/tamil-ie/media/media_files/uploads/2020/08/template-2020-08-17T151343.887.jpg)
கொரோனா தொற்று பாதிப்பு, சர்வதேச நாடுகளில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரஷ்யா, கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்தது மட்டுமல்லாமல், அதை வெற்றிகரமாக சோதித்தும் பார்த்தது. இந்நிலையில், மாஸ்கோவின் கமாலியா இன்ஸ்ட்டியூட் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து சோதனை வெற்றி பெற்றுள்ளதால், விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக ராய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மருந்து செப்டம்பர் மாதவாக்கிலேயே, பொதுமக்களுக்கு கிடைக்கும், அக்டோபர் மாதங்களில் பெரும்பாலானோருக்கு இந்த மருந்து கிடைத்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரஷ்யா, இந்த ஆகஸ்ட் மாத இறுதியிலேயே, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மருந்து என்று அறிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷ்யா, கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தது என்ற அறிவிப்பு வெளியான நாள் முதல் சர்வதேச நாடுகள் அந்த மருந்து தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை எழுப்பின. ரஷ்யா கண்டுபிடித்த மருந்து 3ம் கட்ட சோதனைக்கு உட்படுத்தப்படாமலேயே, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மற்ற நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.
ரஷ்யா, இந்த மருந்துக்கான முதல் மற்றும் இரண்டாம்கட்ட சோதனைகளை மிக குறுகிய காலத்திலேயே நடத்தி முடித்துள்ளது. புதிய மருந்துக்கான சோதனை வழக்கமாக பல மாதங்கள், பல ஆண்டுகள் வரை நடைபெற்று வரும் நிலையில், 2 மாதங்களுக்குள்ளாகவே, ரஷ்யா சோதனையை நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சோதனையில் இதுவரை
160 பேருக்கு சோதனைக்கு முந்தைய நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன
இவர்களில் 29 பேர் சோதனைக்குட்பட்டுத்தப்பட்டுள்ளனர்
3ம் கட்ட சோதனைக்காக 6 பேர் இறுதிக்கட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இந்த சோதனைக்கு குறைந்தது 8 பேர் உட்படுத்தப்பட உள்ளனர்.
(As on August 13; source: WHO Coronavirus vaccine landscape of August 13, 2020)
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.