பெருந்தொற்று முடிந்த பிறகு, கொரோனா வைரசின் எதிர்காலம் என்ன?

சமிபத்தில் 'சயின்ஸ்' எனும் நாளிதழில், மிகக் கடுமையான பெருந்தோற்று அலைக்குப் பின் என்னவெல்லாம்  நடக்கும் என்பது குறித்த ஆய்வக் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.

By: Updated: April 19, 2020, 04:19:36 PM

உலகெங்கிலும் கொரோனா வைரஸ் ஆபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. லட்சக்கணக்கான மக்கள் இன்னும்  தங்கள் வீடுகளில் தான் முடங்கி கிடக்கின்றனர். எனவே, பொது முடக்கத்தை எப்படி தளர்த்தலாம், எவ்வாறு இயல்பு நிலைக்கு திரும்பலாம் என்ற கேள்விக்கு எந்த உலக நாடுகளுக்கும் தெளிவான பதில் இல்லை.

தற்போதைய பெருந்தொற்றை கட்டுபடுத்தும் தடுப்பூசி நடைமுறைக்கு வர குறைந்தது 12-18 மாதங்கள் ஆகும் என்று கணிக்கப்படுகிறது.

எனினும், கொரோனா வைரஸ் பெருன்தொற்றுக்கு பிந்தைய காலம் எவ்வாறு இருக்கக்கூடும், எதிர் காலத்தில் ஏற்படும் பரவலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்தும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

சமிபத்தில் ‘சயின்ஸ்’ எனும் நாளிதழில், மிகக் கடுமையான கொரோன வைரஸ் பெருந்தோற்று அலைக்குப் பின், என்னவெல்லாம் நடக்க கூடலாம்  என்பது குறித்த ஆய்வக் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.

பெருந்தோற்றுக்கு பிந்தைய நிலை: ஆராய்ச்சிகள் கூறுவது  என்ன?

ஆராய்ச்சியாளர்கள் இரண்டு சாத்தியங்களைக் குறிப்பிட்டுள்ளனர். கோவிட்- 19 ( அல்லது கொரோனா வைரஸ்) நோய் தொற்றை ஏற்படுத்தும் SARS-CoV-2 வைரசை பொது சுகாதார நடவடிக்கைகள் மூலமாகவே ஒழிக்கப்படலாம் (போலியோ ஒழிப்பு போன்று).

SARS-CoV-2 வைரசின் மிக நெருக்கமான மரபணு உறவினர் என்று கருதப்படும் SARS-CoV-1 வைரஸ் பொது சுகாதார நடவடிக்கைகளின் மூலம் தான் ஒழிக்கப்பட்டது. எவ்வாறாயினும், பொது சுகாதார அதிகாரிகள் தற்போதைய சூழலில் இதை சாத்தியமானதாக கருதவில்லை.

மாறாக, இன்ஃப்ளூயன்ஸா தொற்று போலவே கொரோனா வைரஸ் பரவல் இருக்கக்கூடும் என்றும் கணிக்கப்படுகிறது. ஏனெனில், இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் முதலில் பெருந்தோற்றாக உருவெடுத்து, பிற்காலத்தில் பருவகால தொற்றாக மாறியது.

எனவே, வரும் காலங்களில் குளிர்காலத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்ச்சியாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புவதற்கு காரணம் உள்ளது.

 

 

பெருந்தோற்றுக்கு பிந்தைய காலங்களில் கொரோனா வைரஸ் பரவலை எது தீர்மானிக்கும்? 

பல்வேறு காரணிகளைப் பொருத்து பெருந்தோற்றுக்கு பிந்தைய கொரோனா வைரஸ் பரவல் தீர்மானிக்கப்படுகிறது.

முதலாவதாக, பருவக்காலம் மாற்றம் ஏற்படும் பொது கொரோனா வைரஸ் பரவலின் தன்மை மாறுபடுகிறதா? என்ற கேள்வி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

மேலும், விவரங்களுக்கு:

கோடை வெப்பம் கொரோனா வைரசை கொன்றுவிடுமா? சர்வதேச ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

அனல் வெயிலுக்கு அஞ்சுமா கொரோனா? நிபுணர் விளக்கம்

இரண்டாவதாக, கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பெறப்பட்ட நோயெதிர்ப்பு பொருள் (immunity) நம்மில் நிரந்தரமாக இருக்குமா? என்ற கேள்வி. இதுவரை இந்த கேள்விக்கான பதில் நிச்சயமற்றதாகவே உள்ளது.

அதாவது, கொரோனா வைரஸ் நோய் தொற்று மீண்டும் ஏற்படாத காலம் வரை, SARS-CoV-2 வைரசுக்கு எதிராக  நாம் பெற்ற நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் செயல்படும். உதாரணமாக, HCoV-OC43,HCoV-HKU1 போன்ற வைரஸ் தொற்றுக்கு எதிராக நாம் பெற்ற நோய் எதிர்ப்பு சக்திகள் மிகவும் குறுகிய காலம் மட்டும் செயல்பட்டன ( கிட்டதட்ட,  40 வாரங்கள்).  நாம் பெற்ற நோய் எதிர்ப்பு சக்தி குறுகிய காலமாக இருந்தால், வருடாந்திர கொரோனா வைரஸ் பரவலுக்கு வழிவகுக்கும்  என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். மறுபுறம், நோய் எதிர்ப்பு சக்தி நீண்ட காலத்திற்கு செயல்பட்டால் ( குறைந்தது , இரண்டு ஆண்டுகள்) இருபது ஆண்டுகளுக்கு ஒரு முறை நோய் தொற்றுக்கு வழிவகுக்கும்.

மூன்றாவதாக, SARS-CoV-2 மற்றும் பிற கொரோனா வைரஸ்களுக்கு இடையிலான, பிணைப்பு நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்கின்றனர். பிணைப்பு நோய் எதிர்ப்பு சக்தி என்பது ஒரு வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டா ஒருவர், பிற கொரோனா வைரஸிடம் இருந்து பாதுகாக்கப் படுவார். உதாரணமாக, SARS-CoV-1 நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர், HCoV-OC43-க்கு (சளிக்கு காரணம்) எதிராக நடுநிலைப்படுத்தும் நோய் எதிர்ப்பாற்றலை  உருவாக்க முடியும். இதேபோல், HCoV-OC43 நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர், SARS-CoV-1 வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்க உதவும்.

SARS-CoV-1, மெர்ஸ் (MERS) போன்ற  மற்ற கொரோனா வைரஸ்களுடன் ஒப்பிடும்போது, SARS-CoV-2  வைரஸ் வலு இல்லாததாக தோன்றினாலும், HCoV-OC43,  HCoV-HKU1  போனர் வைரஸ்களை விட மிகவும் கடுமையான ஒன்று. அறிகுறிகள் வெளிப்படும்  தொடக்க காலத்தில் இருந்தே,  இதன் பரவல் வேகம் அதிகமாக இருப்பதால், SARS-CoV-2 வைரஸைக் கட்டுபடுத்துவது மிகவும் கடினமாக அமைந்து விடுகிறது.

இறுதியாக, தற்போது நாம் எடுக்கும் நோய் தடுப்பு  நடவடிக்கைகளின் தீவிரத்தின் அடிப்படையில், கொரோனா வைரஸின் எதிர்காலப் பரவலை தீர்மானிக்கும்.

இந்த அனைத்துக் காரணிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, எதிர்காலங்களில் SARS-CoV-2  தொற்று பரவல் கணிசமாக  இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

SARS-CoV-2 வைரசில் இருந்து பெறப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி நீண்ட காலமாக இருந்தால், அடுத்த ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பின் கொரோனா வைரஸ் திறம்பட மறைந்துவிடும்.

அதே நேரத்தில், வைரஸிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறுகிய ( இரண்டு வருடம்) காலமாக மட்டும் இருந்து, HCoV-OC43, HCoV-HKU1 போன்றவைகளிடமிருந்து பெறப்பட்ட  நோய் எதிர்ப்பு சக்தி SARS-CoV-2 க்கு எதிராக ஓரளவு பிணைக்கப்பட்டிருந்தால், அடுத்த மூன்று வருட காலத்திற்கு கொரோனா வைரஸ் பரவலை அகற்றலாம். 2024ம் ஆண்டில் கொரோனா வைரஸ் தொற்று தலை தூக்க வாய்ப்புள்ளது.

கொரோனா பெருந்த்தொற்றின் பிந்தைய பரவல் இயக்கவியல் பற்றி பொருட்படுத்தாமல், தற்போதைய நெருக்கடிக்கு அவசர நடவடிக்கைகளின் தேவைகள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர். தடுப்பூசிக்கு ஒரு வருடக்காலம் தேவைப்படுவதால், சமூக விலகல், முகக்கவசம் போன்ற  மருந்து அல்லாத தலையீடுகள் (NPI ) நடைமுறைப்படுத்தவும் வேண்டுக் கொள்கின்றனர்.

சமூக விலகல் நெறிமுறைகள் நீக்கப்பட்டவுடன் நோய்த்தொற்று மீண்டும் எழும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. இருப்பினும், நீண்ட நாள் தொடரும் கடுமையான ஊரடங்கு, நோய் தொற்றின் உச்ச அளவை குறைக்கும் என்பதை  எப்போதும் உறுதிபடுத்த முடியாது என்றும் குறிப்பிடுகின்றனர்.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

சுகாதார கட்டமைப்பை பலமாக்குவது, நாட்டின் நோய் பராமரிப்பு திறனை  உறுதிசெய்வது, கூடுதல் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை  நடைமுறைப்படுத்துவது போன்ற அடிப்படை முன்னிரிமைகள் மூலம் கொரோனா வைரஸ்  பெருந்த்தொற்றை குறைக்க முடியும்,” என்றும்  ஆராய்ச்சியாளர்கள் தெரிவிகின்றனர்.

2025 ஆம் ஆண்டின் பிற்பகுதிக்குப் பிறகும் கொரோனா வைரஸ் நோய் தொற்றின் எழுச்சிக்கு வாய்ப்பிருப்பதால், இடைப்பட்ட சமூக விலகலை திறம்பட செயல்படுத்த குறுகிய காலத்திற்குள் “பரவலான கண்காணிப்பு” தேவைப்படுகிறது என்றும் கருதுகின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Coronavirus post pandemic possibilities what the research states

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X