/tamil-ie/media/media_files/uploads/2020/04/image-62.jpg)
சீனாவில் இருந்து பெறப்பட்ட ரேபிட் ஆன்டிபாடி பரிசோதனை உபகரணங்களில் புகார்கள் எழுந்ததும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கள நிலவர அடிப்படையில் தரச்சோதனை மேற்கொண்டது. அதன் அடிப்படையில், உபகரணங்களின் செயல்பாடு குறித்த அறிவியல் மதிப்பீட்டின் அடிப்படையில், அவை சரியாகச் செயல்படாதது கண்டறியப்பட்டதும், அவற்றை வாங்குவதற்கான ஆர்டர் ரத்து செய்யப்பட்டதாக நேற்று அறிவித்தது.
எனவே, ரேபிட் ஆன்டிபாடி பரிசோதனை என்றால் என்ன? உலகளவில் அதன் பயன்பாடுகள் எப்படி உள்ளன? என்பதை இங்கே காணலாம்.
வழக்கமான பிடி-பிசிஆர் பரிசோதனை: தொண்டையிலிருந்து அல்லது மூக்கிலிருந்து எடுக்கப்படும் மாதிரியில் வைரஸில், ஆர்என்ஏ உள்ளதா என்பதை கண்டறிவதற்காக இந்த பரிசோதனை நடத்தப்படுகிறது. சேகரிக்கப்பட்ட மாதிரி, இதற்கென குறிப்பிடப்பட்ட சூழல்களில், வைரல் போக்குவரத்து மீடியம் மூலமாக சோதனைக் கூடத்திற்கு எடுத்துச் செல்லப்படும். ஆய்வகம் அனுப்பும் வரை பல தடங்கள் உள்ளதால் அதில் நெகட்டிவ் வர வாய்ப்பு உண்டு.
ஆர்என்ஏ-க்களை, தரம் குறையாமல் பிரித்தெடுப்பது பிசிஆர் பரிசோதனையின் முக்கிய நோக்கமாகும். ஆய்வக வசதி இந்தியாவில் குறைவாக இருப்பதாலும், ஆய்வுகாலம் அதிகமாக இருப்பதாலும், கொரோனா தொற்று அறிகுறியை வெளிபடுத்தும் மக்களுக்கு மட்டும் இந்த பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது.
ரேபிட் ஆன்டிபாடி பரிசோதனை : தனிநபர்களில் ஆன்டிபாடிகள் உருவாவதைக் கண்டுபிடிப்பதற்கு, இந்த பரிசோதனை தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இரண்டு நடைமுறைகளுக்கும் இடையிலான வேறுபாடு என்னவென்றால், ஆர்டி-பிசிஆர் சோதனை மூலம் நோயாளியின் மாதிரியில் இருந்து வைரஸ் நேரடியாக அடையாளம் காணப்படுகிறது. அதே நேரத்தில், ரேபிட் ஆன்டிபாடி சோதனைகள், வைரசை எதிர்த்து உருவாகிய ஆன்டிபாடிகளை கண்டறிவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எனவே, ஐ.சி.எம்.ஆர் குறிப்பிட்டுள்ளபடி,கோவிட் 19 தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிய பயன்படுத்தப்படும் பரிசோதனை முறைக்கு மாற்றாக, இந்த சோதனையைப் பயன்படுத்தப்பட முடியாது.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் எனும் ஆய்வு நிறுவனத்தின் கூற்றுப்படி,“ செராலஜி சோதனைகள் ஒரு குறிப்பிட்ட நோய்க்கிருமி நமது உடம்பை தாக்கியுள்ளதா? என்பதை கண்டறியும் ஒரு வகையான இரத்தப் பரிசோதனையாகும். செரோலஜி அடிப்படையிலான சோதனைகள் முழு இரத்தத்தின் சீரம் கூறுகளை பகுப்பாய்வு செய்கின்றன. நோய்க்கிருமிகளின் குறிப்பிட்ட கூறுகளாக கருதப்படும் ஆன்டிஜென்களை சீரம் தன்னகத்தே வைத்துக்கொள்கிறது. நமது நோயெதிர்ப்பு மண்டலம் இந்த ஆன்டிஜென்களை ஒரு அந்நியராக அங்கீகரிக்கப்பட்டு, நமது நோய் எதிர்ப்பு சக்தியால் குறிவைக்கப்படுகின்றன " என்று தெரிவித்துள்ளது.
வேறு ஏதேனும் ரேபிட் சோதனை வகைகள் உள்ளனவா?
பாயிண்ட் ஆஃப் கேர் இம்யூனோடயாக்னாஸ்டிக் சோதனைகள் (point of care immunodiagnostic tests ) என்றும் அழைக்கப்படும் பல ரேபிட் சோதனைகள் வைரஸின் இருப்பை நேரடியாக கண்டறிய முயற்சிக்கிறது. மேலும், இந்த வகை ரேபிட் சோதனைகள் குறிப்பாக, சார்ஸ்- கோவ் - 2 வைரஸ் வெளிபடுத்தும் புரதங்களை அடையாளம் காண்கின்றன. புரதங்கள் கண்டறியப்படுவதன் மூலம், கொரோனா வைரசின் இருத்தல் யூகிக்கப்படுகிறது.
கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி," தொற்றுக்குப் பிறகு, குறைந்தது ஒரு வார காலம் வரை ஆன்டிபாடிகள் உருவாகின்றன. நோய் வாய்ப்பட்டவரின் வயது, சுகாதார நிலை, நோயின் தீவிரம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை சிதைக்கும் எச்.ஐ.வி நோய் போன்ற சில காரணிகளைப் பொறுத்து உடலின் உருவாகும் ஆன்டிபாடிகளின் எதிர்ப்பு தன்மைகள் நிலைக்கும். கோவிட்-19 நோய் தொற்று உள்ள ஒரு சிலருக்கு, ஆன்டிபாடிகள் பலவீனமானதாகவும், தாமதமாகவும், எதிர்பைக் காட்டமாலும் இருக்கலாம். அத்தகைய நோயாளிகளுக்கு பிசிஆர் பரிசோதனை மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது.
ரேபிட் ஆன்டிபாடி பரிசோதனையில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன ?
இந்தியாவின் கேரளா மாநிலம் ரேபிட் ஆன்டிபாடி பரிசோதனையை பயன்படுத்துவதாக முதலில் அறிவித்தது. தமிழ்நாடு,சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள் "தென் கொரியா-சீனா " வழியில் ரேபிட் பரிசோதனையை முயற்சிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு அழுத்தம் கொடுத்து வந்தன. இந்த மாதம் முதல் வாரத்தில், இந்த பரிசோதனை முயற்சிக்கு ஒப்புதல் கொடுத்தன. ஏப்ரல் 4 ம் தேதி, கிளஸ்டர் பகுதிகளிலும் (கட்டுப்பாட்டு மண்டலங்கள்) அதிகளவில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கவைக்கப்பட்ட மையங்களிலும் ரேபிட் பரிசோதனைகளைப் பயன்படுத்தலாம் என்று தெரிவித்தது.
இருப்பினும், ரேபிட் ஆன்டிபாடி சோதனை கருவிகள் தொடர்பாக மாநிலங்களிலிருந்து புகார்கள் வர ஆரம்பித்ததையடுத்து, கள நிலவர அடிப்படையில் தரசோதனை மேற் கொள்ள இருப்பதாகவும், மாநிலங்கள் தற்காலிகமாக பரிசோதனைகளை நிறுத்தி வைக்குமாறும் ஐசிஎம்ஆர் கேட்டுக்கொண்டது.
டாக்டர் ஆர்.ஆர்.கங்ககேத்கர் கூறுகையில் “செராலஜிக்கல் பரிசோதனையில் எங்களுக்கு ஏற்பட்ட புகார்கள் வந்தன. பி.சி.ஆர் பரிசோதனையில் மூலம் ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ரேபிட் பரிசோதனையில், துல்லியம் 6% முதல் 71% வரையில் தான் இருந்தது. முதல் தலைமுறை கருவிகள் என்றாலும், வேறுபாடுகளை புறக்கணிக்க முடியாது" என்று தெரிவித்தார்.
ரேபிட் சோதனை கருவிகள் உலகளவில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது? ரேபிட் ஆன்ட்டிபாடி பரிசோதனை பயன்படுத்திய முதல் நாடு சிங்கப்பூர். எனினும், இந்த பரிசோதனையை சிறந்த முறையில் பயன்படுத்தியதற்கு தென் கொரிய நாட்டை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். பரவலைக் கட்டுபடுத்தும் விதமாக, செரோலாஜிக்கல் சோதனையை அந்நாடு தீவிரமாக்கியது. சார்ஸ், மெர்ஸ் போன்ற நோய் தாக்குதலின் போது பெற்ற அனுபவத்தால், நோய் தடுப்பு நடவடிக்கையில் பரிசோதனையை முதன்மைப் படுத்தியது. பரிசோதனை உபகரணங்களைத் தாண்டி,தொற்றின் ஆரம்ப காலத்தில் மருத்துவமனை உள்கட்டமைப்பு வசதியில் அதிக கவனம் செலுத்தியதன் விளைவாக தென்கொரியா நோய் தொற்றில் இருந்து வெற்றிகரமாக மீண்டதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் .
தென் கொரியாவின் 31-வது நோயாளி, 1,100 மக்களுடன் தொடர்பில் இருந்தார் என்ற செய்தி வெளியானதும், மக்கள் கூட்டத்தால் டேகு நகரில் இருந்த மருத்துவமனைகள் அனைத்தும் முடங்கும் சூழல் உருவாகியது. ஆனால், அப்போதும் கூட மருத்துவமனையில் சேர்க்கை விகிதங்கள் அதிகமாகவே இருந்தன.
உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட விரைவான அறிக்கையில், “கண்காணிப்பதற்கான ஒரு கருவியாக மட்டுமே, பெரும்பாலும் இந்த ஆன்டிபாடி ராப்பிட் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.