இந்தியாவின் பிற பகுதிகளைக் காட்டிலும் கொரோனா ஆபத்து குறைவாக உள்ள பகுதியாக வடகிழக்கு இந்தியா உள்ளது. இருப்பினும், நேற்று வடகிழக்கு மாநிலங்கள் கொரோனா பரவல் எண்ணிக்கையில் ஒரு எழுச்சியைப் சந்தித்தது.
திரிபுரா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.அதே நேரத்தில், அருணாச்சல பிரதேசத்தின் நோய்த் தொற்று எண்ணிக்கை 4-ல் இருந்து 20 ஆகவும், மணிப்பூரின் எண்ணிக்கை 78-ல் இருந்து 83 ஆகவும் அதிகரித்தது.
வடகிழக்கு இந்தியாவில் கொரோனா நோய் பரவலில் அசாம், திரிபுரா ஆகிய மாநிலங்கள் அதிகம் பாதிப்படைந்துள்ளன. உண்மையில், தற்போது நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் ஒன்றாக அஸ்ஸாம் உள்ளது. கடந்த ஒரு வாரத்தில், அதன் மொத்த எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. மே-25ல் 526 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 1464 ஆக அதிகரித்துள்ளது. கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலம் சமீபத்திய நாட்களில் 4.5 ஆக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், மாநிலத்தில் 192 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது./tamil-ie/media/media_files/uploads/2020/06/tamilnadu-explained.png)
ஆரம்ப காலகட்டத்தில் திரிபுரா மாநிலத்தில் கொரோனா தொற்று தலாய் மாவட்டத்தில் செயல்படும் பி.எஸ்.எஃப் முகாமில் பணியிலிருந்த 150 க்கும் மேற்பட்ட மத்திய ஆயுதக் காவல் படையினர் (Central Armed Police Forces - CAPF) இடையே தொற்று எண்ணிக்கை அதிகரித்தது. இருப்பினும், தற்போது கண்டறியப்படும் புதிய பாதிப்புகள் பெரும்பாலும் புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் ஏற்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாநிலத்தின் மொத்த பாதிப்பு தற்போது 418 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும், அங்கு 220 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
நேற்று நாகாலாந்து மாநிலத்தில் ஆறு பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதையடுத்து, மாநிலத்தின் மொத்த பாதிப்பு 49 ஆக அதிகரித்துள்ள்ளது. நேற்று, ஒரே ஒரு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட மேகாலயா மாநிலத்தின் மொத்த எண்ணிக்கை 28-க உயர்ந்துள்ளது. மிசோரம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 1-க உள்ளது.
கடந்த நான்கு நாட்களாக 1,000 க்கும் அதிகமான கொரோனா பாதிப்புகளை உறுதி செய்த புதுடெல்லி, நேற்று 990 பேருக்கு கொரோனா ஆபத்தைக் கண்டறிந்தது. டெல்லியின் கொரோனா பாதிப்புகள் 20,000-ஐத் தாண்டிய நிலையில், இறப்பு எண்ணிக்கையும் வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், டெல்லியில் 50 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர்.
நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த பாதிப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட 2 லட்சத்தை எட்டியுள்ளது. கொரோனா தொற்று பரவலில் அதகப் பாதிப்டைந்த ஏழாவது நாடாக இந்தியா உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8,000க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.