Advertisment

கொரோனா வைரஸ்: வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதா? தவிர்ப்பதா ?

coronavirus outbreak : நீங்கள் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று நினைத்தால் , குறைந்தபட்சம் இன்னும் 10 நாட்களுக்கு காத்திருப்பது அவசியம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கொரோனா வைரஸ்: வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதா? தவிர்ப்பதா ?

Coronavirus outbreak :  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதி தீவிரம் அடைந்து வருகின்ற நிலையில், வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லலாமா வேண்டாமா என்பது போன்ற குழப்பங்கள் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.  நீங்கள் சீனா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, ஈரான் போன்ற நாடுகளுக்கு விடுமுறை பயணத்தை திட்டமிட்டிருந்தால் இதற்கு பதில் கட்டாயம் “தவிர்க்க வேண்டும்”என்பது தான். மேற்கூறிய, நான்கு நாடுகளுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு இந்திய அரசு குடிமக்களை அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து உலகத்திற்கு பரவியது. மற்ற நான்கு நாடுகள், கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

Advertisment

கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 6) நிலவரப்படி, உலகில் 1,00,600க்கும் மேற்பட்ட நபர்கள் நோய்வாய்ப் பட்டுள்ளனர். குறைந்தது 3,404 பேர் மரணம் அடைந்துள்ளனர்(உத்தியோகபூர்வ எண்ணிக்கை) .  இதில், 362 இறப்புகளைத் தவிர மற்ற அனைத்தும் சீன நாட்டில் நிகழ்ந்தது. இத்தாலி, ஈரான், தென் கொரியா,ஜப்பான் போன்ற நாடுகள் முறையே 148, 124, 42, 8 இறப்புகளைக் கண்டன.

COVID-19 வைரசால் பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளுக்கும் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு இந்திய அரசு ஆலோசனை வழங்கியுள்ளது.

தற்போது, கொரோனா வைரஸ் உலகில் 83 நாடுகளுக்கு பரவியுள்ளது. அண்டார்டிகா கண்டத்தை தவிர, வேறு எந்த கண்டத்திற்கும் நாம் பயணம் செய்ய முடியாது. அமெரிக்காவில் மட்டும் இதுவரை 231 மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக  கண்டறியப்பட்டுள்ளது.12 இறப்புகள் நிகழ்ந்துள்ளன.

Coronavirus outbreak: If you have planned a holiday abroad, should you cancel?

இந்த 80- நாடுகளைத் தவிர மற்ற நாடுகளைப் பற்றி என்ன?

உங்கள் திட்டம் கோடை விடுமுறை தான் என்றால், அதற்கு  இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன. அதற்குள் நிலைமை எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.  எவ்வாறாயினும், நாட்டிற்கு வெளியே எங்கும் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்ல யோசனை என்று அதிகாரிகள் பதிவு செய்து வருகின்றனர்.

" விமானத்தில், நீங்கள் பல நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் பயணம் செய்வீர்கள், அவர்களின் பயணம் மற்றும் தொடர்பு வரலாறுகள் உங்களுக்குத் தெரியாது. விமானத்தில் ஏறுவதற்கு முன்பு  யாருக்கும் ஸ்கிரீனிங் செய்யப்பட மாட்டாது. எனவே, உங்கள் அருகில் இருக்கும் ஒரு பயனர் ஏற்கனவே உடல்நிலை சரியில்லாதவரா? என்பதை உறுதியாக சொல்ல இயலாது”என்று என்சிடிசியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சுவாச மருத்துவ நிபுணரும், எய்ம்ஸ் இயக்குநருமான டாக்டர் ரன்தீப் குலேரியா கூறுகையில்“ஒப்பீட்டளவில் மட்டும் தற்போது சில நாடுகள் பாதுகாப்பானவை என்று கூறலாம்.  கடந்த இரண்டு-மூன்று வாரங்களில் இத்தாலி, தென் கொரியா போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் பரவுதலை பார்க்கும் பொழுது,  நோய்த்தொற்று குறித்து தற்போது எதுவும் இறுதியாக கூற முடியாது. நீங்கள் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று நினைத்தால் , குறைந்தபட்சம் இன்னும் 10 நாட்களுக்கு காத்திருப்பது அவசியம்” என்று தெரிவித்தார்.

இருப்பினும், இந்தியாவிற்குள் பயணம் செய்வது தற்போது வரை பாதுகாப்பானது தான்"  என்றும் டாக்டர் குலேரியா கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment