தற்போதைய கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலகட்டத்தில் இந்திய கம்பெனிகளை சந்தர்ப்பவசத்தால் வாங்குதல் / கையகப்படுத்துதலை தடுப்பதற்காக நடைமுறையில் உள்ள நேரடி அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில்(FDI) திருத்தம் செய்ய இந்திய அரசு பரிசீலனை செய்து வந்தது. அதன் தொடர்ச்சியாக,வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை இத்திருத்தம் தொடர்பான பத்திரிகைச் செய்தி எண் 3ஐ (2020 வரிசை) வெளியிட்டது.
மத்திய அரசு கடந்த சனிக்கிழமை வெளியிட்ட பத்திரிகைச் செய்தியில், " பத்தி 3.1.1(a) தடை செய்யப்பட்டுள்ள பிரிவுகள் / செயல்பாடுகள் தவிர ஏனையவற்றில் அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கைக்கு உட்பட்டு இந்தியாவில் வசிக்காத ஒருவர் இந்தியாவில் முதலீடு செய்யலாம். இந்தியாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொண்டிருக்கும் நாட்டில் உள்ள ஒருவர் அல்லது இந்தியாவில் முதலீடு செய்வதால் பலன் அடையும் உரிமையாளர் அத்தகைய ஏதாவது ஒரு நாட்டின் குடிமகனாக இருந்தால் அல்லது அங்கிருந்தால், அந்த நாட்டின் அரசு மூலமாகத்தான் முதலீடு செய்ய முடியும். மேலும் பாகிஸ்தான் குடிமகன் அல்லது பாகிஸ்தானில் செயல்படும் வரையறுக்கப்பட்ட ஒரு நிறுவனம் அரசு மூலமாக மட்டுமே முதலீடு செய்யமுடியும்"
பத்தி 3.1.1(b) இந்தியாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் செய்துள்ள அல்லது எதிர்காலத்தில் செய்ய இருக்கின்ற அந்நிய நேரடி முதலீட்டின் உரிமையை மாற்றித் தரும் போது, அதுவும் நேரடியாக அல்லது மறைமுகமாக மாற்றித் தரும்போது, பத்தி 3.1.1(a)வின் கட்டுப்பாடு / எல்லைக்கு உட்பட்டு பலன் பெறும் உரிமை அமையுமானால், அதைத் தொடர்ந்து அத்தகைய பலன் பெறும் உரிமையில் ஏற்படும் மாற்றத்துக்கு அரசு அனுமதி முக்கியமாகும் " என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதில், தனிப்பட்டு எந்த நாட்டின் பெயரையும் வெளிப்படையாக குறிப்பிடவில்லை என்றாலும், இந்த திருத்தங்களை சீன முதலீடுகளை நோக்கமாகக் கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
சீனாவின் மத்திய வங்கியான, 'சீன மக்கள் வங்கி' (பிபிஓசி) எச்டிஎஃப்சி நிறுவனத்தில் அதன் பங்குகளை 1 சதவீதமாக உயர்த்திய சில நாட்களுக்குப் பிறகு, இந்த அறிவிப்பு வெளியானது . எச்.டி.எஃப்.சி துணைத் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கெக்கி மிஸ்திரி கூறுகையில், சீன மக்கள் வங்கி ஏற்கனவே பங்குதாரராக இருந்து வருவதாகவும், மார்ச் 2019 நிலவரப்படி 0.8% உரிமைகளை வைத்திருந்ததாகவும்" தெரிவித்தார்.
2014ம் ஆண்டிற்குப் பிறகு, சீனாவின் அந்நிய நேரடி முதலீடு ஐந்து மடங்காக வளர்ச்சியடைந்தது . 2019 டிசம்பர் நிலவரப்படி, இந்தியாவில் அதன் ஒட்டுமொத்த முதலீடு 8 பில்லியன் டாலர்களை தாண்டியது. இந்தியாவுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் பிற நாடுகளின் முதலீடுகளை ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை “மிக அதிகம்” என்பது சீன அரசின் கருத்து, ப்ரூக்கிங்ஸ் இந்தியா செய்த மதிப்பீட்டில், இந்தியாவில் மொத்த நடப்பு மற்றும் திட்டமிடப்பட்ட சீன முதலீடு 26 பில்லியன் டாலருக்கும் அதிகமாக கணக்கிட்டிருந்தது.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
சீனாவின் பதில் என்ன? இந்த "பாரபட்சமான நடைமுறைகளை" அகற்றி , அனைத்து நாடுகளின் முதலீடுகளை சமமாக நடத்துமாறு இந்தியாவுக்கு சீனா கோரிக்கை வைத்துள்ளது. குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களுக்கு மட்டும் நிர்ணஇந்தியாவின் முடிவுயிக்கப்பட்ட கூடுதல் சுமைகளை வைப்பது, உலக வர்த்தக அமைப்பின் பாகுபாடு காட்டாத கொள்கையை மீறும் செயலாகும். தாராளமயமாக்கல், வர்த்தகம் மற்றும் முதலீட்டை எளிதாக்குவதற்கான பொதுவான போக்குக்கு எதிராக அமைந்துள்ளன. மேலும், ஜி 20 தலைவர்கள் மற்றும் வர்த்தக அமைச்சர்களின் ஒருமித்த கருத்துக்கு எதிராக இந்தியாவின் செயல் அமைந்துள்ளது,”என்று இந்தியாவில் உள்ள சீன தூதரக அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜி ரோங் கூறினார்.
சுதந்திரமான, நியாயமான, பாகுபாடற்ற, வெளிப்படையான, கணிக்கக்கூடிய மற்றும் நிலையான வர்த்தக மற்றும் முதலீட்டுச் சூழலை உருவாக்குவதை ஜி 20 நோக்கமாக கொண்டுள்ளது.
இந்தியாவின் வாதம் என்ன? இந்தக் கொள்கை எந்தவொரு நாட்டையும் இலக்காகக் கொண்டிருக்கவில்லை. தற்போதைய கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலகட்டத்தில், நெருக்கடி நிலைமையில் உள்ள இந்திய கம்பெனிகளை சந்தர்ப்பவசத்தால் வாங்குதல் / கையகப்படுத்துதலை தடுப்பதற்காக நடைமுறையில் உள்ள அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், " திருத்தங்கள் முதலீடுகளைத் தடை செய்யவில்லை. மாறாக, முதலீடுகளுக்கான ஒப்புதல் வழிமுறையை மட்டும் மாற்றியுள்ளது. இந்தியாவில், ஏற்கனவே பல துறைகள் அரசு மூலமாக மட்டுமே முதலீடு செய்யமுடியும் நிலையில் தான் இருந்தன." என்று கூறினார்.
இந்தியாவின் நடவடிக்கை பாரபட்சமானது என்று வாதாட ஏதேனும் காரணம் உள்ளதா?எல்லை நாடுகளுக்கு மட்டும் திருத்தங்கள் பொருந்தும் வகையில் இருப்பதை சில நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இதன் மூலம், நிறுவனம் எந்த நாட்டிலிருந்து முதலீடு செய்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு நடைமுறைகள் மாற்றப்படும். பாகுபாட்டிற்கான சாத்தியக் கூறுகள் இங்குதான் எழுகிறது, ”என்று வர்த்தக நிபுணர் ஒருவர் கூறினார்.
உள்நாட்டு முதலீடுகளில் இந்தியா பாகுபாடு காட்ட முடியும் என்றாலும், பாதுகாப்பு தொடர்பில்லாத காரணங்களைக் கொண்டு, சில நாடுகளுக்கு எதிரான பாகுபாடு உலக அரங்கில் சாதகமாகக் காணப்படாது," என்றும் தெரிவித்தார்.
உலக வணிக அமைப்பின் GATS ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள, பாகுபாடு இல்லாமை கடமைகளை மீறுவது குறித்து கூறப்பட்டுள்ளது. தங்கள் முதலீட்டு விதிமுறைகளை கடுமையாக்கும் போது அந்த முடிவு பெரும்பாலான பிற நாடுகளுக்கு ஒருமனதாக இருக்க வேண்டும். அதாவது,உலக வணிக அமைப்பின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பொருந்தும் வகையில் இருக்க வேண்டும்
இந்தியா இதற்கு முன் இவ்வாறு செய்துள்ளதா? சில நாடுகளுக்கு மட்டும் கூடுதல் சுமைகயை விதிக்கும் இந்த அசாதாரண நடவடிக்கை முன்னோடியில்லாதது. இதுவரை, சில குறிப்பிட்ட துறைகளில் இத்தகைய நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டதாக சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
உதாரணமாக, 2011 ஆம் ஆண்டு வரை மருந்து துறைகளில் ஆட்டோமேடிக் முறையின் கீழ் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டிருந்தாலும், அந்த ஆண்டு நவம்பர் முதல் இந்தத் துறைக்கு வரும் எந்தவொரு முதலீட்டிற்கும், அரசு ஒப்புதல் கட்டாய மாக்கப்பட்டதாக கைதன் அண்ட் கோ நிறுவனத்தின் பாண்டே கூறினார். அந்நிய நேரடி மூலம் இந்தியாவின் மருந்து கம்பெனிகளை சந்தர்ப்பவசத்தால் வாங்குதல் / கையகப்படுத்துதலை தடுப்பதற்காக இந்த முடிவை மேற்கொண்டதாக அப்போதைய அரசு தெரிவித்திருந்தது.
2014-ல் புதிய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், கொள்கை தாராளமயமாக்கப்பட்டது, ஆனால், இப்போதும் ஆட்டோமேடிக் முறையின் கீழ் நேரடி முதலீடு 74 சதவீதம் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவதாகும்,” கூறினார்.
ஜப்பான் புகையிலை தயாரிப்பு நிறுவனம் ஒன்று தனது இந்திய துணை நிறுவனத்தின் பங்குகளை 50 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்துவதாகஅறிவித்ததைத் தொடர்ந்து, 2010 ஆம் ஆண்டில் சிகரெட் உற்பத்தியில் அந்நிய நேரடி முதலீட்டை அரசாங்கம் தடை செய்ததாக சிங் மற்றும் அசோசியேட்ஸ் மூத்த பங்குதாரர் டெய்ஸி சாவ்லா தெரிவித்தார். கடந்த காலங்களில், சீனாவுடனான இருதரப்பு எல்லை மோதல்களின் போது, சில அந்நிய நேரடி முதலீடுகளை இந்தியா தடுத்து நிறுத்தியதாக பாண்டே தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.