இந்தியாவில் கொரோனா பரவல் விகிதம் கடந்தவாரத்தில் திடீர் சரிவு ஏன்?

India Coronavirus Cases Numbers : ஜூலை 1ம் தேதி 434 மரணங்கள் பதிவாகியுள்ளன. அதற்கு முந்தையநாள் 507 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதுவரை தேசிய அளவில் 17,834 மரணங்கள் பதிவாகியுள்ளன

By: Published: July 2, 2020, 3:41:25 PM

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஒருவாரத்தில் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் சமீபகாலமாக குறைந்து வருகிறது. கடந்த சிலவாரங்களாக அதிகரித்து வந்த இந்த வளர்ச்சி விகிதம், கடைசி 3 நாட்களாக குறைந்து வருகிறது. ஜூலை 1ம் தேதி நிலவரப்படி மிகவும் குறைந்த அளவாக 3.57 சதவீதமாக பதிவாகியுள்ளது.

ஜூன் 21ம் தேதி நிலவரப்படி, 20 நாட்களுக்கும் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு இரட்டிப்பு விகிதம், தற்போது 20 நாட்களுக்கு மேற்பட்டுள்ளது.
கடந்த 6 நாட்களாக, நாட்டில் நாள்தோறும் 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன. ஜூலை 1ம் தேதி மட்டும் புதிதாக 19,148 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்துள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6.04 லட்சமாக உள்ளது. இதில், 3.59 லட்சம் பேர் இந்த பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மட்டும் குறிப்பாக கோவா, மணிப்பூர், புதுச்சேரி, நாகாலாந்து, டாமன் மற்றும் டையூ, அந்தமான் உள்ளிட்ட இடங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளது. தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரபிரதேசம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு மிக அதிக அளவில் உள்ளது.

தலைநகர் டெல்லியில் கூட, கொரோனா பாதிப்பு, தேசிய சராசரியைவிட குறைவான அளவிலேயே உள்ளது.ஜூன் 23ம் தேதி மட்டும் அங்கு புதிய பாதிப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட 4 ஆயிரத்தை நெருங்கியிருந்தது. ஜூலை 1ம் தேதி, புதிதாக 2,442 தொற்று எண்ணிக்கை கண்டறியப்பட்டிருந்தது.
தமிழ்நாட்டில், கடந்த சிலநாட்களாக தினந்தோறும் 3,500 முதல் 4 ஆயிரம் வரையிலான புதிய பாதிப்புகள் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகின்றன.இரண்டு நாட்களுக்கு முன், தமிழ்நாடு, டெல்லியை முந்தி கொரோனா பாதிப்பு அதிகம் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளன. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94 ஆயிரத்தை கடந்துள்ளது.

 

தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் சமீபிகாலமாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவ்விரு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு விகிதம் 7 சதவீதத்தை கடந்துள்ளது. இதன்காரணமாக, அதிக பாதிப்பு உள்ள மாநிலங்களின் பட்டியலில் அவை நுழைந்துள்ளன. மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு மாநிலங்களை ஒப்பிடும்போது அசாம் மாநிலத்தில் தினந்தோறும் 1,200 முதல் 1,500 என்ற அளவில் உள்ளது.
கடந்த 2 வாரங்களில் மட்டும் 400க்கும் அதிகமான கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த மரணங்கள் பெரும்பாலும் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு மாநிலங்களிலேயே நிகழ்ந்துள்ளன.

ஜூலை 1ம் தேதி 434 மரணங்கள் பதிவாகியுள்ளன. அதற்கு முந்தையநாள் 507 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதுவரை தேசிய அளவில் 17,834 மரணங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் 853 மரணங்கள், மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் மற்றும் தமிழ்நாடு மாநிலங்களிலேயே நிகழ்ந்துள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க – India coronavirus numbers explained: How last week the growth rate slowed

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Explained News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Coronavirus numbers growth rate slow

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X