Advertisment

கொரோனா தொற்று: உலகின் உச்சபட்ச எண்ணிக்கையை தொட்ட இந்தியா

இந்தியா ஒரே நாளில் 70,000க்கும் அதிகமான தொற்றுகளைப் பதிவு செய்ததில்லை. அமெரிக்கா 4 சந்தர்ப்பங்களில் அந்த அளவை மீறி பதிவு செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
coronavirus, covid 19 news, india covid 19 cases, delhi coronavirus news, gujarat coronavirus, கொரோனா வைரஸ், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், டெல்லி, கேரளா, west bengal coronavirus, தெலங்கானா, karnataka coronavirus cases, andhra pradesh coronavirus news, கர்நாடகா, kerala, delhi, bihar, telangana

கொரோனா வைரஸ் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை புதன்கிழமை 75,000 க்கும் மேல் உயர்ந்தது. இது கொரோனா பரவல் தொடங்கியதிலிருந்து ஒரே நாளில் வேறு எந்த நாட்டையும்விட பதிவு செய்த மிக அதிக கொரோனா தொற்று எண்ணிக்கை ஆகும்.

Advertisment

புதிய தொற்றுகளில், 3 வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்த தேக்க நிலைக்குப் பிறகு பெரிய தாவல் ஏற்பட்டுள்ளது. இதனால், புதிய நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 60,000 முதல் 70,000 வரை இருந்தது. இந்த எண்ணிக்கை அளவில் தொற்றுப் பதிவு மிக நீண்ட நாள் இருந்தது. இது மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஒரே நாளில் மிக அதிகபட்ச கொரோனா தொற்று உயர்வால் இயக்கப்படுகிறது.

மகாராஷ்டிராவில் புதன்கிழமை 15,000 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. ஆந்திராவில் 11,000க்கும் குறைவான தொற்றுகள் பதிவாகியுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் 5,600 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. கேரளா மாநிலம் பதிவு செய்த அதன் மிக அதிகபட்ச ஒரு நாள் எண்ணிக்கையை 2,500க்கும் குறைவாக உள்ளது. கர்நாடகாவில் 8,500க்கும் மேற்பட்ட புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. இது அம்மாநிலத்தின் அதிகபட்ச ஒரு நாள் தொற்று பதிவுக்கு மிக அருகில் உள்ளது.

ஆகஸ்ட் மாதத்தின் பெரும்பகுதி, அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளை விட, இந்தியா உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான புதிய தொற்றுகளை பதிவு செய்து வருகிறது. இந்தியாவை விட பெரிய தொற்று எண்ணிக்கையில் தொற்றுகொளைக் கொண்ட இரண்டு நாடுகள் இவை மட்டுமே. ஆனால், அமெரிக்காவைப் போன்று இல்லாமல், இந்தியா ஒரே நாளில் 70,000க்கும் அதிகமான தொற்றுகளைப் பதிவு செய்ததில்லை. அமெரிக்கா 4 சந்தர்ப்பங்களில் அந்த அளவை மீறி பதிவு செய்துள்ளது. ஜூலை மாதத்தில் அது 74,000க்கும் அதிகமாக இருந்தது. இந்த மாதத்தில், அமெரிக்கா 50,000க்கும் குறைவான தொற்றுகளை பதிவு செய்து வருகிறது. இந்த எண்ணிக்கை கடந்த சில நாட்களில் சுமார் 35,000ஆக குறைந்துள்ளது.

இந்தியாவின் மக்கள் தொகை அமெரிக்காவை விட 4 மடங்கு அதிகம். பிரேசிலின் மக்கள்தொகையை விட 6 மடங்கு அதிகம். அதனால், புதன்கிழமை எட்டப்பட்ட தொற்று எண்ணிக்கை நிலை சில நாட்களுக்கு இந்தியாவுக்கு புதிய தொற்று எண்ணிக்கை இயல்பாக மாறும் என்பதில் ஆச்சரியமில்லை. இதை விட மேலே செல்லலாம்.

டெல்லி, கேரளா, தெலங்கானாவில் மீண்டும் தொற்று எழுச்சி காணப்படுவதாக தெரிகிறது. டெல்லியில் 1,600 க்கும் மேற்பட்ட புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. இது ஜூலை 11ம் தேதியில் இருந்து பதிவான அதிகபட்ச புதிய தொற்று எண்ணிக்கையாகும். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனையை இரட்டிப்பாக்கப்படும் என்றும் கிட்டத்தட்ட 40,000 ஆக அதிகரிக்கும் என்று கூறினார். இது குறுகிய காலத்தில், மீண்டும் தொற்று எண்ணிக்கை உயர வழிவகுக்கும். தெலங்கானா ஏற்கனவே அத்தகைய போக்கை கண்டு வருகிறது. அம்மாநில அரசு கடந்த ஒரு வாரத்தில், கொரோனா வைரஸ் பரிசோதனை எண்ணிக்கையை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கியுள்ளது. இதன் விளைவாக முன்பைவிட அதிக தொற்றுகளைக் கண்டறியத் தொடங்கியது. தெலங்கான புதன்கிழமை, சுமார் 2,800 புதிய தொற்றுகளைப் பதிவு செய்தது. சில நாட்களுக்கு முன்பு வரை, அம்மாநிலத்தில் 1,400 முதல் 1,800 வரை தொற்றுகள் பதிவாகியுள்ளன.

இதனிடையே, பீகாரில் நிலைமையை மதிப்பிடுவதற்காக மத்திய குழு ஒன்று பீகார் சென்றுள்ளது. ஒரு சிறிய மந்தநிலை ஏற்பட்டாலும், கடந்த சில வாரங்களில், கொரோனா தொற்று வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் ஒன்றாக பீகார் மாநிலம் இருந்தது. ஜூலை தொடக்கத்தில் 10,000க்கும் குறைவான தொற்று எண்ணிக்கையில் இருந்த பீகாரில், இப்போது தொற்று எண்ணிக்கை 1.26 லட்சத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. முக்கியமாக விரைவான ஆன்டிஜென் சோதனைகளை மாநில அரசு சார்ந்திருப்பதால் மத்தியக் குழு கவலை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.இதன் முடிவுகள் ஆர்.டி-பி.சி.ஆர் சோதனைகள் போல நம்பகமானவை அல்ல. மேலும், பீகாரில் உள்ள பெரும்பாலான கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். அங்கே கண்காணிப்பு மற்றும் நிறுவன கண்காணிப்பு தனிமைப்படுத்தலைப் போல கண்டிப்பாக இருக்க வாய்ப்பில்லை.

மத்திய அரசின் குழுக்கள் புதுச்சேரி மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கும் வந்து பார்வையிடுகின்றன. அங்கே நோய் பரவுவது அப்பகுதி பரப்பு மற்றும் மக்கள்தொகைக்கு பொருத்தமானதாக இல்லை. புதுச்சேரியில் கொரோனா வைரஸால் 12,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் கிட்டத்தட்ட 3,000 தொற்றுகள் உள்ளன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Coronavirus Kerala Telangana Delhi Bihar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment