கோவிட் -19 தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 100 நோயாளிகளில் ஒருவருக்கு நியூமோதோரக்ஸ் ஏற்படுகிறது என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, நுரையீரலில் ஓட்டை ஏற்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஒரு டயரின் உள்ளே இருக்கும் டியூப்பில் நடப்பது போலவே, நுரையீரலுக்கு ஏற்படும் பாதிப்பு ஒரு ஓட்டை ஏற்படுவதற்கு வழிவகுக்கும். ஓட்டையில் இருந்து காற்று வெளியேறும்போது, அது நுரையீரல் மற்றும் மார்புக்கு இடையிலான பள்ளத்தில் உருவாகிறது. மேலும் அது நுரையீரல் செயலிழப்பதற்கும் காரணமாகிறது.
இது பொதுவாக மிக உயரமான இளைஞர்கள் அல்லது வயதான நோயாளிகளை பாதிக்கிறது.
கோவிட் -19 நோயாளிகள் இந்த இரண்டு வகைகளைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஆனால், அவர்களுக்கு நுரையீரல் ஓட்டை ஏற்பட்டிருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கவனித்தனர்.
16 மருத்துவமனைகளில் இருந்து பெறப்பட்ட தரவுகளில் இந்த நிகழ்வு 0.91 சதவீதம் இருப்பதாக தெரியவந்துள்ளது. மூன்றில் இரண்டு பங்கு (63 சதவீதம்) நோயாளிகளுக்கு நுரையீரல் ஓட்டை பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
ஆதாரம்: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"