைத்திருக்க ஒரு இடத்தில் காற்று நன்கு கலந்திருக்கும் வகையில் துவாரங்களை வைப்பதை உள்ளடக்கியது. ஆனால், அசுத்தங்களும் அறை முழுவதும் சமமாக பரவுகின்றன என்பதும் இதன் பொருள்.

இரண்டாவது முறை இடப்பெயர்வு காற்றோட்டம் என்று அழைக்கப்படுகிறது. மேலும், இது அறையின் அடிப்பகுதியிலும் மேற்புறத்திலும் துவாரங்கள் வைப்பதை உள்ளடக்கியது. இது குளிரான கீழ் பகுதியையும் வெப்பமான மேல் பகுதியையும் உருவாக்குகிறது. இந்த சூடான காற்று அறையின் மேற்புறத்தில் வைக்கப்படும் துவாரங்களால் பிரித்தெடுக்கப்படுகிறது. வெளியேற்றப்படும் காற்றும் சூடாக இருப்பதால், இந்த காற்றோட்ட முறையைப் பயன்படுத்துவதால், வெளியேற்றப்படும் காற்றின் பெரும்பகுதி சூடான காற்றோடு கலந்துவிடுகிறது. எனவே, மற்றொரு நபரால் சுவாசிக்கப்படுவதைவிட அந்த காற்று மேல் துவாரங்களால் மேல் துவாரங்களால் பிரித்தெடுக்கப்படுகிறது.

இதற்கு பொருள் என்ன?

அறையில் காற்றோட்டம் அதிர்வுகளைக் கொண்டிருக்கின்றன என்பதை முடிவுகள் காட்டுகின்றன. மேலும், அறையில் இருப்பவர்களின் நடமாட்டம், காற்றொட்டத்தின் வகை, அறையின் கதவுகளைத் திறப்பது, மூடுவது, இயற்கையான் காற்றோட்டமுள்ள இடங்கள், வெளிப்புற நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றை பொறுத்து வியத்தகு முறையில் மாறலாம் என்று முடிவுகள் காட்டுகின்றன.

ஆராய்ச்சியாளர்கள், மூச்சு வெளியேவிடும்போது சுவாசத்தின் பரவலையும் நீர்த்துளிகள் பரவலையும் குறைப்பதில் முகக் கவசம் பயனுள்ளதாக உள்ளது என்று கண்டறிந்துள்ளனர்.

குறிப்பிடத்தக்க வகையில், ஒவ்வொரு முகக் கவச வகையிலும் மேற்புறங்களிலும் பக்கவாட்டிலும் ஒரு குறிப்பிட்ட அளவு கசிவு இருக்கும். ஆனாலும், வெளியேவிடும் மூச்சுக் காற்றின் அசுத்தங்களின் வேகத்தை குறைப்பதுதான் முக்கியம் என்பதால் அது பிரச்னை இல்லை. முகக்கவசம் தூசுகள் மற்றும் நீர்த்துளிகள் நேரடியாக பரவும் வாய்ப்புகளை குறைக்கிறது.

வெளியேவிடும் சுவாசத்தின் வேகத்தை தடுப்பது என்பது காற்றை கூரையை நோக்கி மேலே எடுத்துச் செல்வதை தடுப்பதாகும். மேலும் அவர்கள், சிரிப்பது, குறிப்பாக, ஒரு பெரிய தொந்தரவை உருவாக்குகிறது என்பதையும் கண்டறிந்துள்ளனர். முகக் கவசம் இல்லாமல் பாதிக்கப்பட்ட நபர் வீட்டிற்குள் சிரித்தால், அது பரவும் அபாயத்தை பெரிதும் அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Coronavirus new research role of ventilation systems in spreading covid

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X