Advertisment

R0 குறியீடு என்றால் என்ன? கொரோனா வைரஸ் பாதிப்பை இதன்மூலம் அளவிட முடியுமா?.

நோய் பரவல் என்பதை நாம் வரையறுத்துவிட இயலாது. ஆனால் இதன் விகிதத்தை தடுப்பு மருந்துகளின் மூலமாகவோ அல்லது பரிசோதனை உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளின் மூலமாக குறைக்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus, r0 term explained, coronavirus latest update, coronavirus latest news, coronavirus transmission rate india, coronavirus global transmission rate, coronavirus reproduction number india, indian express, india coronavirus cases, indian express, coronavirus tamil news, coronavirus tamil nadu news, coronavirus chennai news, coronavirus Tamil nadu, coronavirus outbreak

coronavirus, r0 term explained, coronavirus latest update, coronavirus latest news, coronavirus transmission rate india, coronavirus global transmission rate, coronavirus reproduction number india, indian express, india coronavirus cases, indian express, coronavirus tamil news, coronavirus tamil nadu news, coronavirus chennai news, coronavirus Tamil nadu, coronavirus outbreak

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால், சர்வதேச அளவில் பல பில்லியன் அளவிலான மக்கள் தங்களது வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். ஆராய்ச்சியாளர்களும், இந்த வைரஸ் பாதிப்பு குறித்த ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

கொரோனா வைரஸ் தொற்று குறித்த பல்வேறு ஆய்வுத்தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த தகவல்களை அடிப்படையாக கொண்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பல்வேறு நாடுகளில் மக்களை பாதுகாக்க அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்க உதவும்.

இந்த ஆய்வுகளில், கணித குறியீடான R0 என்பது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் R0 என்பது, வைரஸ் தொற்று பரவலின் விகிதத்தை குறிக்கிறது. இந்த குறியீடு மிகமுக்கியமானதாக கருதப்படுகிறது.

கொரோனா வைரஸ் : R0 அல்லது இனப்பெருக்க எண் என்றால் என்ன ?

R0 - வைரஸ் பரவும் விகிதம் ஆகும்

R0 என்பது அடிப்படை இனப்பெருக்க எண் என்றும் அழைக்கப்படுகிறது. தொற்று உள்ள நபரிடமிருந்து மற்றவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று பரவும் விகிதம் ஆகும்.

R0 என்பது தொற்று பாதிப்பு உள்ள நபர்களுக்கும், புதிய தொற்று ஏற்பட்ட நபர்களுக்கும் இடையே உள்ள விகிதம் ஆகும். இதை தொற்று பரவும் காலத்தில் ஏற்பட்ட புதிய தொற்றுக்களின் சராசரி என்றும் அழைக்கலாம்

R0 = புதிய தொற்று/ தொற்று பாதிப்பு

 

publive-image

ஒவ்வொரு வைரசிற்கும் ஒவ்வொரு பரவல் மற்றும் பாதிப்பு காலம் மாறுபடும். சில வைரஸ்களின் பாதிப்பு மற்றும் பரவல் காலம் சில வாரங்கள், சில மாதங்கள் ஏன் சில ஆண்டுகள் வரைகூட நீடிக்கும்.

வைரஸ் பாதிப்பு மக்களிடையே பரவுகின்றது என்றால், அம்மக்களுக்கு மந்தை நோய் எதிர்ப்பு சக்தி அல்லது நோய் தடுப்பு சக்தி இல்லாததே காரணமாக சொல்லப்படுகிறது.

இதை சுருக்கமாக குறிப்பிட வேண்டுமென்றால், நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 2 நாட்களில் 4 லிருந்து 8 ஆக அதிகரித்தால், அடுத்த 2 நாட்களில் இதன் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்தால், இதன் R0 மதிப்பு 2 ஆக கணக்கில் கொள்ளப்படும்.

இந்த R0 மதிப்பு அதிகரிக்க, வைரஸ் தொற்றின் பாதிப்பு அதிகரிப்பதாக அர்த்தம்.

R0 மதிப்பு 1 எனில், தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நிலையானது. அதாவது பாதிப்பிலிருந்து ஒருவர் குணமடைந்திருப்பார் அல்லது அவர் மரணம் அடைந்திருப்பார். அப்போது புதிதாக ஒருவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.

publive-image

எனவே, இந்த R0 மதிப்பு 1 பட்டியலின் கீழ் இடத்தில் உள்ளது. இந்த பிரிவில், தொற்று மிக குறைந்த அளவிற்கே ஏற்பட்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட காலம் வரை இந்த விகிதம் பேணப்பட்டு, பின் அந்த வைரஸ் தொற்று காணாமல் போய்விடும்.

நோய் பரவல் என்பதை நாம் வரையறுத்துவிட இயலாது. ஆனால் இதன் விகிதத்தை தடுப்பு மருந்துகளின் மூலமாகவோ அல்லது பரிசோதனை உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளின் மூலமாக குறைக்கலாம்.

நோய் தொற்று பரவலின் விகிதத்தை Rt என்று குறிப்பிடுகிறோம். இதில் t என்பது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படும் சரியான பரவல் விகிதம் என்று குறிப்பிடப்படுகிறது.

இந்த நடைமுறைகளின் அடிப்படையில் தான் கடந்த காலங்களில் போலீஸ் மற்றும் பெரியம்மை நோய்கள் ஒழிக்கப்பட்டன.

கொரோனா வைரஸ் பாதிப்பின் R0 மதிப்பு என்ன?

கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் நிகழ்ந்த பின்னரும் இதுகுறித்த தீர்க்கமான முடிவுக்கு வர இயலவில்லை. உலக சுகாதார நிறுவனம், கொரோனா வைரசின் R0 மதிப்பு 1.4 முதல் 2.5 ஆக வரையறுத்துள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் தான் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு முதன்முதலாக தோன்றியது. அங்கு உடனடியாக மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இந்த வைரசின் தொற்று பரவல் விகிதம் (Rt) 0.3 ஆக குறைந்தது. புதிய தொற்று ஏற்படுவது கட்டுப்படுத்தப்பட்டதால், அங்கு இயல்புநிலை திரும்பியதை அடுத்து, கடந்த ஏப்ரல் 8ம் தேதி முதல் அங்கு தடையுத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் வுஹான் நகரம், கொரோனா பாதிப்பு நடவடிக்கைகளின் போது மேற்கொண்ட வழிமுறைகளையே சர்வதேச நாடுகளும் பின்பற்ற துவங்கியுள்ளன. தற்போதைய நிலையில், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஊரடங்கு உத்தரவு நிலை நீக்கப்பட்டால், வைரஸ் தொற்று மீண்டும் அதிகளவில் ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Corona Virus Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment